மீன் முள்ளை ஏன் சாப்பிடுவது நல்லது?

Posted By: Ambika Saravanan
Subscribe to Boldsky

குழந்தைகளுக்கு தாய்மார்கள் வற்புறுத்தி செய்யும் செயல்களில் ஒன்று பால் குடிக்க சொல்வது. காலையில் பல் தேய்த்தவுடன் மற்றும் இரவில் உறங்கச் செல்லும் முன் எல்லா தாய்மார்களும் குழந்தைகள் பால் குடிக்க வேண்டும் என்று விரும்புவர். ஆனால் பல குழந்தைகள் இதனை செய்வதே இல்லை. பால் குடித்தால் தான் பல் வெள்ளையாக இருக்கும், உயரமாக வளர முடியும், என்று பல்வேறு செய்திகளில் கூறி அந்த பாலை குடிக்க செய்வது வழக்கம்.

அப்படி என்னதான் இருக்கிறது அந்த பாலில்? கால்சியம்! இந்த சத்து உடலில் இல்லையென்றால் வலிமை இல்லாத எலும்புகளால் உடல் நொறுங்கி விடும். தசைகளும் நரம்புகளும் செயலற்று போகும். இப்போது புரிகிறதா? கால்சியம் எவ்வளவு அவசியம் என்று ! வலுவூட்டப்பட்ட உணவுகளில் அல்லது மாத்திரைகளில் கிடைக்கப்படும் கால்சியம் சத்தை விட இயற்கையான உணவில் கிடைக்கும் கால்சியம் சத்துதான் சிறந்தது.

இயற்கையான கால்சியம் சத்து அதிகமாக கிடைக்கும் உணவு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்:

பால்:

ஒரு சராசரி கப் அளவு பால் குடிப்பது ஒரு நாளின் கால்சியம் தேவையில் மூன்றில் ஒரு பங்கை பூர்த்தி செய்கிறது. குறைந்த கொழுப்பு பால், ஆடையுடன் கூடிய பால் என்று எந்த விதத்தில் இருந்தாலும் ஒரு கப் பாலில் 300மிகி அளவு ஊட்டச்சத்துகள் உள்ளது. பாலின் தரத்தை பொறுத்து இந்த அளவு மாறுபடும்.

வெறும் பால் குடிப்பது கஷ்டமாக இருந்தால் பாலுடன் சாக்லேட் அல்லது பழங்கள் அல்லது ஓட்ஸ் போன்றவற்றை சேர்த்து சாப்பிடலாம். வெயில் காலத்தில், இந்த கலவையை குளிர்ச்சியூட்டி சாப்பிடலாம்.

பாலை மற்றொரு விதத்தில் உடலுக்குள் செலுத்தும் வழி கொழுப்பில்லாத பால் பவுடர் . இந்த பால் பவுடரின் ஒரு டேபிள் ஸ்பூனில் 50மிகி கால்சியம் உள்ளது. இனிப்புகளில், பானங்களில் மற்றும் உணவுகளில் எளிதில் கரைய கூடியது. இதில் கலோரி மற்றும் சர்க்கரை இல்லாததால் நீரிழிவு நோயாளிகள் மற்றும் எடையை பற்றி நினைப்பவர்கள் எளிதில் பயன்படுத்தலாம்.

யோகர்ட்:

யோகர்ட்:

நல்ல பாக்டீரியாக்களுடன் கூடிய குடலின் ஆரோக்கியம் பற்றி நாம் நிறைய பேசியிருக்கிறோம். யோகர்டில் இருக்கும் அதிக அளவிலான ப்ரோபையோடிக்குகள் குடலில் நல்ல பாக்டீரியா உற்பத்தியை அதிகரிக்கிறது. பாலின் சிறந்த ஒரு மாற்றாக யோகர்ட் பாவிக்கப்படுகிறது.175மிலி அளவு யோகர்ட் 338மிகி அளவு கால்சியம் கொண்டது.

பழங்கள், சிறிதளவு தேன் மற்றும் யோகர்ட் சேர்த்து உண்பது சிறந்த காலை உணவாக கருதப்படுகிறது. வெறும் யோகர்ட்டை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம். யோகர்ட் மேல் சிறிதளவு நட்ஸ் தூவி உண்ணலாம்.

 பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்:

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்:

பால் பொருட்களை தவிர பருப்பு வகையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. சமைக்கப்படாத 1 கப் காராமணி பருப்பில் , 359 மிகி அளவு கால்சியம் உள்ளது. 1 கப் பச்சை பருப்பில் 273 மிகி அளவு கால்சியம் உள்ளது. நாம் தினசரி சமையலில் சேர்த்துக் கொள்ளும் பருப்புகளால் குறைந்த பட்சம் 30 மிகி அளவில் இருந்து 100 மிகி அளவு வரை கால்சியம் சத்து கிடைக்கிறது.

கீரை:

கீரை:

சைவ உணவை உண்ணுகிறவர்களுக்கு கீரை ஒரு வரப்பிரசாதம். இதில் கால்சியம் சத்து மிகவும் அதிகமாக உள்ளது. 1 கப் வேக வைத்த கீரையில் 357மிகி அளவு கால்சியம் சத்து உள்ளது. லெட்யூசில் உள்ள தலை பாகத்தில் மட்டும் 97ம் மிகி அளவு கால்சியம் உள்ளது. ½ கப் நூல்கோல் கீரையில் 99 மிகி அளவு கால்சியம் உள்ளது. வேக வைத்த பரட்டை கீரையில் 94 மி கி அளவு கால்சியம் உள்ளது.

மீன்:

மீன்:

கால்சியம் என்றதும் நமது நினைவுக்கு தவறாமல் வருவது மீன். மென்மையான எலும்புகள் கொண்ட மீன்களை தேர்ந்தெடுப்பதன்மூலம், அந்த முள்ளையும் மென்று விழுங்கலாம் . எலும்புகளில் தான் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. சால்மன் மற்றும் சார்டின் வகை மீன்கள் கால்சியம் சத்தில் முதல் இடம் பிடிக்கிறது. 50 கிராம் சார்டின் உண்பதால் 340 மிகி அளவு கால்சியம் கிடைக்கிறது. 85 கிராம் சால்மன் மீன் உண்பதால் 241 மிகே இ அளவு கால்சியம் சத்து கிடைக்கிறது.

கால்சியம் சத்து எலும்புகளையும் பற்களையும் வலிமையாக்குவதற்கு தேவைப்படுகின்றன. தசைகள் விரியும் திறன், இரத்தம் உரைதல், நரம்புகளுக்கு செய்திகளை கடத்துதல் போன்றவற்றிக்கு கால்சியம் இன்றியமையாததாகும்.

நமது உடலில் இருக்கும் நகம், முடி, சிறுநீர், மலம், வியர்வை போன்றவற்றால் தினமும் கால்சியம் சத்து வெளியேறி கொன்டே இருக்கிறது. ஆகவே அதிக அளவு கால்சியத்தை உட்கொள்ளும்போது தான் உடலின் இயக்கம் சீராக இருக்கும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Try these calcium rich foods to strengthen your bones

Try these calcium rich foods to strengthen your bones