For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலும்புகளை வலிமைப் படுத்தும் உணவுகள் எவை தெரியுமா?

எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்கும் கால்சியம் சத்துக்கள் எதில் கிடைக்கும் என்பதற்கு சில உதாரணங்கள்.

|

உடல் ஆரோக்கியத்திற்கும், பற்களின் வளர்ச்சிக்கும் மிக முக்கிய பங்கு வகிப்பது கால்சியம்.இது நம் ரத்தஓட்டத்தை சீராக்கி, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினையும் கட்டுப்படுத்துகிறது.

ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு அளவிலான கால்சியம் சத்து தேவைப்படும். இதற்கு தொடர்ந்து கால்சியம் சத்து கொடுக்கும் உணவுகளை எடுக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலும்புத் தேய்மானம் :

எலும்புத் தேய்மானம் :

நம் உடலுக்கு கால்சியம் கிடைப்பது இரண்டு வழிகளில் இருந்து தான். ஒன்று உணவு இன்னொன்று எலும்புகளின் வழியே பெற்றுக் கொள்வது. உணவுகளின் வழியாக கிடைத்திடும் 99 சதவீத கால்சியம் சத்து எலும்புகளிலும் பற்களிலும் தான் போய் தங்கிடும்.

கால்சியம் பற்றாகுறை ஏற்படும் போது எலும்புகளில் இருந்து தேவையான கால்சியம் சத்துக்களை எடுத்துக்கொள்ளும்.

ஒரு கட்டத்தில் எலும்புக்கு தேவையான கால்சியம் கிடைக்காமல், மேலும் மேலும் கால்சியம் அதிலிருந்தே சுரண்டப்படுவதால் எலும்புத் தேய்மானம் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

ஆரஞ்சுப் பழம் :

ஆரஞ்சுப் பழம் :

ஒரு ஆரஞ்சுப் பழத்தில் 60 மில்லி கிராம் கால்சியம் வரை கிடைக்கும். அதோடு இதில் விட்டமின் சியும் அதிகம் இருப்பதால் இவை நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்திடும்.

ஓட்ஸ் :

ஓட்ஸ் :

இதில் எளிதில் கரையக்கூடிய ஃபைபர் அதிகமிருக்கிறது. இது ரத்தத்தில் கார்போஹைட்ரேட் கலப்பதை குறைக்கும். அதோடு ஓட்ஸில் அதிகப்படியான மக்னீசியம் இருப்பதால் சுறுசுறுப்புடன் இருப்பதற்கு உதவிடும்.

சோயா :

சோயா :

சோயா பால், சோயா பீன்ஸ் போன்றவற்றில் அதிகப்படியான கால்சியம் கிடைத்திடும். இதில் 261 மில்லி கிராம் வரை கால்சியம் இருக்கிறது. இதில் கால்சியம் மட்டுமின்றி மக்னீசியம்,ப்ரோட்டீன் மற்றும் செலினியம் இருக்கிறது.

சைவ உணவு சாப்பிடுபவர்களின் ப்ரோட்டின் நிறைந்த உணவு இந்த சோயா.

பாதாம் :

பாதாம் :

பாதாம் பருப்பிலும் அதிகப்படியான ப்ரோட்டீன் இருக்கிறது. இதை எடுத்துக் கொண்டால் பசியுணர்வு மட்டுப்படும். பாதாம் பருப்பில் நிரம்பாத கொழுப்பு வகைகளால் இதயப்பிரச்சனை ஏற்படாமல் தடுக்க முடியும்.

வெள்ளை பீன்ஸ் :

வெள்ளை பீன்ஸ் :

ஒரு கப் வெள்ளை பீன்ஸில் 100 மில்லி கிராம் கால்சியம் வரை கிடைத்திடும். அனைவராலும் விரும்பப்படுகிற சுவையில் இருக்கும் என்பதால் பயமின்றி சாப்பிடலாம்.

அத்திப்பழம் :

அத்திப்பழம் :

அத்திப்பழத்தில் அதிகப்படியான ஃபைபர் இருக்கிறது. இதில் மினரல்ஸ், விட்டமின்ஏ, பி1, பி2, கால்சியம்,ஐயர்ன்,பாஸ்பரஸ்,மக்னீஸ்,சோடியம், பொட்டாசியம், மற்றும் க்ளோரின் இருக்கிறது. இரண்டு அத்திப்பழங்களில் இருந்து 55 மில்லிகிராம் கால்சியம் சத்து நமக்கு கிடைக்கிறது.

ப்ரோக்கோலி :

ப்ரோக்கோலி :

100 கிராம் ப்ரோக்கோலியிலிருந்து 47 மில்லி கிராம் கால்சியம் சத்து கிடைத்திடும். இதில் இருக்கும் விட்டமின் சி மற்றும் விட்டமின் கே வினால் எலும்புகள் வலுப்படுத்தப்படும்.

நம் உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods rich in calcium

Foods rich in calcium
Story first published: Monday, August 28, 2017, 11:33 [IST]
Desktop Bottom Promotion