For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஹார்ட் அட்டாக்கையே தடுத்து நிறுத்தும் மாம்பழ டீ... உடனே ட்ரை பண்ணுங்க...

  By Suganthi Rajalingam
  |

  எல்லாருக்கும் மாம்பழம் என்ற வார்த்தையை கேட்டாலே போதும் நாவும் சேர்ந்து தித்திக்க ஆரம்பித்து விடும். அந்த அளவுக்கு மாம்பழ விரும்பிகள் அதிகம். சீசன் களைகட்ட ஆரம்பித்த உடனே நாம் அதிகமாக விரும்பி சாப்பிடுவது இந்த மாம்பழத்தை தான்.

  health benefits of mango tea

  சுவை, நிறத்தில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் ஊட்டச்சத்திலும் இதற்கு நிகர் எதுவுமில்லை எனலாம். அப்படிப்பட்ட மாம்பழ கனிகளை கொண்டு தேநீர் தயாரித்து பெறும் நன்மைகளை பற்றி தான் இக்கட்டுரையில் காண போகிறோம்.

  நன்மைகள்

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  டயாபட்டீஸ்

  டயாபட்டீஸ்

  இந்த மாம்பழத்தை கொண்டு டயாபெட்டீஸ்யை குணப்படுத்தலாம் என்று ஐரோப்பியர்கள் கண்டறிந்துள்ளனர். இவை கணையத்தில் அடைக்கப்பட்டுள்ள இரத்த குழாய்களை சரி செய்து இன்சுலின் சுரப்பை சரியாக்குகிறது. இதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் வரு கின்றன. இதனால் டயாபெட்டீஸ் நோய் ஏற்படாமல் நீண்ட காலம் நிம்மதியாக வாழ இயலும்.

  ஹைபர்டென்ஷன் (உயர் இரத்த அழுத்தம்)

  ஹைபர்டென்ஷன் (உயர் இரத்த அழுத்தம்)

  மாங்கோ டீ குடிப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம். இவை இரத்த குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. உயர் இரத்த அழுத்தத்தால் இரத்த குழாய்கள் உடைந்து போவதை தடுக்கிறது. எனவே தினமும் ஒரு கப் மாங்கோ டீ போதும் நீங்கள் வளமாக நலமாக வாழ.

  விட்டமின்கள்

  விட்டமின்கள்

  மாவிலைகளும் தேநீர் தயாரிக்க பயன்படுகின்றன. இதில் விட்டமின் ஏ, பி மற்றும் சி போன்ற ஏராளமான விட்டமின்கள் அடங்கியுள்ளன. எனவே உங்கள் விட்டமின் பற்றாக்குறையை போக்கி போதுமான ஊட்டச்சத்துக்களை பெற்று வளமுடன் வாழ இந்த தேநீர் பெரிதும் உதவியாக இருக்கும்.

  ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

  ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

  இந்த தேநீரில் இயற்கையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அடங்கியுள்ளன. உலர்ந்த மாங்காயில் விட்டமின் சி என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைக்கவும், ஸ்கர்வி என்ற நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

  இதய நோய்கள்

  இதய நோய்கள்

  இதில் உள்ள ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் வருவதை தடுக்கிறது. இதய நோய்கள் மற்றும் இதயக் குழாய்களில் ஏற்படும் பிரச்சினைகளை தடுத்து உயிரை காக்கிறது.

  மாங்கோ ஐஸ் டீ

  மாங்கோ ஐஸ் டீ

  இந்த தேநீரில் சுவையான மாம்பழ கூழை பயன்படுத்தி தயாரிக்கின்றனர்.

  தேவையான பொருட்கள்

  2 மீடிய வடிவ அல்பன்ஸோ மாம்பழம் (மற்ற மாம்பழங்களையும் பயன்படுத்தலாம்)

  3 டேபிள் ஸ்பூன் பிளாக் டீ அல்லது டீ பேக்ஸ்

  3 கப் தண்ணீர்

  லெமன் ஜூஸ்

  சுத்திகரிக்கப்படாத சர்க்கரை

  ஜஸ் கட்டிகள்

  பயன்படுத்தும் முறை

  மாம்பழத்தின் தோலை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

  மாம்பழ கூழ் தயாரித்து இரண்டு மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்

  கொஞ்சம் தண்ணீரை சுட வையுங்கள்

  இப்பொழுது ப்ளாக் டீயை சூடுபடுத்திய தண்ணீரில் சேர்க்கவும். நன்றாக கலக்கவும்

  இப்பொழுது 5 நிமிடங்கள் வரை காய்ச்ச வேண்டும்

  பிறகு டீயை வடிகட்டி 20 நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவும்

  டீ குளர்ச்சியானதும் அதை மிக்ஸி சாரில் ஊற்றவும்

  இப்பொழுது அதனுடன் குளிர வைத்த மாம்பழ கூழ், ஐஸ், லெமன் ஜூஸ் மற்றும் சர்க்கரை போன்றவற்றை சேர்க்கவும்

  நன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.

  ஒரு நீளமான கண்ணாடி கிளாஸில் டீ யை ஊற்றி புதினா இலைகளை அப்படியே தூவி விடவும்.

  அப்படியே இந்த சில்லென்ற மாங்கோ டீ யை பருகி கொண்டாடுங்கள்.

  சூடான மாங்கோ டீ

  சூடான மாங்கோ டீ

  தேவையான பொருட்கள்

  1 டீ ஸ்பூன் மாவிலைகள் (பச்சை அல்லது கருப்பு நிற இலைகள்)

  சர்க்கரை அல்லது தேன்

  பயன்படுத்தும் முறை

  சூடான நீரில் மாவிலைகளை சேர்க்கவும்

  8-10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்

  டீ யை வடிகட்டி கொள்ளவும்

  ஒரு ஸ்பூன் தேன் அல்லது சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை கலக்கவும்

  ஒரு கப்பில் ஊற்றி பரிமாறவும்

  சுடச்சுட மாங்கோ டீ ரெடி

  இந்த மாங்கோ டீ யை பருகி உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாமே.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  2 Simple Ways To Prepare Mango Tea

  Did you know that you can make mango tea and enjoy most of the benefits of mangoes? Well, it’s made from leaves, so not sure if it would taste exactly like a yummy mango. We are going to show you how to make this healthy ice and warm mango tea.it gives health benefits of diabetes, hypertension problem and so on.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more