பித்தப்பையை தாக்கும் ‘சைலண்ட் ஸ்டோன்’ பற்றிய அதிர வைக்கும் உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைக்கு நம்முடைய உணவுப் பழக்கங்களால் நன் உடலில் எண்ணற்ற உபாதைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். சர்க்கரை நோய், ஒபீசிட்டி என்ற பிரச்சனைகள் ஒருபுறம் என்றால் இன்னொரு பக்கம் நம்முடைய உள்ளூருப்புகளே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கிட்னி ஸ்டோன் எல்லாரும் கேள்விப்பட்டிருப்போம். கிட்னியின் உருவாகும் கல் அதனை கரைக்கவும், அதனால் ஏற்படக்கூடிய வயிற்று வலியால் துடித்தவர்களுக்கு இதைப் பற்றி சொன்னாலே குலை நடுங்கும். அந்த அளவுக்கு பயங்கரமான வலி தரக்கூடியது இந்த கிட்னி ஸ்டோன் பாதிப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சைலண்ட் ஸ்டோன் :

சைலண்ட் ஸ்டோன் :

கிட்னி ஸ்டோன் சரி சைலண்ட் ஸ்டோன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பித்தப்பையில் உருவாகும் கற்களை சைலண்ட் கற்கள் என்று தான் சொல்லபடுகிறது. ஏனென்றால் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் நமக்கு தெரிவதில்லை.

இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் நாளடைவில் இது பெரிதாகி பல பிரச்னைகளை உருவாக்கும்.

கண்டுபிடிக்கும் வழி :

கண்டுபிடிக்கும் வழி :

அப்படியானால் நமக்கு பித்தப்பை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை எப்பிடி கண்டுபிடிப்பது என்றால். முழு உடல் பரிசோதனை தான் ஒரே வழி என்கிறார்கள்.

சாதரண வயிற்று வலி தானே என்று சொல்லி நாம் அசால்ட்டாக விடுவது எல்லாமே ஒரு கட்டத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து நிற்பதற்கு முன்னர் அதனை கண்டுபிடிப்பது மிகவும் அத்தியாவசியமானதாகும்.

பித்தப்பை கற்கள் என்றால் :

பித்தப்பை கற்கள் என்றால் :

நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புச் சத்து செரிமானம் அடைய பித்தநீர் மிகவும் அவசியம். பித்தநீர் சுரக்கும் இடம் கல்லீரல். இந்தப் பித்தநீர் நாள் ஒன்றுக்கு சுமார் 600 முதல் 750 மி.லி. வரை சுரந்து பித்த நாளங்கள் வழியாக சிறுகுடலைச் சென்றடையும்.

பித்தநீர் அடர் நிலையில் பித்தப்பையில் சேமிக்கப்படும். இந்தப் பித்தப்பை சரியாக வேலை செய்யாதபோது, கொழுப்பு அதிகமாகி, அதுவே படிவங்களாக உருமாறி பித்தப்பையில் கற்களை உருவாக்கிவிடுகிறது.

பெண்களுக்கு அதிகம் :

பெண்களுக்கு அதிகம் :

இந்த பித்தப்பையில் கல் உருவாகும் பிரச்சனை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. குறிப்பாக, குழந்தைப்பேறுக்காக ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெண்கள்,கர்ப்பக் காலங்களில், இயற்கையாகவே ஹார்மோன்கள் அதிக அளவில் சுரப்பது, பித்தப்பையில் அதிக அளவு கொழுப்பு இருப்பது, பித்தப்பை சரிவர சுருங்கி விரியாத தன்மைகொண்டதாக இருப்பது ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.

காரணம் :

காரணம் :

இதைத் தவிர நம்முடைய வாழ்க்கை முறையும் பித்தப்பையில் கற்கள் ஏற்படுவதற்கு காரணம் என்றே சொல்லலாம். அதிகப்படியான கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை உண்டுவிட்டு, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு பித்தப்பையில் கொழுப்பின் அளவு அதிகமாகி கற்கள் உண்டாகின்றன.

நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பவர்கள், டயட் என்ற பெயரில் உடம்பை வருத்திக்கொள்பவர்கள், மிகக் குறுகிய காலத்தில் அதிக அளவு எடையைக் குறைப்பவர்கள் மற்றும் பருமனாக இருப்பவர்கள் ஆகியோருக்கும் பித்தப்பைக் கற்கள் எளிதில் உருவாகும்.

வகைகள் :

வகைகள் :

பொதுவாகப் பித்தப்பைக் கற்களில் காணப்படும் வேதிப்பொருளை வைத்து இக்கற்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள் மருத்துவர்கள். பித்தநீரில் கொலஸ்ட்ரால் அளவு மிகுவதால் உண்டாகும் கற்களுக்குக் 'கொழுப்புக் கற்கள்' அல்லது 'கொலஸ்ட்ரால் கற்கள்' என்று பெயர்.

அடுத்தது, கறுத்த நிறமிக் கற்கள். இவ்வகை கற்கள் கறுத்த நிறமுடையவை. கால்சியம் கார்பைடால் இவை உருவாகின்றன.இவை எண்ணிக்கையிலும் அதிகமாக இருக்கும், பித்தக் குழாயை விரைவில் அடைத்துப் பிரச்சினைகளை உருவாக்கும். சுமார் 80 சதவீதம் பேருக்கு இவ்வகை கற்களே காணப்படுகின்றன.

ஏன் அவசியம் :

ஏன் அவசியம் :

கற்கள் இருப்பது உறுதி செய்தாலும் அது என்ன மாதிரியான கல் என்பது தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். குறிப்பிட்ட நபருக்கு எந்த வகை கல் இருக்கிறது என்று தெரிந்து கொண்டால் அந்தக் கல்லுக்குரிய வேதிப்பொருட்கள் அதிகமுள்ள உணவுப்பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம் பித்தப்பைக் கற்களை மீண்டும் வரவிடாமல் தடுத்துக்கொள்ளலாம்.

ஏற்கெனவே உள்ள கற்களை, இன்னும் அதிகம் வளர விடாமலும் தடுத்துக்கொள்ள முடியும்.

அறிகுறிகள் :

அறிகுறிகள் :

நாம் சாதரணமாக சின்ன பிரச்சனை என்று விடும்படியான அறிகுறிகள் தான் தெரியும். உணவு உண்ட பின்பு சிறிது நேரம் செரிமானம் ஆகாமல் இருப்பது போன்ற உணர்வுடன் ஒரு வலி, வயிற்றின் மேல் பாகத்தில் அதாவது தொப்புளுக்கு மேலே தோன்றுவது .

இந்த வலியானது கடுமையாகிப் பல மணி நேரம் நீடித்து, குமட்டல், வாந்தி, ஏப்பம் ஆகிய அறிகுறிகளுடன் சிரமப்படுத்துவது,வலது புற விலா எலும்புகளைச் சுற்றி வந்து, முதுகுப்புறம் வரைக்கும் சென்று, தோள்பட்டைவரை வலி பரவும்.

சிலருக்கு இது மாரடைப்பு வலி போன்றும் தோன்றிடும்.

அடைப்புக் காமாலை :

அடைப்புக் காமாலை :

முக்கியமாகக் கொழுப்பு அதிகமுள்ள எண்ணெய்ப் பண்டங்களைச் சாப்பிட்டதும் இந்த வலி ஏற்படும், பித்தப்பைக் கற்கள் பித்தப்பையில் அழற்சியை ஏற்படுத்துமானால் பாதிக்கப்பட்ட நபருக்கு முதுகுப்புறம் வரும்.

பித்தநீர்க் கற்கள் பித்தப்பையை அடைத்துவிடுமென்றால் நோயாளிக்கு மஞ்சள் காமாலை வரும். இதற்கு 'அடைப்புக் காமாலை' என்று பெயர்.

சில பேருக்கு அறிகுறிகள் எதுவும் தெரியாது. வேறு பாதிப்புகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யும்போது, பித்தப்பையில் கற்கள் இருப்பது தெரியவரும்.

பரிசோதனை :

பரிசோதனை :

பித்தப்பையில் பிரச்சனையிருப்பது தெரிந்தால் ஸ்கேன் மூலமாக நாம் உறுதி செய்து கொள்ளலாம். சாதாரணமாக, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் 95 சதவிகிதப் பித்தப்பைக் கற்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

பித்தப்பை சரிவர வேலை செய்கிறதா, இல்லையா என்பதை, ஹெச்.ஐ.டி.ஏ. ஸ்கேன் (HIDA scan) மூலமாகக் கண்டுபிடிக்கலாம். பித்தப்பைக் கல், பித்த நாளத்தின் எந்த இடத்தில் அடைத்துக்கொண்டுள்ளது என்பதை எம்.ஆர்.சி.பி. (MRCP) பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

அறுவை சிகிச்சை :

அறுவை சிகிச்சை :

சிறிய அளவில் உள்ள பித்தப்பைக் கற்களை ஊசி மற்றும் மருந்துகள் மூலம் கரைக்கலாம். சற்றுப் பெரிய அளவில் உள்ள கற்களை உடைத்து (Lithotripsy) வெளியேற்றலாம் என்ற போதிலும் 'பித்தப்பை நீக்கம்' (Cholecystectomy ) எனப்படும் அறுவை சிகிச்சை பித்தப்பைக் கற்களைத் தடுப்பதற்குச் சிறந்த வழி. பித்தப்பையை நீக்குவதற்கான அறுவை சிகிச்சைகளில் 'லேப்ராஸ்கோப்பி' அறுவை சிகிச்சை முக்கியமானது.

அறுவைச் சிகிச்சை மட்டுமே நிரந்தரத் தீர்வு கொடுக்கும். லேப்ராஸ்கோப்பி சிகிச்சை முறையில், பித்தப்பையைக் கற்களுடன் எளிதாக அகற்றிவிட முடியும். இந்த முறையில், ரத்த இழப்பு மற்றும் வலி குறைவாக இருக்கும்.

 நவீன சிகிச்சை முறை :

நவீன சிகிச்சை முறை :

இப்போது இதற்கு எண்டாஸ்கோப்பி மூலம் சிகிச்சை செய்யும் நவீன முறை அறிமுகமாகியுள்ளது. ‘ஸ்பைகிளாஸ் கொலாஞ்சியோஸ்கோப்பி' (SpyGlass cholangioscopy) என்று அதற்குப் பெயர். இந்த முறையில் பித்தப்பையை நீக்காமல், பித்தப்பைக் கற்களை மட்டுமே அகற்றுகிறார்கள்.

இது அடைப்புக் காமாலை உள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம் தருகிறது. வாய்வழியாக இந்தக் குழாயை உள்ளே அனுப்பி உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல்.... ஆகியவற்றை எல்லாம் கடந்து, பித்தக் குழாய் வழியாகக் கற்கள் உள்ள பித்தப்பையை அடைந்ததும், மின்நீர்க் கதிர்களை (Electrohydraulic lithotripsy) செலுத்தி, அந்தக் கற்களை நொறுக்கி, அவற்றின் துகள்களை உறிஞ்சி வெளியில் எடுத்துவிடுகிறார்கள். இதனால் பித்தநீர்ப் பாதை சரிசெய்யப்படுகிறது. மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகிவிடுகிறது.

மாத்திரை :

மாத்திரை :

இதயம், நுரையீரல் நோயால் அவதிப்படுபவர்கள், நீண்ட நாட்களாக படுத்தப் படுக்கையாக இருப்பவர்களுக்கு, அறுவைச் சிகிச்சை சாத்தியப்படாது.

எனவே, இவர்களது பித்தப்பைக் கற்களைக் கரைக்க மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதனால், பல மாதங்களுக்குப் பிறகு பித்தப்பையில் உள்ள கற்கள் ஒரு சிலருக்கு கரையலாம். ஆனால், மருந்தை நிறுத்திய ஒரு சில மாதங்களில், மீண்டும் பித்தப்பையில் கற்கள் உருவாகும் வாய்ப்பு உண்டு.

பித்தப்பை அகற்றம் :

பித்தப்பை அகற்றம் :

நோய் தீவிரமாகிவிட்டால் அது மற்ற உறுப்புகளுக்கும் பரவாமல் தடுக்க பித்தப்பை அகற்றப்படுவதும் உண்டு.பித்தப்பையை நீக்கிவிட்டால் பித்தநீர் சுரக்காது.

