For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எதிர்ப்பு சக்தியை பருவக்காலங்களில் இருமடங்காக்க வேண்டுமா...?அதற்கு இதை சாப்பிட்டாலே போதும்...

|

பெரும்பாலான நோய்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது எதிர்ப்பு சக்தி குறைவுதான். உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் புற்றுநோய் முதல் இதய நோய்கள் வரை வரிசை கட்டி கொண்டு வர தொடங்கும். எதிர்ப்பு சக்தியை கூட்ட வைட்டமின் மாத்திரைகள், இரும்புசத்து மாத்திரைகள் போன்றவற்றை தினமும் சாப்பிட்டு கொண்டே வருகின்றோம்.

குறிப்பாக பருவ காலம் வந்து விட்டால், அவ்வளவுதான். உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்களின் தாக்கம் அதிகம் ஆகிவிடும். பருவ காலங்களில் எதிர்ப்பு சக்தியை கூட்டி எந்த வித நோய்களுக்கும் ஆட்படாமல் இருக்க இந்த பதிவில் கூறும் உணவு முறையை பின்பற்றினாலே போதும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் எதிர்ப்பு சக்தி குறைகிறது..?

ஏன் எதிர்ப்பு சக்தி குறைகிறது..?

ஒருவர் நீண்ட நாள் நோயின்றி இருக்க அவருக்கு உதவும் காரணிகளில் முதன்மையானது இந்த நோய் எதிர்ப்பு சக்தி தான். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு பலவித காரணங்கள் உள்ளன. முக்கியமாக ஆரோக்கியமற்ற உணவுகள், சத்தற்ற தாய்ப்பால், பரம்பரை ரீதியான பிரச்சினைகள் போன்றவற்றை முதன்மையான காரணியாக கூறலாம்.

காளான்

காளான்

கிருமிகளை அழிக்க கூடிய அருமையான தன்மை இந்த காளானிற்கு உள்ளதாம். இவற்றை பருவ காலங்களில் எடுத்து கொண்டால் சிறந்த மருந்தாக பயன்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

சிட்ரஸ் வகை பழங்கள்

சிட்ரஸ் வகை பழங்கள்

ஆரஞ்ச், எலுமிச்சை, தக்காளி போன்ற வைட்டமின் சி அதிகம் கொண்ட பழங்களை சாப்பிட்டு வந்தால் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உடலுக்கு அதிகம் கிடைக்கும். எனவே, இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலின் வலிமையை கூட்டும்.

ரெட் ஒயின்

ரெட் ஒயின்

resveratrol மற்றும் polyphenols என்கிற இவை நன்மை தர கூடிய பாக்டீரியாக்களை உடலுக்கு தரும். ஆதலால், இவை கெட்ட பாக்டீரியாய்க்களை அழிக்க வழி செய்யும். பருவ காலங்களில் சிறிதளவு ரெட் ஒயின் குடிப்பவர்களுக்கு நோய்களின் தாக்கம் மிக குறைவாம்.

MOST READ: உடல் எடையை சட்டென குறைக்கணுமா..? அப்போ மாயன்கள் கூறும் சியா விதைகளே போதும்..!

பூண்டு

பூண்டு

ஆன்டி-பாக்டீரியல் தன்மை பூண்டில் அதிகம் உள்ளதாம். குறிப்பாக இதில் அல்லிசின்(allicin) எனப்படும் முக்கிய மூல பொருள் உள்ளது. இதுதான் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து, எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுவூட்ட செய்கிறது. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம்.

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாய்

வைட்டமின் சி மற்றும் வைட்டமின் எ அதிகம் கொண்ட சிவப்பு மிளகாயை உணவில் சேர்த்து உண்ண வேண்டும். இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் லிகோபின் என்ற மூல பொருட்கள் அதிகம் நிறைந்துள்ளன. எனவே, பருவ காலங்களின் நோய்களை எதிர்க்க இவை நன்கு உதவும்.

யோகர்ட், மோர், லசி

யோகர்ட், மோர், லசி

சிறிய சிறிய நுண்ணுயிரிகளை கொள்ள கூடிய தன்மை இந்த பாலில் இருந்து தயாரிக்கபடும் பொருட்களுக்கு உள்ளதாம். பருவ காலங்களில் இதனை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம். மேலும், வயிற்றில் ஏற்பட்டுள்ள புண்கள், வீக்கங்கள் குணமடையும்.

காரசார மசாலாக்கள்

காரசார மசாலாக்கள்

நாம் சாப்பிட கூடிய உணவில் முக்கியமாக நம் வீட்டின் காரசாரமான மசாலா பொருட்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். அவற்றில் தான் எண்ணற்ற அளவில் எதிர்ப்பு சக்தியை கூட்டும் ஆற்றல் உள்ளதாம். குறிப்பாக கிராம்பு, இலவங்கம், ஒரிகனோ போன்றவற்றை சமையலில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.

MOST READ: இது வெறும் அழற்சி இல்லங்க... இதுக்கு அர்த்தம் தெரிஞ்சா பீதியில உறைஞ்சிடுவீங்க

தேன்

தேன்

சாப்பிட கூடிய எந்த ஒரு ஆயுர்வேத மருந்தாக இருந்தாலும், அவற்றில் தேனின் பங்கு மிக முக்கியமானதாகும். இது சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறதாம். காய்ச்சல், தொண்டை கோளாறுகள் உள்ளவர்களுக்கு தேன் அருமையான தீர்வாகும்.

மஞ்சளும் மிளகும்

மஞ்சளும் மிளகும்

மிக அற்புத மருந்தாக கருதப்படும் இவை உடலுக்கு பல்வேறு நன்மைகள் தருகிறது. மஞ்சளில் உள்ள curcumin என்ற மூல பொருள் கிருமிகளை எதிர்த்து போராடும். குறிப்பாக நீண்ட நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோர்க்கு மஞ்சள் சிறந்த மருந்தாக உதவும். எனவே, உணவில் மஞ்சளையும், மிளகையும் சேர்த்து கொள்ளுங்கள்.

மூலிகை டீ

மூலிகை டீ

பருவ காலங்களில் வர கூடிய நோய்களை தடுக்க மூலிகைகள் நன்கு உதவும். மூலிகைகளில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை இரட்டிப்பாக்கும். எனவே துளசி, இஞ்சி, ஆலிவ் இலைகள் போன்றவற்றை கொண்டு டீ தயாரித்து குடித்து வந்தால் நோயின்றி இருக்கலாம்.

மேற்சொன்ன உணவு முறையை பின்பற்றி நலமுடன் வாழுங்கள் நண்பர்களே. இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods That Can Provide Immunity Against The Seasonal Flu

Foods that you should definitely add in your diet, especially as the weather changes.