தினமும் சணல் விதைகளை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா?

Written By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

சணல் விதைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். இதில் உள்ள விட்டமின் ஈ, மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, அமினோ அமிலங்கள், ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

ஆனால் இந்த விதைகளின் பயன்பாடு தெரியாமல் சிலர் மட்டுமே உபயோகிக்கின்றனர். இதை நாம் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இந்த விதைகள் அதிக கலோரிகளை கொண்டு இருப்பதால் உணவில் சேர்ப்பதற்கு முன் உங்கள் டயட் கலோரிகளை வேறு விதத்தில் குறைத்துக் கொள்ளவும். சரி வாங்க இதன் பயன்பாடு பற்றி தெரிந்து கொள்ளவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பயன்#1:

பயன்#1:

இதில் அதிகமான புரோட்டீன்ஸ் உள்ளது. மேலும் இதில் அமினோ அமிலங்களும் இருப்பதால் சைவப்பிரியர்களுக்கு சிறந்த உணவாக அமையும். 2 டேபிள் ஸ்பூன் சணல் விதைகளை சாலட் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

பயன்#2:

பயன்#2:

தினமும் சணல் விதைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்களது இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. மேலும் பசியை நமது கட்டுப்பாட்டில் வைக்கும்.

பயன் #3 :

பயன் #3 :

இந்த விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. இதில் அடங்கியுள்ள காமா-லினோலினிக் அமிலம் ஹார்மோன்கள் நன்றாக செயல்பட உதவுகிறது.

பயன் #4:

பயன் #4:

இந்த விதைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு சக்தி உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. மேலும் இவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் கீழ்வாதப் பிரச்சினைகள் சரியாகும்.

 பயன் #5:

பயன் #5:

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கிடைக்க நாம் மீன் எண்ணெய்யை மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த விதைகளில் உள்ள கொழுப்பு அமிலங்களின் அழற்சி எதிர்ப்பு சக்தி உங்கள் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

பயன் #6:

பயன் #6:

இந்த விதைகளில் உள்ள காமா-லினோலினிக் அமிலம் உங்களது முடி மற்றும் சருமத்திற்கு சிறந்தது. உங்களது முடி, நகங்கள் மற்றும் சருமத்திற்கு சிறந்தததாகவும் உள்ளது.

மற்ற பயன்கள் :

மற்ற பயன்கள் :

சணல் விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், புற்று நோய்க்கான எதிர்ப்பு சக்தி, மனநோய்க்கான எதிர்ப்பு சக்தி மற்றும் மன அழுத்தத்திற்கான எதிர்ப்பு சக்திகள் உள்ளன.

இதை எப்படி சாப்பிடலாம் :

இதை எப்படி சாப்பிடலாம் :

சாலட் உடன் சேர்த்து சாப்பிடலாம். மேலும் இந்த விதைகளை முளை கட்டி சான்ட்விச் உடன் சாப்பிடலாம். இதிலிருந்து கிடைக்கும் சணல் பால் குடித்தாலும் நல்லது.

என்னங்க சணல் விதைகளின் பயன்பாட்டை அறிந்து கொண்டீங்களா?. இனி தினமும் உங்கள் உணவில் சேர்த்து பயன் பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons To Eat Hemp Seeds

Reasons To Eat Hemp Seeds
Story first published: Tuesday, June 13, 2017, 16:15 [IST]