For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜூனுக்கு 3 நாள்தான் இருக்கு... இந்த மாசத்துல கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?

இந்த கோடைகாலத்தில் நாம் ஐஸ் க்ரீம், தண்ணீர் பழம், பழச்சாறுகள் இது போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அவை நமது உடற் சூட்டை தணிப்பதோடு உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களையும் வெளியேற்றி நமது உடலை சுத்

|

இந்த கோடைகாலத்தில் வெயிலில் சிறிது தூரம் நடந்தாலே போதும் நமது உடலில் உள்ள ஒட்டுமொத்த சக்தியையும் சூரிய வெப்பம் ஊறிஞ்சிவிடும். இது மட்டுமல்லாமல் உடம்பு சூட்டை தணிக்க முடியாமல் சில உடல் உபாதைகளையும் பெற்று தவிப்போம். என்ன ஒரு நிம்மதி கத்திரி வெயில் ஒருவழியா முடிஞ்சிடுச்சு.

how to maintain body cool during summer season

அதிகமான வியர்வை வெளியேற்றத்தால் சோர்வு, நீர்ச்சத்து குறைவு, வேர்க்குரு, வேனில் கட்டி போன்ற ஏராளமான பாதிப்புகளையும் இந்த கோடைகாலத்தில் நாம் சந்திக்க நேரிடும். சரி இதற்கு என்ன தான் தீர்வு என்று யோசிக்கிறீர்களா? நமது உடல் சூட்டை குறைத்து உடம்பை குளு குளு ஏசி மாதிரி வைச்சுக்கிட்டாலே போதும் கோடையை ஓரளவிற்கு சமாளிச்சுடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜூன் மாத வெயில்

ஜூன் மாத வெயில்

அதற்கு நாம் குளுமையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். ஐஸ் க்ரீம், தண்ணீர் பழம், பழச்சாறுகள் இது போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அவை நமது உடற் சூட்டை தணிப்பதோடு உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களையும் வெளியேற்றி நமது உடலை சுத்தமாக்குகிறது.

சரி வாங்க அப்படிப்பட்ட குளுமையா உணவுகளின் பட்டியலை இப்பொழுது பார்க்கலாமா.

ஆரஞ்சு

ஆரஞ்சு

கோடைகாலத்தில் மிகச்சிறந்த பழவகைகளுள் ஒன்று ஆரஞ்சு பழம். இதில் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த பொட்டாசியம் தசை பிடிப்பிற்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது. மேலும் இதில் 80% நீர்ச்சத்து இருப்பதால் கோடைகாலத்தில் உங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுக்கிறது. இதைத் தவிர இதில் விட்டமின் பி1, பாந்தோத்தேனிக் அமிலம், போலேட், விட்டமின் ஏ, கால்சியம், காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்றவைகள் உள்ளன.

ப்ளாக் பெர்ரீஸ் மற்றும் ராஸ்பெர்ரி

ப்ளாக் பெர்ரீஸ் மற்றும் ராஸ்பெர்ரி

இந்த பழங்களை நாம் அதிகமாக கவனிப்பது இல்லை. ஆனால் இதில் மிகச் சிறந்த குணங்கள் உள்ளன. இதில் அதிகளவில் விட்டமின் சி, நார்ச்சத்து போன்ற கோடைகாலத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

ராஸ்பெர்ரியில் ஆந்தோசயின்கள், பைட்டோ கெமிக்கல்கள் ஆன க்வெர்செடின் போன்ற புற்றுநோயை தடுக்கும் பொருட்கள் உள்ளன. ப்ளாக்பெர்ரியில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை கல்லீரல், குடல், நுரையீரல் மற்றும் உணவுக் குழல் புற்று நோய் போன்றவற்றை தடுக்கிறது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

கோடை காலத்தில் ஏற்படும் நீர்ச்சத்து பற்றாக்குறையை தவிர்க்க வெள்ளரிக்காய் பெரிதும் உதவுகிறது. இந்த வெள்ளரிக்காய் உங்கள் உடலை குளு குளுவென குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். எனவே லெமன் மற்றும் வெள்ளரி கலந்த ஜூஸ் இந்த கோடைகாலத்தில் உங்கள் உடல் சூட்டை தணிக்க உதவும்.

தண்ணீர் பழம்

தண்ணீர் பழம்

கோடை காலத்தில் சீசன் பழம் என்றால் அது தண்ணீர் பழம் தான். இது உங்கள் உடலுக்கு ஒரு இயற்கையான ஏசி மாதிரி செயல்படும். இதில் 92 % தண்ணீர் சத்து மட்டுமே உள்ளது. மேலும் இதில் விட்டமின் ஏ, விட்டமின் பி6, விட்டமின் சி மற்றும் நிறைய லைக்கோபீன், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவைகள் உள்ளன.

பீச் பழங்கள்

பீச் பழங்கள்

இதுவும் குளுமையான சீசன் வகை பழங்கள். இதிலும் விட்டமின் ஏ, விட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன. ஆரோக்கியமான சருமத்திற்கு இது மிகவும் சிறந்தது. இதில் 35-50 கலோரிகள் அடங்கியுள்ளன. இது உங்கள் டயட்டிற்கு சிறந்த உணவு நண்பனாக இருக்கும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளும், பீனட் பட்டரும் சேர்ந்த ஸ்நாக்ஸ் கண்டிப்பாக இந்த கோடை காலத்திற்கு மிகச் சிறந்த உணவாக இருக்கும். இதில் 4 கிராம் நார்ச்சத்து, 95% கலோரிகள் அடங்கியுள்ளன. கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் இதில் உள்ளது. எனவே இது உங்கள் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். இதைத் தவிர விட்டமின் பி, விட்டமின் சி மற்றும் இதர ஊட்டச்சத்துக்களும் நமக்கு நன்மை அளிக்கிறது.

பைன் ஆப்பிள்

பைன் ஆப்பிள்

இது இயற்கையான ஸ்மூத்தி பூஸ்டர் ஆகும். இதில் என்சைம்களான ப்ரோமெலின் இருப்பதால் வெயிலினால் உடலில் ஏற்படும் அழற்சியை தடுக்கிறது. மேலும் இதில் விட்டமின் சி, விட்டமின் பி6, நார்ச்சத்து, போலேட், பாந்தோனிக் அமிலம், மாங்கனீஸ், விட்டமின் பி 1 சத்துக்கள் அடங்கியுள்ளன.

யோகார்ட்

யோகார்ட்

கோடை காலத்தில் உங்கள் உடலை குளு குளுவென வைக்க யோகார்ட் பெரிதும் உதவுகிறது.எனவே ஏராளமான ஊட்டச்சத்துகள் அடங்கிய யோகார்ட்டை உங்கள் உணவில் சேர்த்தாலே போதும் வெயில் காலத்திலும் சில்லென்று உணரலாம். இதிலுள்ள விட்டமின் பி சத்து வெயில் காலத்தில் ஏற்படும் கொப்புளங்கள் மற்றும் அல்சரை குணப்படுத்துகிறது.

லெமன்

லெமன்

நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் லெமன் முக்கியமானது. நீங்கள் வெறுமனே லெமன் மற்றும் தண்ணீர் கலந்து குடித்தாலே போதும் எந்த நோயும் உங்களை அண்டாது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். காரணம் இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, சருமத்தையும் அழகாக வைத்திருக்க உதவுகிறது.

சீமை சுரைக்காய்

சீமை சுரைக்காய்

கோடை காலத்திற்கு ஏற்ற ஒரு காய் தான் சீமை சுரைக்காய். இதில் விட்டமின் சி மற்றும் பைட்டோ நியூட்ரிஷன் அடங்கியுள்ளன. இதிலுள்ள மாங்கனீஸ் சூரியனால் ஏற்படும் சரும பாதிப்பு களிலிருந்து தடுக்கிறது. மேலும் சரும கொலாஜன் உற்பத்தியையும் ஆரோக்கியமான எலும்பு திசு வளர்ச்சிக்கும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Foods To Keep Your Body Cool In Summer

During summer season The hot and humid weather also causes water loss from your bodies through sweat, which means extra effort is needed to replace these valuable fluids with foods. Read on to know the foods that will help to keep your body cool in summer. Orange, water melon, pine apple these are more best for summer season.
Story first published: Monday, May 28, 2018, 17:36 [IST]
Desktop Bottom Promotion