For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆயுர்வேதத்தின்படி நீங்கள் இந்த பொருட்களை இப்படி சாப்பிடவே கூடாது!!

சில உணவுப் பழக்கங்களை தவிர்த்து நல்ல உணவுப் பழக்கங்களை மேற்கொண்டால் நோய் நொடியில்லாமல் வாழலாம் என்று ஆயுர்வேதம் சொல்கிறது.

By Suganthi Ramachandran
|

உலகமெங்கும் புகழ்பெற்ற மருத்துவ முறை ஆயுர்வேதமாகும். தற்போது ஆயுர்வேத முறையில் நிறைய சிகிச்சை முறைகள் வந்துள்ளன. மக்களும் அலோபதி முறையை விட்டு ஆயுர்வேதத்தின் பக்கம் சாய்ந்துள்ளனர்.

உங்களது உடல்நலம் நீங்கள் சாப்பிடும் உணவை பொருத்தது. எனவே தான் உங்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். இதைத் தான் ஆயுர்வேதத்தில் ப்ராகரதி என்பர்.

இக்கட்டுரையில் நீங்கள் உணவுப் பழக்கத்தில் செய்யும் சில கெட்ட பழக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது இது ஆயுர்வேத முறைப்படி தவறாகும். இதை தவிர்ப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

தேனை சாப்பிடக் கூடாத வழி :

சமைக்காத இயற்கையான தேன் நமது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் தேனை சூடாக்கி பயன்படுத்தும் போது அது ஆமா என்ற நச்சுப்பொருளை உண்டாக்கி நமது சீரண மண்டலத்தை பாதிப்படையச் செய்து விடுகிறது.

Ayurveda Says, You Should Avoid These Eating Habits

தர்பூசணி :

தர்பூசணியில் இயற்கையான சுகர் மற்றும் அமிலத்தன்மை உள்ளது. எனவே இரவு உணவிற்கு பின் தர்பூசணியை சாப்பிட்டால் வயிறு மந்தம், சீரண பிரச்சினை, எரிச்சலுடன் மலம் கழித்தல் போன்றவை ஏற்படும் என ஆயுர்வேதம் சொல்கிறது.

தண்ணீர்:

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. ஆனால் உணவு சாப்பிடும் போது குளிர்ந்த நீர் குடித்தால் சீரண சக்தியை குறைத்து பல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.

அதற்கு பதிலாக நீங்கள் சுடு தண்ணீர் குடித்தால் உங்கள் சீரண சக்தி மேம்பட்டு உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு களும் கரையும்.

English summary

Ayurveda Says, You Should Avoid These Eating Habits

Ayurveda Says, You Should Avoid These Eating Habits
Story first published: Friday, July 21, 2017, 15:52 [IST]
Desktop Bottom Promotion