பிஸ்கட், சாக்லேட், டூத் பேஸ்ட் இதுல எல்லாம் ஒரே மாதிரியான ஆபத்து இருக்கிறது!! அது என்ன தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

எதைத்தான் சாப்பிடுவது என யோசிக்க வைக்கின்றது இன்றைய தலைமுறை. சாப்பிடும் காய்கறியிலிருந்து . குடிக்கப்படும் பால் வர விஷம் என்றால் என்னதான் செய்வது. இயற்கையில் விளைகின்ற காய்கறிகளை திரும்பவும் நாடும் வரை இதற்கு விமோசனம் கிடையாது.

அதுமட்டுமல்லாது. இயற்கையானவற்றை உபயோகப்படுத்தால் நிறத்திற்காகவும் சுவைக்காகவும் உபயோகப்படுத்தும் செயற்கையான உணவுகளும் அப்படித்தான் ஆபத்தை தரும். நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இந்த பொருட்களை தொடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு :

ஆய்வு :

யூ.கே விலிருக்கும் நேஷனல் இன்ஸிடிட்யூட் ஆஃப் அக்ரிகல்ச்சர் ரிசர்ச் என்ற பல்கலைக் கழகம் இது தொடர்பான ஆய்வு எடுத்தார்கள்.

குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டிலிருந்து உபயோகப்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் வரை அவர்கள் பயன்படுத்தும் ஒரு ரசாயனம்தான் "டைட்டானியம் டை ஆக்ஸைட் ". இது மிக மோசமான விளைவுகள் தரக் கூடியது. குறிப்பாக புற்று நோயை தரக் கூடியது.

 டைட்டானியம் டை ஆக்ஸைட் :

டைட்டானியம் டை ஆக்ஸைட் :

" டைட்டானியம் டை ஆக்ஸைட்" ஒரு ப்ளீச்சிங்க் பொருளாகும் இதனை டூத் பேஸ்ட்டில் சேர்க்கிறார்கள். எனவே இயற்கை முறையில் தயாரிக்கப்படும் டூஸ்பேஸ்ட் சாலச் சிறந்தது.

உணவுப் பொருட்கள் :

உணவுப் பொருட்கள் :

பிஸ்கெட்டுகள், சூயிங்கம் ஆகியவற்றிலும் க்ரீம் செய்யவும் மிருதுவாக்கவும் இந்த ரசாயனத்தை அவர்கள் சேர்க்கிறார்கள். இவை ரத்தம் மூலமாக குடல்களில் நிரந்தரமாக தங்கி புற்று நோயை வரவழைக்கும் என்று கூறுகிறார்கள்.

பெயின்ட் :

பெயின்ட் :

இந்த டைட்டானியம் டை ஆக்ஸைட் சுவருக்கு பூசப்படும் பெயின்ட்டில் உள்ளது. இவை புற்று நோயை தோற்றுவிக்கும் என முந்தைய ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை :

முன்னெச்சரிக்கை :

இப்படி சாப்பிடும் பொருட்களிலும் , உடல் பராமரிப்பிற்காக பயன்படுத்தப்படும் பொருட்களிலும் மிகக் கேடு விளைவிக்கும் ரசாயனத்தை சேர்ப்பது மிகவும் கவலை தரும் விஷயம். ஆகவே எந்த வித தீங்கும் விளைவிக்காத கடலைமிடாய் தேன் மிட்டாய் முறுக்கு என வீட்டில் செய்யப்படும் திண்பண்டங்களையே சாப்பிட ஆரம்பியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This dangerous chemical agent used to tooth paste, biscuit

A cancer causing agent is present in eatable things and personal care products,
Story first published: Saturday, January 28, 2017, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter