Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
தெரியாமல் கூட இந்த உணவுகளை வரப்போகும் மழைக்காலத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்
ஆரோக்கியமான உணவுகள் கூட தவறான நேரத்தில் சாப்பிடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் மழைக்காலங்களில் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மழைக்காலம் தொடங்கிவிட்டது. இனி பல தொற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஏற்கனேவே இருக்கும் நோய்கள் மட்டுமின்றி இனி பல புதிய நோய்களும் கூட ஏற்படலாம். நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டியது நம் கைகளில் தான் உள்ளது. மற்ற பருவங்களை காட்டிலும் மழைக்காலங்களில் நோய்தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் ஆரோக்கியமான உணவுகள் கூட தவறான நேரத்தில் சாப்பிடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் மழைக்காலங்களில் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

வறுத்த உணவுகள்
மழை பெய்யும் நேரத்தில் சூடான எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிடுவது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கலாம் ஆனால் ஆரோக்கியத்தை வழங்காது. இதுபோன்ற உணவுகள் உங்கள் செரிமானத்தை பாதிப்பதோடு வயியற்று புண், வீக்கம் போன்ற வயிறு உபாதைகளை ஏற்படுத்தும். மேலும் இது பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.

வெள்ளை சாதம்
மழைக்காலத்தில் வெள்ளை அரிசியை சாப்பிடுவது குடலில் வீக்கம் மற்றும் நீர்த்தேக்கம் ஏற்ப்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைதல், செரிமான மண்டலத்தில் பிரச்சினை போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். இந்த காலங்களில் பழுப்பு அரிசி சாப்பிடுவது நல்ல பயனை அளிக்கும்.

கடல் உணவுகள்
மழைக்காலங்களில் கடல் உணவுகளான மீன், இறால் மற்றும் நண்டு போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும். இது அவைகளின் இனப்பெருக்க காலம் மேலும் இந்த காலத்தில் கடல் உணவுகள் சாப்பிடுவது வயிற்றில் தோற்று நோய்களை உண்டாக்கும் சிலசமயம் விஷமாக மாறக்கூட வாய்ப்புள்ளது. பெரும்பாலும் இந்த காலங்களில் அசைவ உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.

இறைச்சி
இறைச்சி உணவுகள் செரிமானம் அடைய அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் அவற்றை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை உங்களுக்கு அசைவம் சாப்பிட ஆசைப்பட்டால் சூப் வகைகளை சாப்பிடுங்கள். இவை எளிதில் செரிமானம் அடைவதோடு பிரச்சினைகளையும் ஏற்படுத்தாது.
MOST READ: உங்கள் கையில் இந்த விதி ரேகை எப்படி இருக்கிறது? உடைந்திருந்தால் என்ன அர்த்தம்?

கீரைகள்
சிறுவயது முதலே ஆரோக்கியத்திற்கு கீரைகள் சாப்பிட வேண்டுமென்று நம்மிடம் சொல்லி சொல்லியே வளர்த்திருக்கிறார்கள். ஆனால் மழைக்காலங்களில் கீரைகளை சாப்பிடாமல் இருப்பதே ஆரோக்கியமானதாகும். இவைகளில் இருக்கும் பூச்சிகள் மற்றும் இதர கிருமிகள் நிச்சயம் உங்கள் வயிற்றை பதம் பார்க்கும். முட்டைகோஸ், காளி பிளவர் மற்றும் ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளையும் தவிர்த்துவிடுங்கள்.

பழச்சாறு
பொதுவாகவே பழச்சாறுகள் ஆரோக்கியமானவைதான். ஆனால் மழைக்காலங்களில் நீங்கள் அவற்றை குடிக்கும் முன் அவை எங்கு தயாரிக்கப்பட்டவை என்பதை உறுதிசெய்து கொள்ளவும். பெரும்பாலும் வீட்டில் தயாரித்த பழச்சாறுகளை குடிப்பதே நல்லது. தரமில்லாத பழச்சாறை மழைக்காலங்களில் குடிப்பது மஞ்சள்காமாலை, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

வெட்டிவைத்த பழங்கள்
நறுக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளிடம் இருந்து தள்ளியே இருங்கள். குறிப்பாக அவை திறந்த வெளியில் வைக்கப்பட்டால் அறவே தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் அவற்றில் காற்றில் உள்ள ஈரப்பதம் மூலம் பரவும் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். இது பல நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.

எண்ணெய்
கடுகு மற்றும் எள் எண்ணெய் போன்ற எண்ணெய்களை பயன்படுத்தி மழைக்காலங்களில் உணவு சமைப்பதை தவிர்க்கவும். அவை உடலில் தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும். எனவே மிதமான எண்ணெய்களான சோளம் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தவும்.

காளான்
மழைக்காலத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய மற்றொரு முக்கியமான பொருள் காளான் ஆகும். ஏனெனில் ஈரமண்ணில் விளையும் காளான் சமைப்பதற்கு முன் நன்கு சுத்தம் செய்யப்பட வேண்டியது அவசியமாகும். ஆனால் மழைக்காலங்களில் அவற்றின் மூலம் பரவும் பாக்டீரியாக்கள் அவற்றை சாப்பிட தகுதியற்ற பொருளாக மாற்றுகிறது. குறிப்பாக இவற்றை சாலட்களில் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.



Click it and Unblock the Notifications