வெங்காயத்தாளை நீங்கள் உணவில் சேர்க்காமல் இருப்பது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

நாம் அதிகமாக வெங்காயத்தாளை பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் கூட வாசனைக்காகவும், சுவைக்காவும் மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் இது கீரை வகையை சார்ந்தது. இது சீன உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அவர்கள் மருந்து தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.

இந்த வெங்காயத்தாளில், வெங்காயத்தில் உள்ளதை போலவே கந்தகச்சத்து அதிகளவில் உள்ளது. இதில் உள்ள கலோரியும் குறைவு தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சத்துக்கள்

சத்துக்கள்

வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2 விட்டமின் ஏ, விட்டமின் கே மற்றும் தயமின் உட்பட பல விட்டமின்கள் அடங்கியுள்ளன. மேலும் காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன.

செரிமான உபாதைகள்

செரிமான உபாதைகள்

வெங்காயத்தாளில் பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் வழங்குகிறது. இந்த காய்கறிகளிலுள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பெருங்குடல் புற்றுநோய்

பெருங்குடல் புற்றுநோய்

வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவை உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கவும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. இந்த காய்கறிகளில் உள்ள சல்பர் சேர்மங்கள், இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.

காசநோய்

காசநோய்

வெங்காயம் மட்டுமின்றி வெங்காயப்பூவும் கூட வியக்கத்தக்க மருத்து மாற்றங்களை ஏற்படுத்துகிறது. வெங்காயத்தையும், வெங்காயப்பூவையும் சேர்த்து அரைத்து ஒரு அவுன்ஸ் சாறு எடுத்து இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காச நோய் குணமடையும்.

தயிருடன்..!

தயிருடன்..!

வெங்காயப்பூக்களையும் வெங்காயத்தையும், பொடிப்பொடியாக நறுக்கி தயிருடன் கலந்து ஊற வைத்து குடித்தால் மூலம் தொடர்புடைய எரிச்சல் குத்தல் குணமடையும்.

பல் நோய்

பல் நோய்

பல் வலியால் அவதிப்படுபவர்கள் சம அளவு வெங்காயம் மற்றும் வெங்காயப்பூ எடுத்து அரைத்து சாறு பிழிந்து தினமும் வாய் கொப்பளித்து வந்தால் பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் குணமாகும்.

வயிற்று வலிக்கு

வயிற்று வலிக்கு

வெங்காயப்பூவை பொடியாக நறுக்கி, தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பூ நன்றாக வெந்த உடன் ஆற வைத்து உப்பு சேர்த்து குடித்தால் வயிற்று வலி உடனடியாக நிற்கும்.

 பசியை தூண்ட

பசியை தூண்ட

வெங்காயம் சேர்த்து சமைக்கும் உணவுகளில் வெங்காயத்திற்கு பதிலாக வெங்காயப்பூவையும் சேர்த்து சமைக்கலாம் இது பசியை தூண்டும்.

வாயு கோளாறு

வாயு கோளாறு

குடலில் உள்ள தேவையற்ற வாயுக்களை அகற்ற வெங்காயப்பூவை ஏதாவது ஒரு வகையில் பக்குவம் செய்து சாப்பிட கீழ் வாதம் குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

health benefits of onion springs

health benefits of onion springs
Story first published: Tuesday, September 26, 2017, 14:56 [IST]