Latest Updates
-
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.
வெள்ளரிக்காயை ஏன் தோல் சீவி சாப்பிடக் கூடாது?... அப்படி சாப்பிட்டா என்ன ஆகும்?...
வெள்ளரிக்காய் சத்துமிக்கது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அநேகர் வெள்ளரிக்காயை தோலை சீவி விட்டு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
வெள்ளரிக்காய் சத்துமிக்கது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அநேகர் வெள்ளரிக்காயை தோலை சீவி விட்டு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். வெள்ளரிக்காய், தோட்டத்திலிருந்து பலருடைய கை பட்டு, பல இடங்களை தாண்டி, மார்க்கெட்டுக்கு வந்து சேர்கிறது.

அதை அப்படியே சாப்பிடுவது ஆரோக்கியமாக இருக்குமா? என்ற கேள்வி சரியானதுதான்! வெறுமனே கழுவி விட்டு சாப்பிடுவது பாதுகாப்பானது அல்ல; ஆனால், அதற்காக தோலை சீவி விட்டு வெள்ளரியை சாப்பிடுவதால் உடலில் சேர வேண்டிய முக்கியமான சத்துகளை இழந்து விடுகிறோம்.

நார்ச்சத்து
நார்ச்சத்து - கரையக்கூடியது, கரையாதது என்று இரு வகைப்படும். வெள்ளரிக்காயின் தோலில் கரையாத நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இந்த நார்ச்சத்து, உணவு மண்டலத்தின் வழியாக செல்லும்போது, கழிவுகளை திரட்டி சுத்தமாக்குகிறது. செரிமானம் சரியாக நடைபெற உதவுகிறது. ஆகவே, மலச்சிக்கல் பிரச்னை தவிர்க்கப்படுகிறது. தினசரி 25 கிராம் நார்ச்சத்து சேர்ந்த உணவினை எடுத்துக்கொள்வதே ஆரோக்கியமானது. ஆண்களுக்கு 38 கிராம்
வெள்ளரிக்காய் சதைப்பகுதி, கரையக்கூடிய நார்ச்சத்து மிக்கது. உடலுக்கு அதிகம் நன்மை பயக்கக்கூடிய அந்தச் சத்து, மலம் இறுகுவதை தடுக்கிறது.

வைட்டமின் கே
இரத்தம் உறைதலுக்கு உதவும் வைட்டமின் கே, வெள்ளரிக்காயின் தோலில்தான் அதிகம் காணப்படுகிறது. ஒரு கப் அளவு தோல் சீவப்படாத வெள்ளரி துண்டுகளில் 49 மைக்ரோ கிராம் வைட்டமின் கே உள்ளது. அதுவே, தோலை சீவிவிட்டால் 9 மைக்ரோ கிராமாக குறைந்து போகும்.

குறைந்த கலோரி
'அதிகமாக வெள்ளரிக்காய் சாப்பிட்டு விட்டேனே' என்று நீங்கள் ஒருபோதும் பயப்படத்தேவையில்லை. வெள்ளரி துண்டுகள் குறைந்த கலோரி கொண்டவை. தோல் சீவப்படாத வெள்ளரித் துண்டு ஒன்றில் 1 அல்லது 2 கலோரி ஆற்றல்தான் உள்ளது. ஆகவே, பிற்பகலில் தோல் சீவாத வெள்ளரியை துண்டாக்கி, தைரியமாக சாப்பிட்டு, புத்துணர்ச்சி பெற்றுக்கொள்ளுங்கள்.

பீட்டா கரோட்டீன்
வைட்டமின் 'ஏ'யின் ஒரு வகைதான் பீட்டா கரோட்டின். வெள்ளரியில் அதிகம் பீட்டா கரோட்டின் காணப்படுகிறது. இந்தச் சத்து, கண்ணுக்கு நன்மை பயக்கக்கூடியது. வைட்டமின் ஏ பல வகைகளில் கிடைக்கிறது.
வெள்ளரிக்காயின் தோலில் அதிக அளவு பீட்டா கரோட்டின் உள்ளது. பெண்கள் 2,310 ஐயூ (சர்வதேச ஊட்டச்சத்து குறியீடு), ஆண்கள் 3,000 ஐயூ வைட்டமின் 'ஏ' உட்கொள்ள வேண்டும். ஒரே ஒரு கப், தோல் சீவப்படாத வெள்ளரித்துண்டுகளில் 55 ஐயூ அளவுக்கு வைட்டமின் 'ஏ' நிறைந்திருக்கும்; அதில் பாதி பீட்டா கரோட்டின்தான்.
ஆகவே, வெள்ளரியை நன்றாக கழுவுங்கள்; ஆனால், தோலை சீவி எறிந்து விடாமல், தோலுடன் நறுக்கி சாப்பிடுங்கள்; அதுவே நல்ல பயன் தரும்.



Click it and Unblock the Notifications
