ஆசிய, ஆப்ரிக்கர்களின் ஆரோக்கியத்திற்கு இந்த பால் தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா?

Written By:
Subscribe to Boldsky

தென்னை மரங்கள் நமக்கு அதிக ஆரோக்கிய பலன்களை தரக்கூடியதாக உள்ளது. இதன் அடி முதல் நுனிவரை மக்களுக்கு ஏராளமான பலன்களை தரக்கூடியதாக உள்ளது. இளநீர் ஊட்டச்சத்துக்களின் இருப்பிடமாக உள்ளது. இந்த இளநீர் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. பல்வேறு நோய்களை தீர்ப்பதற்கு உதவியாக உள்ளது.

அதுமட்டுமின்றி லேக்டோஸ் அலர்ஜி உள்ளவர்களுக்கு தேங்காய் பால் அதிகமான நன்மைகளை அள்ளித்தரக் கூடியதாக உள்ளது. இந்த பகுதியில் தேங்காய்ப்பால், இளநீர் ஆகிய இரண்டின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இளநீர்

இளநீர்

மிகவும் குளிர்ச்சியான இயற்கை ஜூஸ் எது என்று கேட்டால் அது இளநீர் தான். இளநீரில் கால்சியம், மெக்னீசியம், மங்கனீசு, பொட்டாசியம், சோடியம், விட்டமின் சி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. இது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.

வயதாவதை தடுக்க

வயதாவதை தடுக்க

இளநீரில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடண்டுகள் உங்களது உடலில் உள்ள ரெடிக்கல்ஸ்களை பாதுக்காக்கிறது. இதனை தினசரி பருகி வருவதன் மூலமாக உங்களது முதுமை தள்ளிப்போடப்படுகிறது அதோடு மட்டுமில்லாமல், நாள்ப்பட்ட நோய்களை குணப்படுத்தவும் இது பயன்படுத்தப்படுகிறது.

சர்க்கை நோய்

சர்க்கை நோய்

இளநீர் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். இது இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. இதில் உள்ள மெக்னீசியம் இந்த வேலையை செய்கிறது.

சிறுநீரகப்பிரச்சனை

சிறுநீரகப்பிரச்சனை

இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை பருகுவதன் மூலமாக உங்களது சிறுநீரகத்தில் உள்ள கற்கள் மற்றும் சிறுநீரக குழாய் பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன.

கொட்ட கொழுப்பு

கொட்ட கொழுப்பு

இன்று உடல் பருமன் என்பது பலரின் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இந்த உடல் பருமனானது பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக உள்ளது. இதனை போக்க இளநீர் உதவுகிறது. இளநீர் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது பல ஆய்வுகளின் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

இளநீர் ஆனது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவியாக உள்ளது. அதிகமாக இதன் மூலம் இருதய பிரச்சனைகளும் குறைய அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

நீர்ச்சத்து கிடைக்க

நீர்ச்சத்து கிடைக்க

உடலில் தேவையான அளவு நீர் இருக்க வேண்டியது அவசியம். நீர் தான் உடலின் பல இயக்கங்களுக்கு காரணமாக உள்ளது. எனவே உடலில் நீரின் தேவை அதிகரிக்க இந்த இளநீர் உதவியாக உள்ளது.

உடற்பயிற்சிக்கு பின்

உடற்பயிற்சிக்கு பின்

உடற்பயிற்சிக்கு பின்னர் இளநீர் பருகுவதால், உடல் அசதி, நீரின் தேவை போன்றவை பூர்த்தியாகின்றன. இதனால் உடல் வறட்சியடைவது தடுக்கப்படுகிறது.

தேங்காய்ப்பால்

தேங்காய்ப்பால்

தேங்காய்ப்பால் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பது மட்டுமில்லாமல் சுவையானதும் கூட... இது டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் ரெடிமேடாக கிடைக்கிறது. இது மிகப் பழங்காலமாக ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் உடல் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

உடல் எடை

உடல் எடை

தேங்காய்ப்பால் ஆனது உடலின் எடையை சமநிலையில் வைக்க உதவியாக உள்ளது. இது எளிமையாக நமது உடலுக்கு தேவையான அனைத்து முக்கிய சத்துக்களையும் கொடுத்துவிடுகிறது. உங்களது வயிற்று பசி தீர்ந்தது போன்ற உணர்வை இது தருகிறது. இதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், பசியை குறைக்க நினைப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த பலனை கொடுக்கக் கூடியது.

கெட்ட கொழுப்புகள்

கெட்ட கொழுப்புகள்

உடலில் ஊள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க கூடியது என்று பல ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எல்.டி.எல், கெட்ட கொழுப்புகளை குறைக்க இது பெரிதும் துணை புரிகிறது.

பாக்டீரியா எதிர்ப்பு

பாக்டீரியா எதிர்ப்பு

இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளது. மேலும் இது பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு போன்றவற்றில் இருந்து நம்மை காக்க உதவுகிறது. இந்த பண்பு தேங்காய் எண்ணெய்யிலும் உள்ளது.

பால் ஒவ்வாமை

பால் ஒவ்வாமை

பாலில் உள்ள லெக்டோஸினால் சிலருக்கு அலர்ஜி உண்டாகும். இதற்கு தேங்காய் பால் மிக சிறந்த தீர்வாக உள்ளது. பால் ஒவ்வாமை உள்ளவர்கள் பாலுக்கு பதிலாக தேங்காய்ப்பாலை பருகுவதன் மூலமாக தங்களுக்கு தேவையான சத்துக்களை பெறலாம்.

சைவர்களுக்கு...

சைவர்களுக்கு...

சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு இந்த தேங்காய்ப்பால் மிகவும் உதவியாக இருக்கும். பால் குடிக்காதவர்கள் தேங்காய் பாலை பருகுவதன் மூலம் தங்களது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

coconut milk and coconut water which is the best

coconut milk and coconut water which is the best
Story first published: Friday, November 3, 2017, 13:15 [IST]