Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
ஆப்பிளை அப்படியே சாப்பிடுவதை விட வேகவைத்து சாப்பிடுவது தான்... ஏன் தெரியுமா?
ஆப்பிள் பழத்தை வேகவைத்து சாப்பிடுவதன் மூலம் உண்டாகும் அற்புதமான நன்மைகள் பற்றி இங்கே விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
சில மக்கள் தங்கள் உணவுப் பழக்கத்திலயே வேக வைத்த ஆப்பிளை சேர்த்து வருகின்றனர்.

இந்த ஆப்பிள் உணவு உங்கள் உட் எடையை குறைக்க பெரிதும் பயன்படுகிறது. உடல் எடையை குறைக்க ஏகப்பட்ட முறைகள் இருந்தாலும் ஆப்பிள் உணவு முறை மிகவும சிறந்தது.

ஊட்டச்சத்துக்கள்
வேக வைத்த ஆப்பிளில் நிறைய வித்தியாசமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

நார்ச்சத்து உணவுகள்
வேக வைத்த உணவில் ஏராளமான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. எனவே இது சீரண சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. எனவே நமது சீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

எளிதாக சீரணித்தல்
இந்த வேக வைத்த உணவு எளிதாக சீரணிக்கும். இது உங்கள் சீரண சக்தியை மேப்படுத்தி சீரண மண்டல வேலையை சுலபமாக்குகிறது. சீரண ஹார்மோனை அதிகரிக்கிறது.

மெட்டா பாலிக் அளவு
வேக வைத்த ஆப்பிள் உங்கள் மெட்டா பாலிக் அளவை அதிகரிக்கிறது . இதனால் அதிக ஆற்றல் நமது உடலுக்கு கிடைக்கிறது.

உடல் எடையை பராமரித்தல்
வேக வைத்த ஆப்பிளை சாப்பிட்டு உங்கள் உடல் எடையை பராமரிக்கலாம். இதன் நார்ச்சத்துகள் உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

மலச்சிக்கல்
வேக வைத்த ஆப்பிள் உங்கள் மலச்சிக்கலை சரி செய்கிறது. உணவில் உள்ள முக்கியமான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி மலம் வெளியேறுவதை இலகுவாக்குகிறது.

நெஞ்செரிச்சலை தவிர்த்தல்
உங்கள் வயிற்று பிரச்சினையை போக்க இது ஒரு சிறந்த உணவாகும். இது நெஞ்செரிச்சலை சரி செய்கிறது. உங்கள் வயிற்றில் அசெளகரியமான அறிகுறிகள் தென்பட்டால் வேக வைதத ஆப்பிளை பயன்படுத்தலாம். இதை நீங்கள் சாலட்டில் கூட சேர்த்து கொள்ளலாம்.

வயிறு நிரம்பிய எண்ணம்
வேக வைத்த ஆப்பிளில் கிடைக்கும் ஆற்றல் நீண்ட நேரம் இருப்பதால் உங்களுக்கு நீண்ட நேரம் பசி ஏற்படுவதில்லை. எனவே வயிறு நிரம்பிய எண்ணம் ஏற்படும்.

இரத்த அழுத்தம்
வேக வைத்த ஆப்பிள் உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. எனவே உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க இது ஒரு சிறந்த உணவாகும். இரத்த அழுத்தத்தால் ஏற்படும் தலைவலி போன்றவற்றை சரி செய்கிறது.

இரத்த ஓட்டம்
வேக வைத்த ஆப்பிள் உங்கள் இரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. இரத்த குழாய்களில் படிந்துள்ள கொழுப்பை கரைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. எனவே கருவில் வளரும் குழந்தைக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்க இது உதவுகிறது.

கொலஸ்ட்ரால்
வேக வைத்த ஆப்பிள் உடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை சரியான விதத்தில் வைக்கிறது. எல்டிஎல் எனற கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. இதனால் இதய நோய்கள், பக்க வாதம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

ஆரோக்கியமான இதயம்
இது நமது உறுப்புகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை இரத்தம் ஓட்ட வழியாக கொடுப்பதால் இதயம் செயலிழப்பு போன்றவை வராமல் தடுக்கலாம்.

இரத்த சர்க்கரை
வேக வைத்த ஆப்பிள் நமது இரத்தத்தில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. எனவே தினமும் ஒரு வேக வைத்த ஆப்பிளை சேர்த்து கொள்ளுங்கள்.

வேக வைத்த ஆப்பிள் தயாரிக்கும் முறை
குறைந்த கலோரி மற்றும் சர்க்கரையை உடைய சிவப்பு ஆப்பிளை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
நன்றாக சுத்தம் செய்து விட்டு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள்
அதில் ஆப்பிளை போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விடவும். அதன் சதைப்பகுதி கருப்பாக மாறும் வரை இதை செய்யவும்.
பிறகு ஆறியதும் பரிமாறவும்.

கவனத்தில் வைக்க வேண்டியவை
வேகவைத்த ஆப்பிளை அதிகளவில் எடுத்துக் கொள்ளாதீர்கள், இது உங்கள் இரத்த அழுத்தத்தை குறைத்து விடும். இதனுடன் எப்பொழுதும் சர்க்கரை சேர்க்காதீர்கள். இது உங்கள் நீரழிவு நோயை அதிகப்படுத்த வாய்ப்புள்ளது.
விஷமுள்ள ஆப்பிளை சாப்பிடாதீர்கள். இது வாந்தி மற்றும் உடல் நல பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
ஆப்பிளை வேக வைக்கும் போது சுத்தமான நீரை பயன்படுத்துங்கள். இது பாக்டீரியா தொற்று ஏற்படுவதை தடுக்கும்.
எனவே வேக வைத்த ஆப்பிளை சரியான அளவு பயன்படுத்தி எல்லா நன்மைகளையும் பெறுங்கள்.



Click it and Unblock the Notifications
