For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அய்யய்யோ! இதையெல்லாமா சாப்பிடறாங்க... எந்த ஊர்ல?...

|

உலகெங்கிலும் உள்ள மக்கள் எப்போதும் மிகவும் கேலியான உணவுகளை சாப்பிடுகிறார்கள். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்ய காரணம் என்ன? அதன் சுகாதார நலன்களே காரணம்

மனிதர்கள் எப்போதும் முற்றிலும் வெறுப்பூட்டும் சிகை அலங்காரங்கள் முதல் உணவு வரை அனைத்தையும் முயற்சி செய்து பார்க்க விரும்புகிறோம். பெரிய வடிவம் கொண்ட ஐரோப்பியச் சிலந்தி பர்கர் முதல் புழுக்கள் தூவிய பிட்ஸா வரை சிலர் உண்ணுவதை நாம் எல்லோரும் கேட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம்.

Bizarre foods and benefits in tamil

அருவருப்பாக உணர்கிறீர்களா? எங்களுக்கு தெரியும்! நம்மில் பெரும்பாலோர் இவற்றை கனவில் கூட விரும்பாத நிலையில், சிலர் தங்கள் சொந்த விருப்பத்தினாலேயே இந்த வினோதமானவற்றை சாப்பிடத் தேர்வு செய்கிறார்களே. ஏன்? இம்மாதிரியான உணவுகள், நம்மை தூக்கியெறிய தூண்டினாலும் சிலர் அவற்றை விரும்பி உண்பது, அவர்களின் உடல் நலனுக்காகவே! யாருக்கு தெரியும்? அவர்கள் கொள்ளும் பிராணிகள் ஊட்டச்சத்துள்ளதாகவும், அதன் புரதம் உட்கிரகிக்கும் விதமாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதலை இறைச்சி

முதலை இறைச்சி

அலிகேட்டர் இறைச்சி, "கேட்டர்" குடும்பத்தின் எந்த வகைகளிலிருந்தும் பெறப்பட்ட இறைச்சி ஆகும். இது வரலாற்று காலத்தில் ஒரு சிறப்பு வாய்ந்த உணவாக பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவில், முதன்மையான கடல் உணவு கடைகள், முதலை பண்ணை அல்லது சிறப்பு கடைகள் ஆகியவற்றில் இருந்து இந்த இறைச்சியை வாங்க முடியும். இது சற்று வித்தியாசமாக இருந்தாலும், அலிகேட்டர் மாமிசமானது புரதத்தில் நிறைந்திருக்கும்.அதன் குறைந்த கொழுப்பு காரணமாக மனித நுகர்வுக்கு மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. இதனை உங்கள் உணவு பட்டியலில் சேர்க்க விரும்புகிறீர்களா?

தட்டான் பூச்சிகள்

தட்டான் பூச்சிகள்

இந்த சிறிய பாதிப்பில்லாத உயிரினங்கள் தங்களின் வேலையை செய்து கொண்டு, சுற்றி பறந்துகொண்டிருப்பதை பார்த்திருக்கிறீர்களா? ஆமாம், மக்கள் அவற்றையும் சாப்பிடுகிறார்கள். உண்மையில் டிராகன்கள் புரோட்டீனில் நிறைந்தது. புரதங்கள் பூச்சிகளின் மிகப்பெரிய ஊட்டச்சத்து கூறு மற்றும் சில பூச்சிகளின் புரதம் இறைச்சியுடன் ஒப்பிடக்கூடியது.

ட்ராகன்ஃபிலைஸ் இந்தோனேசியா மற்றும் சீனாவில் ஒரு பிரபலமான உணவாகும். உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் தெருஓர உணவகத்திலும் காணலாம். அவை மென்மையான ஷெல் நண்டுகள் போன்ற சுவையுடையயதாகும். முயற்சி செய்துபார்க்கிறீர்களா?

