Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
சீதாப்பழம் பத்தி இப்படியெல்லாம் வதந்தி வரும்... நம்பாதீங்க... ஜாலியா சாப்பிடுங்க
சீதாப்பழம் என்பது ஒரு இனிப்பு சுவையை உடைய பழம். மேலே பச்சை நிற தடித்த தோல் மற்றும் உள்ளே மென்மையான சதைப் பகுதி மற்றும் விதைகள் கொண்டது.
பழங்கள் ஆரோக்கியமானவை என்பது அனைவருக்கு தெரியும். பழங்களைப் பிடித்க்கதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். நமது தினசரி உணவில் பழங்களை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பழங்கள் பல நன்மைகளை செய்கின்றது. எல்லா வகைப் பழங்களையும் சாப்பிடுவது நல்லது. ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு சுவை மற்றும் குணம் உண்டு.

ஒவ்வொரு பழமும் வெவ்வேறு ஊட்டச்சத்துகளைக் கொண்டது. ஒரு சில பழங்களை அதிகமாக சாப்பிடுவதை நமது பெற்றோர் அனுமதிக்க மாட்டார்கள். அதாவது சில பழங்களில் சூடு அதிகம் இருக்கும். சில பழங்கள் அதிக குளிர்ச்சி தன்மையுடன் இருக்கும். ஆகவே பழங்கள் சுவையானது என்பதற்காக அதிகமாக உண்பதை தவிர்ப்பது நல்லது.

சூடு அதிகம்
மாம்பழம், பப்பாளி போன்ற பழங்கள் வெப்பமண்டலமான பிரதேசங்களில் விளைவதால் அவை சூடு அதிகம் உள்ள பழங்களாக கருதப்படுகின்றன. ஆகவே இவை உடல் வெப்பத்தை அதிகரிக்கும் பழங்களாக உள்ளன. வாழைப்பழம், சீதாப்பழம் போன்றவை உடலில் குளிர்ச்சியை அதிகரித்து சளியை உண்டாக்குகின்றன. சில பழங்களை தவிர்க்க சில அறிவியல் பூர்வமான நிருபணங்கள் இருப்பது நம்மை ஆச்சர்யப்பட வைப்பதாக உள்ளது.

எப்படி கண்டுபிடிக்கலாம்?
சூடு அதிகம் உள்ள பழங்கள் மற்றும் குளிர்ச்சியான பழங்கள் என்று எவ்வாறு பிரிக்கப்படுகின்றன? எல்லா பழங்களையும் சூடு மற்றும் குளிர்ச்சி என்று வகைபடுத்துகிறது ஆயுர்வேதம். பழங்களின் தன்மை மற்றும் அதனை எடுத்துக் கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றம் போன்றவற்றை பொறுத்து இந்த பிரிவுகள் தோன்றுகிறது. உடலின் உட்புற வெப்பநிலையை சில பழங்கள் அதிகரிக்கும், சில பழங்கள் குறைக்கும். இதனை வைத்து அந்த பழம் குளிர்ச்சியானது மற்றும் சூடானது என்று வகைப்படுத்தப்படுகிறது.

சீதாப்பழம் குளிர்ச்சியானதா?
சீதாப்பழம் என்பது ஒரு இனிப்பு சுவையை உடைய பழம். மேலே பச்சை நிற தடித்த தோல் மற்றும் உள்ளே மென்மையான சதைப் பகுதி மற்றும் விதைகள் கொண்டது. விதையின் மேலே சதைப் பகுதி போர்த்தப்பட்டு இருக்கும் மிகவும் இனிப்பான சுவையைக் கொண்டது இந்த சீதாப்பழம். இந்த பழம் ஒரு குளிர்ச்சியான பழம் ஆகும். இதனை எடுத்துக் கொள்வதால் உடலின் உட்புற வெப்ப நிலை குறைகிறது. இதனால் இந்த பழத்தை சாப்பிடுவதால் சளி பிடிக்கிறது என்று பொதுவாகக் கூறப்படுகிறது.

எது உண்மை?
சீதாப்பழம் சாப்பிடுவதால் சளி பிடிக்கிறது என்பது உண்மை அல்ல. பொதுவாக , பழங்கள் சாப்பிடுவதால் சளி பிடிப்பதில்லை என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை. பொதுவாக உண்டாகும் சளி தொந்தரவுகள் கிருமிகளால் உண்டாகிறது. இதற்கும் நாம் சாப்பிடும் பழங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. அதனால், சீதாப்பழம் உட்கொள்வதால் சளி பிடிக்கிறது என்பது உண்மை இல்லை என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அப்படியென்றால் இது பொய்யா?
குளிர்ச்சியான பழங்களை சாப்பிடுவதால் சளி தொந்தரவுகள் ஏற்படுகிறது என்று காலங்காலமாக நம்பப்படுகிறது. இதனை முற்றிலும் மறுப்பதற்கில்லை. குளிர்ச்சியான பழங்கள் உடல் வெப்பத்தைக் குறைக்கிறது என்பது உண்மை, ஆனால் மிகவும் அதிக அளவு உட்கொள்ளும்போதே உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஆனால் எந்த ஒரு மனிதராலும் மிக அதிக அளவு பழங்களை சாப்பிட முடியாது. ஒரே நேரத்தில் மிகவும் அதிகமாக இந்த வகைப் பழங்களை உட்கொள்வதால் உடலின் வெப்பநிலை குறைந்து உடல் நல பாதிப்புகள் தோன்றலாம். இதனால் நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து கிருமி தொற்று தாக்கும் அபாயம் உண்டாகிறது. இதனால் சளி அல்லது ஜலதோஷம் உண்டாகிறது.

நன்மைகள்
சீதாப்பழத்தில் மற்றவர்கள் பரப்பும்வதந்திகளைக் காட்டிலும் பல மடங்கு ஆரோக்கியமும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. இந்த பழத்தில் இவ்வளவு நல்ல விஷயமா என்று உங்களை வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு நற்பயன்கள் இதில் அதிகம்.

புற்றுநோயை எதிர்க்கிறது
சீதாப்பழத்தைப் பற்றி அனைவருக்கும் பொதுவாகத் தெரியும். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இந்த பழம் புற்று நோயை தடுக்கும் தன்மை கொண்டது என்று அனைவருக்கும் தெரிவித்தவுடன் தான் இந்த பழத்தைப் பற்றிய நன்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது. அசீடோஜெனின். அல்கலைடு போன்ற கூறுகளை இந்த பழம் கொண்டுள்ளது. இந்த கூறுகள் புற்று நோயை உண்டாக்கும் அணுக்களின் வளர்ச்சியை குறைக்க சிறந்த முறையில் உதவுகின்றன.

இரும்புச்சத்து
சீதாப்பழத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. அதனால், இரத்த சோகை உள்ளவர்கள் இந்த பழத்தை உட்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது இரத்தத்தின் ஹீமோகுளோபின்-சுமக்கும் திறனை அதிகரிக்கிறது மற்றும் சோர்வையும் விரட்டுகிறது.

மூளை ஆரோக்கியம்
சீதாப்பழத்தில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிகம் உள்ளது. இவை மூளையின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை. இந்த பழம் பார்கின்சன் என்னும் மூளைக் கோளாறில் இருந்து மூளையை பாதுகாக்கிறது.

நார்ச்சத்து
செரிமான மண்டலம் சீராக இயங்க உதவுகிறது. இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. அசிடிட்டி, வாய்வுக் கோளாறு போன்ற வயிற்றுப் பிரச்சனைகளை அண்டவிடாமல் செய்கிறது.

எடை அதிகரிப்பு
சீதாப்பழத்தில் கலோரிகள் அதிகம் உள்ளது. அதனால் எடை அதிகரிக்க விரும்புவோர் இந்த பழத்தை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் இந்த பழம் உதவுகிறது. இதனால் வயிற்றில் பசி தூண்டப்படுகிறது. ஆகவே நிறைய உண்பதால் எடை அதிகரிப்பும் சாத்தியமாகிறது.

சரும ஆரோக்கியம்
சீதாப்பழம் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைக்க உதவுகிறது. தொடர்ந்து சீதாப்பழம் சாப்பிட்டு வருவதால், சருமத்தில் கொலோஜென் உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. இதனால் சருமத்தின் எலாஸ்டிக் தன்மை தக்கவைக்கப்பட்டு வயது முதிர்விற்கான அறிகுறி ஏற்படாமல் தடுக்கிறது.
சீதாப்பழமும் மற்ற பழங்களைப் போல் உடலின் சீரான செயல்பாடுகளுக்கு அதிகமான நன்மைகளைச் செய்கிறது. மிகவும் அதிகமான அளவு சீதாப்பழத்தை சாப்பிடுவதால் மட்டுமே உடல் பாதிப்புகள் தோன்றும். இல்லையென்றால் இதனை உட்கொள்வதால் உடலுக்கு நன்மைகள் மட்டுமே கிடைக்கின்றது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications











