For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நட்ஸ் எந்த நேரத்துல சாப்பிட்டா உடல் கொழுப்பு குறையும்? எப்போ சாப்பிடக் கூடாதுங்கற டெக்னிக் தெரியுமா?

ட்ஸ் சாப்பிடுவதால் உண்டாகும் பெருமளவு நன்மைகள் மற்றும் எந்த நேரத்தில் சாப்பிட்டால் கொழுப்புகள் கரையும் என்று தெரிந்து கொள்ள இக்கட்டுரை உதவுகிறது.

|

நட்ஸ் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி நீங்க தெரிஞ்சு வச்சிருந்திருப்பீங்க. ஆனா எந்த நட்ஸ் எப்போ சாப்பிட்டா அதன் நன்மைகள் கிடைக்கும் என்ற உண்மையும் மருத்துவர்கள் சொல்லியிருக்காங்க.

உடல் கொழுப்பை குறைய வைக்க நட்ஸ் பெரிதும் உதவுகின்றன. ஒவ்வொரு நட்ஸிற்கும் ஒரு பண்பு உண்டு. எதை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் எப்போது சாப்பிடக் கூடாது என பல விஷயங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நட்ஸில் விட்டமின், மினரல், கால்சியம், ஒமேகா-3, அமினோ அமிலங்கள் இன்னும் பலப்பல சத்துக்கள் நிரம்பியிருக்கிறது. சத்துக்களின் கோபுரம் என்றே நட்ஸ்களை அழைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் மேஜிக் :

நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் மேஜிக் :

தினமும் நட்ஸ் சாப்பிட்டு வந்தால் உண்மையில் அதிசயம் நடக்கும். பெரும்பாலான நோய்களை தடுக்கும். உடல் பருமன், கொலஸ்ட்ரால், சர்க்கரை வியாதி, அனிமியா போன்ற நோய்களை தடுக்கும்.

 வால் நட் :

வால் நட் :

வால் நட் புற்று நோயை குறிப்பாக மார்பக புற்று நோயை தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மூளைக்கும் மிகவும் நல்லது. அத்லுள்ள ஒமேகா -3 மூளைக்கு நன்மைகளை தரக் கூடியது.

 பிஸ்தா :

பிஸ்தா :

பிஸ்தா ரத்த சோகையை தடுக்கும். நோய் எதிர்ப்பு செல்களை தூண்டும். நல்ல சருமத்தை தரும். முதுமையை தடுக்கும்.

முந்திரி :

முந்திரி :

முந்திரி ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. கெட்ட கொழுப்பை மற்றும் கொலஸ்ட்ராலையும் கரைக்கும். இதயத்திற்கு மிகவும் நன்மைகளை தரும்.

 நட்ஸ் சாப்பிடுவதற்கான நேரம் :

நட்ஸ் சாப்பிடுவதற்கான நேரம் :

காலை

ஊற வைத்த பாதாம் காலையில் எடுத்துக் கொண்டால் மிகச் சிறந்த நன்மைகளை பெற முடியும்.

மாலை :

மாலை :

பிஸ்தா மற்றும் முந்திரியை மாலையில் எடுத்துக் கொண்டால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை ரெட்டிப்பாக்கலாம்.

இரவு :

இரவு :

வால் நட்டை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்வதுதான் சிறந்த வழி. இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி தூக்கத்தை தரும்.

எப்போது தவிர்க்க வேண்டும்?

எப்போது தவிர்க்க வேண்டும்?

உணவிற்கு பின் சாப்பிடுவதை தவிருங்கள். இவை மருந்துகள் அல்ல. நல்ல பசி எடுக்கும் போது நட்ஸ் சப்பிடுவதால் அவற்றின் அட்டகாசமான சத்துக்கள் உடலில் முழுமையாக போய் சேரும். வறுத்த நட்ஸ் சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது.

எத்தனை அளவு சாப்பிட வேண்டும் :

எத்தனை அளவு சாப்பிட வேண்டும் :

தினமும் கையளவு நட்ஸ் சாப்பிடலாம். தோராயமாக 10- 15 நட்ஸ் சாப்பிடலாம். அதற்கு மேலும் சாப்பிடலாம். நன்மைகளை தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ideal time to eat Nuts and its benefits to decrease cholesterol

Ideal time to eat Nuts and its benefits to decrease cholesterol
Story first published: Friday, May 26, 2017, 11:35 [IST]
Desktop Bottom Promotion