பிறகு உணவு சரியாகச் செரிமானம் ஆகாது" என்று பல பேர் தவறாக நினைத்துப் பித்தப்பையை நீக்குவதற்கு அஞ்சுகின்றனர். உண்மை என்னவென்றால், கல்லீரலில் மட்டுமே பித்தநீர் சுரக்கிறது.

அது பித்தநீர்க் குழாய் மூலமாக முன்சிறுகுடலை வந்தடைகிறது. அதற்கு முன்பு அது பித்தப்பையில் தங்கிச் செல்கிறது, அவ்வளவுதான். பித்தப்பையை நீக்கியவர்களுக்குப் பித்தநீரானது நேரடியாக முன்சிறுகுடலுக்கு வந்து சேர்ந்துவிடும். இவர்களுக்கு உணவுச் செரிமானம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

உணவு :

உணவு :

நாம் சாப்பிடும் உணவு வகைகள் மூலமாகவே பல்வேறு பிரச்சனைகளை நாம் தீர்த்திட முடியும்,ஆரோக்கியமான சத்தான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வதால் எந்த பாதிப்பு ஏற்படாமலும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க முடியும்.

இதனை தடுக்க, அறுவை சிகிச்சை அதனால் ஏற்படும் பிற அவஸ்தைகளிலிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டுமானால் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய, உணவுப்பழக்கம். நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 ஆப்பிள் சீடர் வினிகர் :

ஆப்பிள் சீடர் வினிகர் :

ஒரு கிளாஸ் சூடான நீருடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு ஸ்பூன் வினிகரை சேர்த்து குடித்து வாருங்கள்.தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதனை குடிக்க வேண்டும்.

இதனைக்குடிப்பதால் சட்டென வயிற்று வலி குறைந்திடும். குறிப்பாக பித்தப்பையில் இருக்கும் கல் இருப்பதினால் உண்டாகும் வயிற்று வலி மறையும்.

ஆப்பிள் சிடர் வினிகர் பித்தப்பை வலியை போக்கக்கூடியது. சில வகை கெமிக்கல்களினால் தான் பித்தப்பை கற்கள் உருவாகிறது அவற்றை கரைக்கும் ஆற்றலும் இந்த ஆப்பிள் சீடர் வினிகரில் இருக்கிறது.

தவிர்க்க :

தவிர்க்க :

அதீத இனிப்பு சுவை கொண்டவை, எண்ணெயில் பொறித்த உணவுகள், கொழுப்பு உணவுகள் ஆகியவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. குறிப்பாக செரிமானம் ஆவதற்கு கடினமான பொருட்களை தவிர்த்திடுங்கள்.

இவை பித்தப்பை கற்கள் ஏற்படுவதனை தவிர்ப்பதுடன், உங்கள் உடலில் ஏற்படும் இன்னபிற பிரச்சனைகளையும் தவிர்க்கச் செய்கிறது.

ஆப்பிள் ஜூஸ் :

ஆப்பிள் ஜூஸ் :

ஆப்பிளை அரைத்து சாறெடுத்து ஆப்பிள் ஜூஸ் குடிக்கலாம். இதனை தொடர்ந்து குடித்து வர வயிற்று வலி குறையும். ஆப்பிள் சாறில் இருக்கக்கூடிய மாலிக்(Malic)அமிலத்தில் ஃபைட்டோ கெமிக்கல் நிறைந்திருக்கிறது. இவற்றிற்கு பித்தப்பை கற்களை கரைத்திடும் ஆற்றல் உண்டு.

க்ளன்ஸ் :

க்ளன்ஸ் :

ஃபேஷியல் செய்யும் போது, இந்த வார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள். முகத்தை க்ளன்ஸ் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதினால் முகத்தில் இருக்கக்கூடிய அழுக்கு வந்துவிடும் என்று சொல்வார்கள். அதே போல பித்தப்பை க்ளன்ஸ் செய்ய இது பயன்படுகிறது.

