For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாரெல்லாம் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது, ஏன்?

ஒரு சில உடல்நல கோளாறுகள் உள்ளவர்கள் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது தான் நல்லது. இல்லையேல், அந்த உடல்நலக் கோளாறின் வீரியம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

|

ஆரோக்கியமான உணவுகளும் கூட அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாக மாறிவிடும். ஆனால், சில சமயத்தில் உங்கள் உடல்நலனில் கோளாறு இருக்கும் போது ஆரோக்கியமான உணவுகள் சிலவற்றை நீங்கள் சிட்டிகை எடுத்துக் கொள்வது கூட அபாயமாக மாறலாம்.

Stop Using Turmeric If You Are in These Six Type of People

மஞ்சள், பூண்டு, இஞ்சி போன்ற உணவுகளை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் மருத்துவர்கள் அறிவுரைகின்றனர். என்னதான் ஆரோகியமான உணவுகளாக இருப்பினும் இவற்றை ஒருசில உடல்நல கோளாறு உள்ளவர்கள் தவிர்ப்பது தான் நல்லது.

இல்லையேல், அந்த உடல்நலக் கோளாறுகளின் வீரியம் அதிகரிக்கும் அபாயம் ஏற்படலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்பிணி பெண்கள்!

கர்ப்பிணி பெண்கள்!

கர்ப்பிணி பெண்கள் அல்லது தாய்பால் தரும் பெண்கள் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். பெண்கள் மத்தியில் இது கருப்பையில் தாக்கம் ஏற்படுத்த கூடியது என்பதால் தவிர்க்க கூறுகின்றனர்.

அப்பா ஆசையில் இருக்கும் ஆண்கள்...

அப்பா ஆசையில் இருக்கும் ஆண்கள்...

அப்பா ஆகவேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஆண்களும் மஞ்சளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில், இது டெஸ்டோஸ்டிரோன் சுரப்பியில் தாக்கத்தை உண்டாக்கும். இதனால் ஆண்களின் கருவளம் குறைய வாய்ப்புகள் உண்டு.

பித்தக்கற்கள்!

பித்தக்கற்கள்!

உங்களுக்கு பித்தக்கற்கள் கோளாறு இருந்தால், மஞ்சளை உணவில் இருந்து அறவே நீக்கிவிடுங்கள். இது பித்தக்கற்கள் கோளாறை பெரிதாக்கும். ஆனால், உங்களுக்கு பித்தக்கற்கள் கோளாறு இல்லை என்றால் மஞ்சளை சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில், இது கல்லீரலின் நலனை மேலோங்க செய்யும்.

நிணநீர் நாளம் அடைப்பு (Biliary Tract Obstruction)

நிணநீர் நாளம் அடைப்பு (Biliary Tract Obstruction)

நிணநீர் நாளம் அடைப்பு கோளாறு உள்ள நபர்கள் மஞ்சளை கட்டாயம் தவிர்க்க வேண்டும், அல்லது மிக குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சிறுநீரக கற்கள்!

சிறுநீரக கற்கள்!

சிறுநீரக கற்கள் கோளாறு உள்ளவர்கள் மஞ்சளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதால் சிறுநீரக கற்கள் வீரியம் அடையும் அபாயம் இருக்கிறது. எனவே, சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் தங்கள் உணவில் மஞ்சளின் அளவு 50 மி.கிராம்-க்கு அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு!

நீரிழிவு!

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ள நபர்கள் மஞ்சளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது. மஞ்சள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் குணம் கொண்டுள்ளது. எனவே, உங்கள் உணவில் மஞ்சளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

அறுவை சிகிச்சை!

அறுவை சிகிச்சை!

நீங்கள் அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள போகிறீர்கள் எனில், மூன்று வாரத்திற்கு முன்பே உணவில் மஞ்சளை சேர்த்துக் கொள்வதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் இரத்தத்தில் மஞ்சள் ஏற்படுத்தும் தாக்கம், அறுவை சிகிச்சையின் போது அதிக இரத்தம் வெளியேற காரணமாகிவிடும் என கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Stop Using Turmeric If You Are in These Six Type of People

Stop Using Turmeric If You Are in These Six Type of People
Story first published: Wednesday, October 19, 2016, 10:07 [IST]
Desktop Bottom Promotion