Just In
- 5 hrs ago
கோதுமை ரவை பாயாசம்
- 5 hrs ago
இந்த ஆரோக்கியமான பழக்கங்கள் உடலினுள் அழற்சியை ஏற்படுத்தும் தெரியுமா?
- 6 hrs ago
இந்த மாதிரியான ரேகை கையில் இருப்பவர்கள் பிறக்கும்போதே அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் தெரியுமா?
- 7 hrs ago
2021 கிங் பிஷ்ஷர் காலெண்டருக்கு சூட்டைக் கிளப்பும் போஸ்களைக் கொடுத்த மாடல்கள்!
Don't Miss
- Automobiles
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
- News
விறுவிறு ஏற்பாடுகள்.. தமிழகத்தில் 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்- சென்னையில் எங்கெங்கு?
- Movies
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டயேரியா நிக்காம போய்க்கிட்டே இருக்கா? இந்த 3 சூப்ல ஒன்று குடிங்க... உடனே நிக்கும்...
வயிற்றுப் பிரச்சினைகள் இருந்தால், ஆரோக்கியமான கொழுப்பு சதவிகிதம் கொண்ட மென்மையான உணவை உட்கொள்வது நல்லது. இந்த நிலைகளில் இழந்த ஆற்றலை திரும்பப் பெறுவதே முக்கியம், அதற்கு சூப்கள் ஒரு நல்ல தேர்வாகும்.
வயிறு சம்பந்தமான நோய்கள் எப்போதும் எரிச்சலூட்டுபவை. இவை வயிற்றுக்கு ஒவ்வாத பொருட்கள் அல்லது குடல் நோய்க்குறி போன்றவற்றால் தோன்றலாம்.

டயேரியா
வயிற்றுப் போக்கிலிருந்து உங்களை மீட்க சூப்கள் ஒரு சிறந்த வழி. இவை ஒரே நேரத்தில் ஊட்டச்சத்து, மற்றும் நீரேற்றத்தை வழங்கவல்லது. இந்த உணவுகள், சிறிய அளவீடுள்ள பயனுள்ள கொழுப்புகளைக் கொண்டிருக்கும் மற்றும் இழந்த ஆற்றலை மீட்டெடுக்கவும் உதவும். கூடுதலாக, இந்த வகையான நிலைக்கேற்ற சிறந்த வழி, செரிமான அமைப்பின் வேலைகளைக் குறைப்பதற்கான மென்மையான உணவைத் தேர்ந்தெடுப்பதாகும். சில ஆரோக்கியமான வழிகளைப் பார்க்கலாம் வாருங்கள்,
MOST READ: எடை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் பானிபூரி சாப்பிடலாமா? எத்தனை சாப்பிடலாம்?

அரிசி மற்றும் கேரட் சூப்
வயிறு வியாதிகளுக்கு சுமத்தப்படும் உணவுக் கட்டுப்பாடுகளால், அரிசியை நீங்கள் புறக்கணிக்க முடியாது. வயிற்றுப்போக்கிலிருந்து மீளக் கூடிய நேரத்தில், இந்த உணவு தானியங்கள் அசௌகரியத்தை குறைப்பதற்கான ஒரு சிறந்த மற்றும் பயனுள்ள ஊட்டச்சத்து ஆகும்.
தேவையான பொருட்கள்:
• ஒரு பெரிய கேரட்
• 1 சிறிய வெங்காயம்
• ½ கப் அரிசி (100 கிராம்)
• கொத்தமல்லி அல்லது வோக்கோசின் சிறிதளவு
• ½ எலுமிச்சையின் சாறு
• 3 கப் கோழிக் குழம்பு (750 மிலி)
• புதினா 1 கிளை
• எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய்
• தோலில்லாமல் வறுக்கப்பட்ட கோழியின் மார்பகங்கள் 2 (சுமார் 150 கிராம்)

செய்முறை
1. ஒரு சட்டியில் கோழிக் குழம்பை ஊற்றி சூடேற்றவும். சிறிய துண்டுகளாக உரிக்கப்பட்டு நறுக்கப்பட்ட கேரட் மற்றும் நறுக்கப்பட்ட வெங்காயத்தை அதனுடன் சேர்க்கவும்.
2. அது கொதித்தவுடன், அரிசி, வோக்கோசு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றைச் சேர்க்கவும்.
3. குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு குறைந்த வெப்பத்தில் வைக்கவும் அல்லது அரிசி மென்மையாகவும் வரை அல்லது கேரட் சமையும் வரை வைக்கவும்.
4. வெங்காயம் மற்றும் மூலிகைகளை நீக்கவும்.
5. உப்பைச் சரிபார்க்கவும்.
6. கோழி மார்பகங்களை நீளமான துண்டுகளாக்கி உப்பு மட்டும் சேர்த்து, கைப்பிடி கொண்ட அப்பம் சுடும் பாத்திரத்தில் இடவும். வேறெதுவும் பயன்படுத்த வேண்டாம்.
7. ஒரு சில துளிகள் கூடுதல் விர்ஜின் ஆலிவ் ஆயில் சேர்த்து கோழித் துண்டுகளை மேலே வைத்து பரிமாறவும். எலுமிச்சை சாறை மேலே தெளிக்கலாம்.

மற்ற சூப்கள்
அரிசி போன்ற நூடுல்ஸ், கோழி, கேரட் ஆகியவை இணைந்த சூப்கள் வயிற்றுப் போக்கிலிருந்து உங்களை விடுவிக்க உதவுகின்றன. இது எளிதாக மெல்ல மற்றும் ஜீரணிக்கக்கூடிய எளிதான ஒரு பாஸ்தா வகையாகும்.
MOST READ: காலையில சரியா சாப்பிடற பழக்கமே இல்லையா? அப்போ உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்குமே?

கோழி நூடுல்ஸ், செலரி மற்றும் கேரட் கொண்ட சூப் :
வீட்டிலுள்ள சிறியவர்களுக்கான சிறந்த பரிந்துரை இது.
தேவையான பொருட்கள்
• தோலில்லாத கோழியின் மார்பகங்கள் 2 (சுமார் 120 கிராம்)
• 2 சிறிய செலரி தண்டுகள்
• துண்டுகளாக வெட்டப்பட்ட 3 நடுத்தர கேரட்கள்
• துண்டுகளாக்கப்பட்ட 2 உருளைக்கிழங்கு
• 1 லீக்
• இரண்டாக வெட்டப்பட்ட ஒரு பெரிய வெங்காயம்
• 4 பர்ஸலே தண்டுகள்
• சூப்புக்கான 2 கப் நூடுல்ஸ் (250 கிராம்)
• 8 கப் தண்ணீர் (2 லிட்டர்)
• உப்பு (சுவைக்கேற்ப )
செய்முறை
1. கோழி மார்பகங்களை சிறிதளவு உப்பு மட்டுமே கொண்டு சுவையூட்டவும்.
2. அனைத்துக் காய்கறிகளையும் சுத்தம் செய்து நறுக்கி இரண்டு லிட்டர் தண்ணீர் கொண்ட பானையில் போட்டு கொதிக்க விடவும்.
3. இரண்டு கோழி மார்பகங்களையும் சேர்த்து குறைந்தபட்சம் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்கள்.
4. வோக்கோசின் கிளைகளைச் சேர்க்கவும். உருளைக்கிழங்கு மற்றும் கேரட் மென்மையாகும் வரை சமைக்கவும்.
5. இப்பொழுது நூடுல்ஸ் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
6. பரிமாறும் பொழுது சிறிது டோஸ்ட் துண்டுகளைச் சேர்த்துக் கொள்ளலாம். டோஸ்ட் சேர்ப்பு, பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கூடுதல் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

சிக்கன் கன்ஸோமி
தேவையான பொருட்கள்
• இரண்டு கோழித்தொடைகள்
• 2 நடுத்தர கேரட்
• 2 நடுத்தர உருளைக்கிழங்கு
• 1 பூண்டு விழுது
• ½ வெங்காயம்
• 1 லீக்
• 2 வோக்கோசின் தண்டுகள்
• 8 கப் தண்ணீர் (2 லிட்டர்)
• 2 துண்டுகள் டோஸ்ட்
• உப்பு (சுவைக்கேற்ப)
MOST READ: தொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க...

செய்முறை
1. கோழியை நன்கு கழுவி நெருப்பில் சுடவும்.
2. எல்லா காய்கறிகளையும் சுத்தம் செய்து, அவற்றை வெட்டி, ஒரு பெரிய பாத்திரத்தில் வைக்கவும்.
3. பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீரைச் சேர்க்கவும். அடுத்து, பூண்டு, லீக் மற்றும் வோக்கோசின் தண்டுகளைச் சேர்க்கவும். இறுதியாக, கோழியை இணைத்துக் கொள்ளுங்கள்.
4. அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கவும். அது கொதிக்கத் தொடங்கும் போது, வெப்பத்தை குறைத்து வைக்கவும். குறைந்தது இரண்டு மணிநேரம் அல்லது கோழி மென்மையாகும்வரை சமைக்கவும்.
5. ருசிக்கேற்ப உப்பு சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
6. தயாரான சூப்பை பரிமாற ஒரு ஆழமான பாத்திரத்தைத் தேர்வு செய்யவும். டோஸ்டை மேலே சேர்க்கவும்.
இது நம் வயிற்றுக்கான முக்கியமான புதுப்பிப்பு விளைவுகளுடன் கூடிய ஒரு பானம். விடுமுறை நாட்களிலும், வயிற்று பிரச்சினையிலும் எடுத்துக் கொள்ள ஏற்றதாக உள்ள ஒரு சிறந்த பானம்.