பூமிக்கடியில் விளையும் காய்கறிகளின் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

பொதுவாக மண்ணிற்கு அடியில் விளையும் காய்களை நாம் தவிர்ப்போம். உடல் எடை கூடும் என்று ஒரே காரணத்திற்காக அதனை தவிர்ப்பது நல்லதல்ல. காரணம் அவற்றில் மற்ற பல முக்கிய சத்துக்கள் உள்ளன.

Health benefits of roots and tubers

அவை உடல் எடையை அதிகரிக்கச் செய்யாது. சத்தில்லாமல் இருப்பவர்களுக்கு போஷாக்கு மட்டுமே அவை தருகின்றது. அவ்வாறு விளையும் காய்களும் அதன் பலன்களையும் காண்போம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பீட்ரூட்:

பீட்ரூட்:

பீட்ரூட் ஒருவகை கிழங்கு ஆகும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர்.

மருத்துவக்குணங்கள்:

பீட்ரூட் ஆனது மலச்சிக்கலைக் குணப்படுத்தும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

 முள்ளங்கி:

முள்ளங்கி:

முள்ளங்கியானது கசப்பு தன்மை வாய்ந்தது. இதனை சமைக்கும்போது ஒருவிதமான வாடை உண்டாகும். எனவே இதனை யாரும் விரும்புவதில்லை. இருந்தாலும் இதன் மருத்துவகுணங்களை உணர்ந்து இதனை பயன்படுத்துவோர் பலர்.

முள்ளங்கியின் வகைகள்:

சிவப்பு முள்ளங்கி

வெள்‌ளை முள்ளங்கி

மருத்துவக்குணங்கள்:

முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்குவதோடு குரலை இனிமையாக மாற்றுகிறது.

முள்ளங்கி பசியை தூண்டுகிறது. சிறு நீரகக் கற்களை இவை கரைய செய்கின்றன. அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியானது உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும், தாது உப்புகளும் பெற்றுள்ளன.

கேரட்:

கேரட்:

காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும்.குழந்தைகளுக்கு கேரட் என்றால் மிகவும் பிடிக்கும்.

மருத்துவக்குணங்கள்:

கேரட்டில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் "ஏ" வைட்டமின்"கே", பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் ஆய்வின் மூலம் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கேரட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் மார்பகம், கல்லீரல், குடல் புற்றநோய் மற்றும் மாலைக்கண்நோய் வருவதை தடுக்கலாம்.

 இஞ்சி:

இஞ்சி:

இஞ்சியானது சமையலில் சேர்க்கப்படும் முக்கியமான ஒன்று. குழம்பு, துவையல், வடை ஆகியவற்றில் இஞ்சி முக்கிய பங்காற்றுகிறது.

மருத்துவக்குணங்கள்:

இஞ்சியானது இரைப்பைக்கு பலம் சேர்க்கும். இஞ்சிப் பசியைத் தூண்டும். அஜீரணத்தை போக்கும்.

கபத்தைக் குணப்படுத்தும். ஈரலில் உள்ள கட்டுகளை கட்டுப்படுத்தும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கை சரி செய்யும்.

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கு குளிர்பிரதேசங்களில் அதிகம் பயிராகிறது. உருளைக்கிழங்கானது வாயு மற்றும் எடையைக் கூட்டுவதால் சமையலின் போது இஞ்சி, புதினா அல்லது எலுமிச்சம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தவும்.

மருத்துவக்குணங்கள்:

உருளைக்கிழங்கில் உடலிற்கு வெப்பம் தரும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது.

மாவுச்சத்து அதிகம் உள்ளதால் இவை அடிவயிறு மற்றும் இரைப்பையில் உள்ள குழாய்களில் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் குணமாக்குகிறது. மேலும் உருளைக்கிழங்கில் அதிக கலோரிகள், வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது.

கருணைக்கிழங்கு:

கருணைக்கிழங்கு:

கருணைக்கிழங்கை உண்பதால் கபம், வாதம், இரத்த மூலம், முளை மூலம் ஆகியவற்றை குணப்படுத்தும்

மேலும் கருணைக்கிழங்கு பசியை தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும். கருணைக்கிழங்கை சமைக்கும்போது சிறிது புளி சேர்த்து சமைத்தால் நமநமப்புத் தன்மை நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health benefits of roots and tubers

Health benefits of roots and tubers
Subscribe Newsletter