Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
எந்த வகை வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை ஏறும் அல்லது குறையும் என அறிவீர்களா?
வாழைப்பழம் மிக எளிதாக கிடைக்கக் கூடியது. அதிக சத்து உள்ளது. இதில் உள்ள நார்சத்து மற்றும் பொட்டாசியம் இதயத்திர்கு மிகவும் நல்லது. வாழைப்பழத்தின் வகைகளும் நன்மைகளையும் இப்போது பார்க்கலாம்.
நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என சிலர் சொல்வார்கள். சிலர் வாழைப்பழம் உடல் எடையை குறைக்கும் என்பார்கள். எதுதான் சரி என நாமும் குழம்பியிருக்கோம்.
உண்மையில் எல்லாவகை வாழைப்பழங்களும் ஒரே மாதிரி பண்பை பெற்றவை அல்ல. சில வாழைப்பழம் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

இன்னும் சில வாழைப்பழங்கள் வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். இப்படி எதிர்மறையான பண்பை பெற்றுள்ளன. உடல் எடையை குறைக்க அல்லது அதிகரிக்க எந்த மாதிரியான வாழைப்பழத்தை சாப்பிடலாம் என பார்க்கலாம்.

வாழைப்பழ சத்துக்கள் :
ஒரு வாழைப்பழ்த்தில் 108 கலோரி உள்ளது. இது 18 கிராம் கார்போஹைட்ரேட்டிற்கு சமமானது. இதில் அதிகளவு பொட்டாசியம். எல்லா விட்டமின் மற்றும் மற்ற தாதுப் பொருட்கள் உள்ளன.

உடல் எடையை குறையச் செய்யும் வாழைப்பழம் :
செவ்வாழை, பூவம் பழம், மற்றும் கற்பூரவள்ளி, மொந்தம் பழம் ஆகிய பழங்கள் உடல் எடையை குறைக்கச் செய்யும். ஏனென்றால் இவற்றில் அதிக அளவு பி6 மற்றும் நார்சத்து இருப்பதால் இவைகள் உடலில் கொழுப்புகளை குறைக்கும்.

உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் பழங்கள் :
மலை வாழைப்பழம் , நேந்திரம் பழம் ஆகியவற்றில் அதிக கலோரி இருக்கிறது. இவை 10 % அதிக பொட்டாசியம் சத்தை உள்ளடக்கியது.
அவற்றிலுள்ள அதிகப்படியான குளுகோஸ் கிளைகோஜனாக மாற்றப்பட்டு தசைகளில் சேமிக்கும்போது தசைகளுக்கு வலிமை தரும். உடல் எடை கூடும். இதனை மில்க் ஷேக் மற்றும் சேலட்டாக சாப்பிடும்போது உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.

வாழைப்பழத்தை எப்படி சாப்பிடலாம்?
வாழைப்பழத்தில் சுவையான ஸ்மூதி செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. அதுபோலவே ம்ற்ற பழங்களுடன் கலந்து சாப்பிடும்போது உடலில் அதிக சக்தி உண்டாகும்.



Click it and Unblock the Notifications