இதனை ஆறு நாட்கள் வரை செய்ய வேண்டும், முதல் நான்கு நாட்கள் ஆப்பிள் சாறு மட்டும் குடித்து வர வேண்டும். இது உணவைத் தவிர.. எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஆறாம் நாள் மாலை ஆறு மணிக்கு மேல் எதுவும் சாப்பிடாதீர்கள். ஒரு ஸ்பூன் எப்சம் உப்பு கலந்த சூடான நீர் குடித்திடுங்கள்.

அதன் பின்னர் சில மணி நேரங்கள் கழித்து இதே போல இன்னொரு கிளாஸ் சுடான தண்ணீர் குடிக்கலாம்.

இரண்டு கிளாஸ் தண்ணீர் குடித்த இரண்டு மணிநேரங்கள் கழித்து. எலுமிச்சை ஜூஸுடன் ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன் கலந்து குடிக்கவேண்டும். அன்றைக்கு வலப்புறமாகவே திரும்பி படுத்திருக்க வேண்டும். ஆறு நாட்கள் இதனை கடைபிடித்தால் பித்தப்பை கல் வெளியேறிடும்.

மஞ்சள் :

மஞ்சள் :

ஒரு ஸ்பூன் தேனுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை குழைத்து சாப்பிட வேண்டும்.இதனை தொடர்ந்து செய்து வர பித்தப்பை கற்கள் கரைந்திடும்

மஞ்சளில் ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் துகள்கள் நிறைந்திருக்கிறது. இவை பித்தப்பையில் உருவாகும் கற்களை கரைத்திடும்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு :

ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை சாறு குடிக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு தயாரித்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைத்திடும். நாலு கிளாஸ் எலுமிச்சை சாறு வரை குடிக்கலாம்.

இது உங்கள் சருமத்தையும் அழகாக பராமரிக்கும். இதனை குடிப்பதினால் உங்களுக்கு இரண்டு வகையான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. முதலில் நீங்கள் அதிகப்படியாக தண்ணீர் குடிப்பதினால் பித்தப்பை தொடர்பான பிரச்சனை குறையும் முக்கியமாக வலி மறைந்திடும்.

இரண்டாவது, பித்தப்பை கற்கள் தானாக கரைய வேண்டுமெனில் அதற்கு அதிகப்படியான விட்டமின் சி தேவை. அவை எலுமிச்சை சாறில் நிறையவே இருக்கிறது.

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் :

மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அரை கிளாஸ் ஆப்பிள் சாறு , இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு பூண்டு, ஒரு கிராம்பு மற்றும் சிறு துண்டு இஞ்சி துருவிக் கொள்ளுங்கள்.

தேங்காய் எண்ணெயை முதலில் சூடாக்குங்கள். பின்னர் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் எல்லாவற்றையும் சேர்த்து சூடாக்குங்கள். அதிகமாக சூடாக்க வேண்டாம், லேசாக சூடானாலே போதும். இதனை தினமும் ஒரு கிளாஸ் அளவு குடிக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெயில் நல்ல கொழுப்பு நிறைய இருக்கிறது, அவை உடனடியாக கரைக்கப்படும். இதன் மூலமாக பித்தப்பையில் சேர்ந்திருக்கும் கெட்ட கொழுப்பு, ஃபைல் சால்ட் ஆகியவை பித்தப்பை கற்களை நீக்க உதவிடும்.

க்ரீன் டீ :

க்ரீன் டீ :

தினமும் க்ரீன் டீ குடிக்கலாம். தேவையெனில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் பயன்படுத்தலாம். க்ரீன் டீயில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. இவை பித்தப்பை பாதிக்கப்பட்டு பித்தப்பை வீங்கியிருந்தால் அந்த பாதிப்பு குறைந்திடும்.

காபி :

காபி :

தினமும் ஒரு கப் காபி குடிப்பதினால் கூட பித்தப்பை தொடர்பான நோயை குறைத்திடும். தொடர்ந்து காபி குடிப்பவர்களை விட காபி குடிக்காதவர்களுக்கு நாற்பது சதவீதம் பித்தப்பை தொடர்பான நோய் வருவதற்கு அதிக வாய்புகள் உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

விட்டமின் சி :

விட்டமின் சி :

இது பித்தப்பை கல் உருவாவதை தடுத்திடும். உங்கள் உடலில் தேவையான அளவு விட்டமின் சி இருந்தால் கொழுப்பு எளிதாக கரைந்திடும். இதனால் பித்தப்பையில் கற்கள் உருவாவது குறைந்திடும்.