ஜெல்லிட் மூஸ் (ஒரு வகை மான்) மூக்கு

ஜெல்லிட் மூஸ் (ஒரு வகை மான்) மூக்கு

நீங்கள் படித்தது சரியே. ஜலீட் மூஸ் மூக்கை சாப்பிடுபவர்கள் உலகிலேயே மிகவும் பிரபலமான உணவை பயன்படுத்துகின்றனர். மூஸின் மூக்கு கால்சியம் நிறைந்ததாகவும், கொழுப்பைக் குறைவாகவும் கொண்டுள்ளது.அதுமட்டுமல்ல, புரதம், வைட்டமின் சி ஆகியவற்றில் அதிகமாக உள்ளது மற்றும் இதில் இரும்புச்சத்தும் உள்ளது. சூப்பர்ஃபுட்!

குளவி பிஸ்கட்கள்

குளவி பிஸ்கட்கள்

கண்டிப்பாக இது ஜப்பானில் தோன்றிய உணவே. குளவிகளை பிடித்து, அவற்றை இறக்கும்வரை சுடுநீரில் கொதிக்க வைத்து, பின்னர் உலர வைக்கிறார்கள். அதனை அரிசி மாவில் கலந்து, மிருதுவான பிஸ்கட் செய்கிறார்கள். குளவிகள் புரதம் நிறைந்தது, குறைவான கொழுப்பு கொண்டது, எளிதில் கிடைக்க கூடியது மற்றும் பிஸ்கட்டுக்கு ஒரு மொறுமொறுப்பை தரக்கூடியது.

காசு மார்சு

காசு மார்சு

"காஸு மர்சு" என்பது மாக்ஜாட்டின் சீஸ்க்கு ஒரு கற்பனையான சொல்லே தவிர வேறு ஒன்றும் இல்லை. இந்த முழுமையான பால் பொருளானது, நாம் கேள்விப்பட்டவைகளில் மிக அருவருப்பான உணவு பொருளாகும். நீங்கள் காசு மார்சு-வின் ஒரு பகுதியை கடிக்கும் போதே, ஒரு அருவருக்க தக்க, நெளிந்து நகரக்கூடிய ஒன்றை கடிக்கலாம்.அது மஃகோட்ஸ் (புழுக்கள்) தான்.

புழுக்கள் உயிருடன் வைக்கப்படுகின்றன. ஏனெனில் அவை நகரும் போது, வெளிவிடும் நொதிகள் சீஸ்-ல் உள்ள கொழுப்புகளை உடைக்கக்கூடியது. எனவே அது ஆரோக்கியமான உணவை சாப்பிட வைக்கும். மஃகோட்ஸ், தாங்களே ஒரு சிறந்த ஊட்டச்சத்துள்ளதாகும் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்டுள்ளது.

இருப்பினும் காஸு மார்சு, அங்கு மிகவும் ஆபத்தான சீஸ் எனவும் கருதப்படுகிறது. செம்மறியாட்டு பாலினால் செய்த சீஸ்-உடன் மஃகோட்ஸ் சேர்த்து செய்யபட்ட இந்த உணவு அவை உயிருடன் இருக்கும் வரையே ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள உணவாகும். குளிரூட்டல் செய்வது புழுக்களை கொன்று மனித நுகர்வுக்கு தகுதியற்றதாக்கிவிடும்.

பட்டுப்புழுக்கள்

பட்டுப்புழுக்கள்

பட்டுப்புழுக்கள் மிகவும் விலைமதிப்பற்றவை, இல்லையா? எனவே அவற்றை பண்ணையில் வளர்த்தி, அழகான பட்டு ஆடைகள் மற்றும் கழுத்துண்டுசெய்யலாம், விற்கலாம் மற்றும் அவார்டை சாப்பிடக்கூட செய்யலாம். போண்டகி என்பது வறுத்த, லார்வா மற்றும் முதிர்ச்சியடைந்த நிலைக்கு இடைப்பட்ட, செயலற்ற பட்டுப்புழுக்கள் ஆகும். இந்த வித்தியாசமான உணவு கொரியா மற்றும் ஜப்பானின் பகுதிகளில் பிரபலமாக உள்ளது மற்றும் இனிப்பு சோளம் போன்று ஒரு கப்பில், முக்கியமாக தெரு உணவுகளில் ஒன்றாக விற்க்கப்படுகிறது.

போண்டகி என்பது பட்டுப்புழுக்களால் செய்யப்பட்ட ஒரு சுவையான உணவாகும். புரதம் நிறைந்ததாகவும், மிகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது! இது அதிக வைட்டமின்கள், இரும்பு, மற்றும் கால்சியம் கொண்டுள்ளது.

டீப் ஃபிரைடு ட்ராண்ட்டுலஸ் (சிலந்தி)

டீப் ஃபிரைடு ட்ராண்ட்டுலஸ் (சிலந்தி)

பெரிய, பயமுறுத்துகிற ட்ராண்ட்டுலஸ், நன்கு வறுத்து,வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பரிமாறப்படுகிறது. எளிதான இந்த சிற்றுண்டி ஆரோக்கியமானது என்பதற்கு உண்மையான ஆதாரங்கள் இல்லை என்றாலும், கம்போடிய தெருக்களில் காணப்படும், அதை மக்கள் முதுகுவலி மற்றும் சுவாச பிரச்சினைகளுக்கு உதவுகிறது என நம்புகிறார்கள். ஓ, முதுகு வலியா? ட்ராண்ட்டுலஸ் ஒரு தட்டு வேண்டுமா?

முக்தூக்

முக்தூக்

முக்தூக் - திமிங்கலம் இறைச்சிக்கு என்னே ஒரு அழகான பெயர்! மிகவும் வினோதமான உணவு பொருட்களில் ஒன்றான முக்தூக் எப்போதும் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களில் நிறைந்துள்ளது. ஆர்க்டிக் பிராந்தியங்களில் பிரபலமான இந்த உணவு உறைந்து, சமைக்கப்படாமல் மற்றும் உப்பு மட்டும் சேர்த்து பரிமாறப்படுகிறது.

பாம்பு ஒயின்

பாம்பு ஒயின்

ஒரு ஆரோக்கியமான இனிப்பு பானம் கொடிய கோப்ரா மூலம் தயாரிக்கப்படுகிறித்து.பாம்பு ஒயின் என்பது ஒரு முழு பாம்பின் மூலம் தயாரிக்கப்பட்ட ஆல்கஹால் ஆகும். எதனொளில் முழு பாம்பை உறவைப்பதினால் பாம்பின் விஷத்தன்மை நீங்கி, உடலுக்கு தேவையான நன்மைகளை பெற முடியும். இந்த மது முடி இழப்பு தடுக்கவும், பாலியல் செயல்திறன் அதிகரிக்கவும் மற்றும் ஆசியா மற்றும் ஜப்பான் பகுதிகளில் பரவலாக பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. அடுத்த முறை நீங்கள் ஒரு பாரிற்கு சென்று, ஒரு பாம்பு வைன்-யை ஆர்டர் செய்து பார்டெண்டரைத் திடுக்கிடச் செய்து பாருங்கள்.

கினியா பிக்ஸ்

கினியா பிக்ஸ்

கினியா பன்றிகள் பொதுவாக அனைவரும் கூச்சமுடன் வளர்க்கக்கூடிய மிகச்சிறிய முதல் செல்ல பிராணியாகும். இருப்பினும், அமெரிக்காவில், இந்த சிறு செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்கு பதிலாக உணவு தட்டுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.இந்த பன்றிகள் எளிதாக கிடைக்கின்றன, சமைக்க எளிதாக, ருசியான மற்றும் மிகவும் சத்தானது.

அவற்றை செல்ல பிராணிகளாக வளருங்கள், அவை தொந்தரவு செய்ய தொடங்குமானால், அவற்றை இரவு உணவுக்கு வறுக்கவும். (விகாரமான ஒன்று!)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bizarre things people eat and their health benefits

we have faith that you can learn to love these even stranger, but super healthy foods if for no other reason that they will do your body real good
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more