For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி டர்னிப் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 அற்புத நன்மைகள் என்ன தெரியுமா?

டர்னிப் அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இந்த கட்டுரையில் காணலாம்.

By Hari Dharani
|

உடல் ஆரோக்கியத்திற்கு டர்னிப்ஸ் மிக உகந்த பயன்கள் கொண்டவை என்று உங்களுக்கு தெரியுமா?? நம்மில் பெரும்பாலோனோர் டர்னிப்ஸின் பயன்கள் தெரியாது, முட்டைக்கோஸ் கேல் பிராக்கோலி மற்றும் முள்ளங்கி போன்று குறுக்குவெட்டு காய்கள் குடும்பத்தை சேர்ந்தது.

கருவுறுதலில் பிரச்சனையை ஏற்படுத்தும் பி.சி.ஓ.எஸ் பாதிப்பை விரட்டும் 15 உணவுகள்!!

ஆம் டர்னிப்கள் மற்ற குறுக்குவெட்டு குடும்ப காய்களை போலவே மிகவும் சத்தானது. பொதுவாக இதன் கிழங்கு பகுதிகள் உணவில் சேர்த்துக்கொள்ளப் படுகிறது. ஆனால் இதன் இலைகளும் கூட மிகச் சத்தானவை மேலும் சமைக்க உகந்தவை.

Health Benefits Of Turnip

ஒருவருக்கு பரிமாறப்படும் டர்னிப்பில் 1 கிராமம் புரதம், 2 கிராம் நார்ச்சத்து, 6 கிராம் கார்போஹைட்ரெட், மற்றும் 28 கலோரிகள் உள்ளடங்கியுள்ளது. இதில் கொழுப்புசத்து சிறிதும் இல்லை. ஒரு டர்னிப் உங்களுக்கு நாளொன்றுக்கு தேவையான வைட்டமின் "சி" இல் பாதியை தருகிறது. டர்னிப்பின் மேலும் சில முக்கிய பயன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஜீரணசக்தி

ஜீரணசக்தி

டர்னிப்கள் மலச்சிக்கல், வயிற்று வீக்கம், அஜீரணம், வயிற்றுப் போக்கு போன்றவற்றை தடுக்கிறது. டர்னிப்பில் உள்ள நார்ச்சத்து உங்களுக்கு தேவையான ஜீரணசக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை பேணுகிறது.

சீரான இரத்த அழுத்தம்

சீரான இரத்த அழுத்தம்

டர்னிப்பில் உள்ள உண்ணக்கூடிய நைட்ரேட்டுகள் மற்றும் பொட்டாசியம் சத்துகள் இரத்த அழுத்தத்தை சமன் செய்கிறது. மேலும் இதிலுள்ள பொட்டாசியம் உங்கள் உடலில் அதிகமாக இருக்கும் சோடியத்தை வெளியேற்றுகிறது.

இது மேலும் தமனிகளை ஆசுவாசப்படுத்தி, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற வியாதிகள் வருவதை குறைக்கிறது.

புற்றுநோயை தடுக்கிறது

புற்றுநோயை தடுக்கிறது

ஒரு ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்ட உண்மை என்னவெனில் டர்னிப்கள் உள்ள சல்போரபைன் எனும் வேதிப்பொருள் சிலவகை புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. (தோல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், கணைய புற்றுநோய் மற்றும் ப்ரோஸ்டேட் புற்றுநோய்).

மேலும் டர்னிப்பில் உள்ள தாவர ஊட்டச்சத்தான இண்டோல்ஸ் (Indoles) என்பவை பெருங்குடல் புற்றுநோய் செல்களை அழிக்கிறது.

உடல் எடை குறைகிறது

உடல் எடை குறைகிறது

டர்னிப்கள் மிகக்குறைந்த கலோரிகளை உள்ளடக்கியுள்ளது. மற்றும் இதிலுள்ள நார்ச்சத்துகள் உங்கள் பசியுணர்வை கட்டுப்படுத்துகிறது. அதனால் இது உங்கள் உடல் எடை குறைய இது வழிவகுக்கிறது.

வைட்டமின் “சி”

வைட்டமின் “சி”

டர்னிப்களில் வைட்டமின் ஏ சி பீட்டாகரோட்டின் மற்றும் மாங்கனீசு சத்துகள் உள்ளன இவை உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இந்த சத்துகள் வயது முதிர்ச்சியால் ஏற்படும் சரும பாதிப்புகளில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது.

உடல் துர்நாற்றத்திலிருந்து தீர்வு

உடல் துர்நாற்றத்திலிருந்து தீர்வு

தினமும் டர்னிப் ஜூஸ் அருந்தினால், உடல் துர்நாற்றம் மறையும். இதோடு நீங்கள் ஒரு கரண்டி டர்னிப் சாற்றை உங்கள் அக்குள்களில் பூசலாம். மேலும் வெடிப்புற்ற பாதங்களில் டர்னிப் சாற்றை பூசுவதால் வெடிப்பு மறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Turnip

Health Benefits Of Turnip
Story first published: Saturday, August 12, 2017, 15:44 [IST]
Desktop Bottom Promotion