For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாரெல்லாம் க்ரீன் டீ குடிக்கக் கூடாது என தெரியுமா?

|

க்ரீன் டீ குடிப்பது எல்லாருக்கும் இப்போது கௌரவ விஷயமாக நிறைய பேர் செய்து கொண்டிருக்கிறோம். பிடிக்குதோ இல்லையோ. மற்றவர்களிடம் பெருமைக்காக சொல்லவாவது சிலர் குடிப்பதுண்டு.

ஆனால் குடித்த பின் சிலருக்கு வாந்தி, நெஞ்செரிச்சல் அல்லது வேறு பாதிப்பு உண்டாகலாம். க்ரீன் டீயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. சந்தேகமில்லை. உடலுக்கு நல்லதுதான்.

ஆனால் எல்லாரும் இதனை குடிக்கக் கூடாது. வெகுசிலருக்கு இதனால் பிரச்சனைகளும் உண்டாகலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். யாருக்கெல்லாம் தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருந்துக்கள் சாப்பிடுபவர்கள் :

மருந்துக்கள் சாப்பிடுபவர்கள் :

நீங்கள் உங்கள் நோய்க்காக மருந்து எடுத்துக் கொள்பவரா? அப்படியென்றால் நீங்கள் க்ரீன் டீ எடுப்பது உசித்தமல்ல. ஏனென்றால் க்ரீன் டீ மருந்துக்களுடன் வினைபுரிந்து எதிர்வினையை தரும். இது ஆபத்தானது.

 டயட் அல்லது சத்து மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் :

டயட் அல்லது சத்து மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் :

உடல் எடையை குறைக்க அந்த டயட், இந்த டயட் என குறிப்பிட்ட வகையறா டயட்டுகளை பின்பற்றுபவரா? அல்லது சத்து மாத்திரைகளை சாப்பிடுபவரா?

டயட்டுகளால் உங்கள் ரத்தத்தின் அடர்த்தி குறைந்திருக்கும். அந்த சமயத்தில் க்ரீன் டீ குடிப்பதால் இன்னும் அதிக அடர்த்தி குறைந்து பல பிரச்சனைகளை தரும்.

மாத விடாய் காலத்தில் :

மாத விடாய் காலத்தில் :

மாதவிடாய் காலத்தில் க்ரீன் டீ சில பெண்களுக்கு ஒவ்வாமை உண்டாகும். எனவே அந்த மாதிரியான சமயங்களில் க்ரீன் டீ தவிர்ப்பது நல்லது. இதிலுள்ள காஃபின் அலர்ஜியை உண்டாக்கலாம்.

 காஃபின் அலர்ஜி :

காஃபின் அலர்ஜி :

சிலருக்கு காஃபின் ஒவ்வாமை இருக்கும். க்ரீன் டீ யில் குறைந்த அளவே காஃபின் இருந்தாலும் இரண்டு முறைக்கும் அதிகமாக குடிக்கும்போது டென்ஷன், நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை ஆகியவை உண்டாகும்.

 க்ரீன் டீக்கு ஈடாக எதை சாப்பிடலாம்?

க்ரீன் டீக்கு ஈடாக எதை சாப்பிடலாம்?

க்ரீன் டீ யில் இருக்கும் அனைத்து சத்துக்களும் பழச் சாறுகளில் உள்ளன. அதிக ஆன்டி ஆக்ஸிடென்டுகளுடன் கூடிய பழச் சாறுகளை நீங்கள் க்ரீன் டீ க்கு பதிலாக எடுத்துக் கொள்ளலாம்.

 க்ரீன் டீக்கு ஈடாக எதை சாப்பிடலாம்?

க்ரீன் டீக்கு ஈடாக எதை சாப்பிடலாம்?

பக்கவாதம் அல்லது இதய நோய் உண்டானவர்கள் தினமும் பெர்ரி பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது.

ஓட்ஸ் மற்றும் பெர்ரி பழங்களில் அதிக நார்சத்தும் ஆன்டி ஆக்ஸிடென்ட்டும் இருப்பதால் அவை சிறந்த பலனளிக்கும். க்ரீன் டீ க்கு பதிலாக இவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

 க்ரீன் டீக்கு ஈடாக எதை சாப்பிடலாம்?

க்ரீன் டீக்கு ஈடாக எதை சாப்பிடலாம்?

உங்களுக்கு புத்துணர்ச்சி தரும்வகையில் இருக்க வேண்டுமென நினைத்தால், இஞ்சி தே நீர், சீமை சாமந்தி தே நீர் ஆகியவ்ற்றை எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் க்ரீன் டீ க்கு இணையான சத்துக்கள் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Impacts of drinking green tea

Who should not drink green tea? and impacts of green tea.
Desktop Bottom Promotion