நம்பி வாங்கும் ஆர்கானிக் பொருட்கள், உண்மையில் ஆர்கானிக்தானா? எப்படி காய்களை வாங்குவது?

Posted By: Aashika
Subscribe to Boldsky

உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு வந்திருக்கும் இதே நேரத்தில் தான் அவை குறித்த அறியாமையும் இருந்துவருகிறது. சாதாரணமாக மற்றவர்கள் பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிகப்படியான ரசாயனம் மற்றும் பூச்சி மருந்து கலந்திருக்கும் என்று கிளப்பி விட எல்லாருடைய மோகமும் இப்போது ஆர்கானிக் பக்கம் தான்.

How To Identify Organic Foods

ஆர்கானிக் பொருட்கள் என்று சொல்லி அதிக விலை வைத்து விற்கப்படுவதை கூட மறு கேள்வி இன்றி வாங்கிப்பயன்படுத்துகிறோம். ஆனால் அது உண்மையிலேயே ஆர்கானிக் தானா என்பதை சோதித்திருக்கிறோமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அளவு :

அளவு :

நீங்கள் வாங்கும் ஆர்கானிக் உணவு கச்சிதமான அளவுடன் பளபளப்பாக ஃப்ரஷ்ஷாக இருந்தால். அதைவாங்காதீர்கள். அதில் நிச்சயமாக கலப்படம் இருக்கும். காய்கறிகள் மற்றும் பழங்களைப் பறித்து ஒரு நாளைக்குள் அதன் நிறம் மாறுபடுவதோ அல்லது சுருங்கவோ செய்யும். இவை எதுவும் இல்லையென்றாலும் தவிர்த்திடுங்கள். அதே போல பெரிய அளவிலான காய்கறி பழங்களைத் தவிர்த்திடுங்கள்.

பூச்சி:

பூச்சி:

பூச்சி கடித்த பழங்கள்,காய்கள் ஆரோக்கிய குறைவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில்

அது தான் ஆரோக்கியமானது.பூச்சிகள் ஏதுமில்லையென்றால் சந்தேகம் கொள்க. அந்தந்த சீசன்களில் கிடைக்கும்

பொருட்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வாங்குங்கள்.

நிறங்கள் :

நிறங்கள் :

வாங்கும் பொருட்கள் பளீச் நிறத்துடன் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. கடைக்காரர்கள் பளீச் நிறத்திற்காக ரசாயனங்களை துணைக்கு அழைப்பர். அதே போல ஆர்கானிக் பொருட்கள் சில நாட்கள் மட்டுமே தாக்குபிடிக்கும்.

சமையல் :

சமையல் :

ஆர்கானிக் பொருட்களை நீண்ட நேரம் தேவைப்படாது. அரிசிச் சோறு என்றால் சமைத்த மறுநாள் கூட அது நன்றாக இருக்கும். சமைத்த அன்றே நொதித்திருந்தால் அது ஆர்கானிக் அல்ல. அதே போல ஆர்கானிக் காய்கறிகள் வேக அதிக

நேரம் தேவைப்படாது.

பீன்ஸ் :

பீன்ஸ் :

பீன்ஸில் அதிகமாக சின்ன சின்னப் புள்ளிகள் இருந்தால் தவிர்த்திடுங்கள். பீன்சில் அதிகப்படியான கெமிக்கல்கள் தெளிக்கப்பட்டிருந்தால் இப்படியான புள்ளிகள் வரும். இதன் நிறம் இளம் பச்சை நிறத்தில் இருக்கும். அதீத வண்ணத்துடன் இருந்தாலும் அது ஆர்கானிக் ஆக இருக்க வாய்ப்பில்லை.

பீட்ரூட் :

பீட்ரூட் :

எல்லாப்புறங்களில் ஒரே மாதிரியாக சற்று கடினமானதாக இருக்க வேண்டும். நகத்தைக் கொண்டு லேசாக கீறிப் பார்த்தால் அதில் எளிதாக கோடு போட முடிய வேண்டும். பீட்ரூட் அதன் இலைகளுடன் இருந்தால் மட்டுமே அதை வாங்குங்கள். பீட்ரூட் இலைகளில் அதிகப்படியான இரும்பச்சத்து இருக்கிறது.

அதுமட்டுமின்றி கெமிக்கல்கள் அதிகப்படியாக சேர்ந்திருந்தால் இலைகள் வாடியிருக்கும் அல்லது நிறமாறியிருக்கும். அதனை மறைக்கவே இலைகளை எடுத்து விடுகிறார்கள். அதனால் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

முட்டைகோஸ் :

முட்டைகோஸ் :

பேக் செய்யப்பட்டிருந்தால் நன்று. லேசாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் முட்டைகோஸ்களை தவிர்த்திடுங்கள். பச்சை மற்றும் வெள்ளை நிறமிருந்தால் மட்டும் முட்டைகோஸை தேர்ந்தெடுக்கலாம்.

இலைகள் உதிர்ந்துக் கொண்டேயிருந்தால் முட்டைகோஸ் செடியிலிருந்து பறிக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டிருக்கிறது என்று அர்த்தம்.

கேரட் :

கேரட் :

ஆரஞ்ச் நிறத்தில் எந்த கோடுகளும் இன்றி வலுவலுப்பாக இருந்தால் தவிர்த்திடுங்கள். அதே போல, அதனை நுனிக்காம்பில் நிறமாறியிருந்தாலும் வாங்க வேண்டாம்.

காலி ப்ளவர் :

காலி ப்ளவர் :

காலி ப்ளவரின் நுனி வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் . அது மஞ்சள் நிறமாக மாறியிருந்தாலோ அல்லது நுனியில் கருப்பு நிற பூஞ்சைகள் வந்திருந்தாலோ தவிர்த்திடுங்கள்.

பெரும்பாலும் காலி ப்ளவர்களில் வெள்ளை புழுக்கள் இருக்கும். நிறத்தால் அவற்றை எளிதாக நாம் கண்டுபிடிக்க முடியாது இப்படியான காலிஃப்ளவர்களை தவிர்த்திடுங்கள். பெரும்பாலும் தெளிக்கப்படும் கெமிக்கல்களால் தான் இப்புழுக்கள் காலி ப்ளவரில் வருகிறது.

வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காய் :

இதில் பல வகைகள் இருக்கின்றன. குண்டாக இருக்கும் காய்களையும், இளம் நிறத்தில் இருக்கும் காய்களையும் தவிர்த்திடுங்கள். நீள வாக்கில் வளரக்கூடிய வெள்ளரியை அதன் வடிவத்தில் இருந்தால் மட்டும் வாங்குங்கள். அதன் தோலை எளிதாக நம்மால் நீக்க முடியும் நகத்தைக் கொண்டு லேசகா சுரண்டினாலே வருகிறதா அல்லது அது கடினமாக இருக்கிறதா என்று சோதியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Identify Organic Foods

Some tips to find organic foods
Please Wait while comments are loading...
Subscribe Newsletter