விட்டமின் சி நிறைந்த பழங்களான கொய்யாப்பழம்,கிவி,பப்பாளி,மாம்பழம்,ஆரஞ்சு,எலுமிச்சை ஆகியவற்றை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பீட்ரூட் :

பீட்ரூட் :

பீட்ரூட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதனை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடித்து வாருங்கள்.

இதில் அதிகப்படியான நார்ச்சத்து, கரோடினாய்ட் மற்றும் ஃப்ளேவனாய்ட் ஆகியவை நிறைந்திருக்கிறது. இவை செரிமானத்திற்கும் பெரிதும் உதவிடும்.

முள்ளங்கி :

முள்ளங்கி :

முள்ளங்கியை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் அரைகப் தண்ணீர் சேர்த்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாறை ஒரு ஸ்பூன் மட்டும் குடியுங்கள்.

பித்தப்பை கல் பாதிப்பு தீவிரமாக இருப்பவர்கள் ஒரு நாளைக்கு ஆறு ஸ்பூன் சாறு வரையிலும் குடிக்கலாம்.

சிறிதாகத்தான் இருக்கிறது என்றால் ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூனே போதுமானது. இந்த காய் பலருக்கும் பிடிக்காது, ஆனால் இது பித்தப்பை கற்களை போக்குவதில் முக்கியப்பங்காற்றுகிறது. அதற்காக இதனை ஒரே நேரத்தில் அதிகமாகவும் எடுத்துக் கொள்ளவும் கூடாது.

புதினா :

புதினா :

ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் நான்கைந்து புதினா இலைகளை சேர்த்திடுங்கள். அந்த தண்ணீர் பாதியாக மாறும் அளவுக்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு தேன் கலந்து குடிக்கலாம்.

இது செரிமானத்தை துரிதமாக்கும்.இதில் இயற்கையாகவே டெர்பீன் என்ற கெமிக்கல் இருக்கும். இவை பித்தப்பை கற்கள் கரைய உதவுகின்றன.

பேரிக்காய் :

பேரிக்காய் :

பேரிக்காயை அப்படியே சாப்பிடலாம், அப்படியில்லை எனில் பேரிக்காய் ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அரை கிளாஸ் சூடான நீருடன் இந்த ஜூஸை கலந்து தேவையான அளவு தேன் கலந்து குடிக்கலாம்.

பேரிக்காயில் இருக்கும் பெக்டின் என்ற தாதுப்பொருள் கொழுப்பை கரைத்திடும். இதனால் பித்தப்பை கல் உருவாகாமல் தடுத்திடலாம்.

குறைத்துக் கொள்ளுங்கள் :

குறைத்துக் கொள்ளுங்கள் :

நீங்கள் என்ன தான் தேடித்தேடி உணவு வகைகளை எடுத்துக் கொண்டாலும் சில வகை உணவுகளை தவிர்ப்பது என்பது மிகவும் அவசியமாகும். அதை விட உங்களின் அன்றாட பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

உங்களுக்கு பித்தப்பையில் கல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகும். அதே போல வறுத்த மற்றும் அதிக கொழுப்பன உணவு வகைகளை உண்ணக் கூடாது.

பசி :

பசி :

பசியுணர்வு வருவதற்கு முன்னரே நேரமாகிவிட்டது என்ற காரணத்திற்காக சாப்பிடக்கூடாது. ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

ஃபிரைடு ரைஸ் ,பரோட்டா, நூடுல்ஸ், மக்ரோனி போன்ற மைதா உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.பீசா, பர்க்கர் போன்ற ஜங்க் ஃபுட் வகைகளை சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்திவிட வேண்டும்.

புகை மற்றும் மதுப்பழக்கம் இருந்தால் அதனை குறைத்துக் கொள்ளுங்கள். அதிகப்படியான காய்கறிகள் மற்றும் பழங்களை உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Effective home remedies for gallbladder problems

Effective home remedies for gallbladder problems
Story first published: Thursday, November 16, 2017, 11:40 [IST]