உங்களது உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய முட்டைகள்!

Written By:
Subscribe to Boldsky

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை பெற முட்டை மிக முக்கிய காரணமாக உள்ளது. இது எளிதில் சமைக்க கூடிய ஒன்றாகவும் உள்ளது. இதில் அதிகளவு புரோட்டின் உள்ளது. நமது உடலுக்கு தேவையான கொழுப்பு மற்றும் நுண்ணிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவு உள்ளன.

வணிக ரீதியாக கோழி முட்டை தான் அதிகப்படியான நபர்களால் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. அதற்காக மற்ற முட்டைகள் ஆரோக்கியமானது அல்ல என்று சொல்லிவிட முடியாது. இந்த பகுதியில் சில முட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை நீங்கள் உங்களது தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோழி முட்டை

கோழி முட்டை

கோழி முட்டை பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்ககூடியது. இது மிக குறைந்த செலவில் கிடைக்ககூடியதும் கூட.. இதில் அதிகளவு புரோட்டின் உள்ளது. இது உடல் எடையை குறைப்பதற்கு மிகச்சிறந்த உணவாகவும் உள்ளது.

நாட்டுக்கோழி முட்டை

நாட்டுக்கோழி முட்டை

கோழி முட்டையை விட அதிக சக்தி வாய்ந்தது தான் நாட்டுக்கோழி முட்டை. இது சாதாரண கோழி முட்டையை விட சற்று விலை அதிகமானது தான். கோழி முட்டை அளவிற்கு இது எளிதாகவும் கிடைப்பதில்லை. இது அதிகளவு சக்தி வாய்ந்ததாகும்.

காடை முட்டை

காடை முட்டை

காடை முட்டை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது கோழி முட்டையை விட மிகச்சிறிய அளவில் தான் இருக்கும். எனவே அளவை கண்டு ஏமாற வேண்டாம். இதில் அதிகளவு ஆன்டி - ஆக்ஸிடண்டுகள் உள்ளன. அதுமட்டுமின்றி புரோட்டின் மற்றும் கல்லீரலை பாதுகாக்கவும் உதவியாக உள்ளது.

மீன் முட்டை

மீன் முட்டை

மீன் முட்டையை சாப்பிடுவதன் மூலம் சிலர் மீன் சாப்பிடுவதன் மூலம் பெறக்கூடிய அனைத்து பலன்களையும் பெருகின்றனர். மீன் முட்டை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. இதில் அதிகப்படியான ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

வாத்து முட்டை

வாத்து முட்டை

வாத்து முட்டை அதிகப்படியாக கடைகளில் கிடைக்காது. இது கிடைப்பது சற்று அரிதானது தான். ஆனால் இவற்றை நீங்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கலாம். இதில் கோழி முட்டையில் அடங்கியுள்ள அளவை விட அதிகளவு புரோட்டின் அடங்கியுள்ளது. மேலும் கோழி முட்டையில் உள்ளதை விடவும் அதிமான மைக்ரோபையல் தன்மையும் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

eggs you should include in your diet

eggs you should include in your diet
Story first published: Wednesday, September 13, 2017, 16:07 [IST]
Subscribe Newsletter