பொடுகை விரைவில் விரட்டனுமா? இப்படி செஞ்சு பாருங்க!!

Written By:
Subscribe to Boldsky

பொடுகுதான் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு கேடு தரக் கூடிய பிரச்சனை. இது பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றினால் ஏற்படுகிறது. கிருமிகள் பலமடங்கு பரவி கூந்தலை சீர்குலைக்கிறது.

அடர்த்தியின்மை, முடி உதிர்தல் , வெடிப்பு, வறட்சி போன்றவற்றிற்கு மிக முக்கிய காரணம். பொடுகை விரட்ட எத்தனையோ செய்து பார்த்தாலும் போகவில்லையென்று கவலை கொள்கிறீர்களா?

உங்களுக்கான விரைவில் பலன் தரும் குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன. பக்க விளைவுகள் இல்லை. அதே சமயம் முடியும் நன்றாக வளரத் தூண்டும். உபயோகித்து பலன் கிடைத்தால் கமெண்டில் சொல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அருகம் புல் :

அருகம் புல் :

அருகம்புல்லின் சாறு தேங்காய் எண்ணெ‌யுட‌ன் காய்ச்சி ஆறவைத்துத் தலையில் தேய்த்து வந்தால் தலையில் அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்.

 வெள்ளை மிளகு :

வெள்ளை மிளகு :

வெள்ளை மிளகு 4 தேக்கரண்டி, வெந்தயம் 2 தேக்கரண்டி இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்து தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு கு‌ளி‌த்து வ‌ந்தா‌ல் பொடுகு நீங்கு‌ம்.

வசம்பு :

வசம்பு :

வசம்பை நன்கு தட்டி நல்லெண்ணெயில் நன்றாக கருகும் வரை கொதிக்க வைத்து அதை வடிகட்டித் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பூசி வந்தால் முடி உதிர்வது நீங்கும்.

தேங்காய் பால் மற்றும் எலுமிச்சை :

தேங்காய் பால் மற்றும் எலுமிச்சை :

தேங்காய் பால் - 1/2 கப், எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி, வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்து மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீளமாக வளரும்.

 பசலைக் கீரை :

பசலைக் கீரை :

பசலைக் கீரையை அரைத்துத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்குவதுட‌ன் கண்டிஷனராகவும் இரு‌க்கு‌ம்.

இ‌தி‌ல் ஒன்றை பயன்படுத்திப் பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Granny remedies to get rid of dandruff

Granny remedies to get rid of dandruff
Story first published: Wednesday, April 19, 2017, 8:16 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter