For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

50 வயதிற்கு பின் வரும் இந்த நோயை தடுப்பது எப்படி ?

|

எலும்புகளிலுள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவு குறைந்து, பலமிழக்கும்போது ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் உண்டாகிறது. கால்சியம் சத்து உடலில் உறிய விட்டமின் டி யும் தேவைப்படுகிறது. விட்டமின் டி குறையும்போதும், எலும்பு தேய்கிறது.

How can protect yourself from osteoporosis after 50s,

பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு திறன் குறைவு நோய் ஏற்படும். இப்போது இளம் வயதினரையும் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோயின் காரணமாக எலும்புகள் போதிய சக்தியில்லாமல் எளிதில் உடையும் நிலையை அடைகின்றன.

இந்த நோய் வந்தால் குணப்படுத்துவது கடினம் . காரணம் முதுமையில் கால்சியம் சத்து உடலில் உறியப்படுவது வெகுவாக குறையும். ஆகவே இளமையிலேயே கால்சியம் மற்றும் விட்டமின் டி சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பால் பொருட்கள் :

கால்சியம் சத்து அதிகம் உள்ள பால், கீரைகள் போன்றவற்றை சாப்பிடவேண்டும். சீஸ், தயிர், பன்னீர் போன்றவற்றில் கால்சியம் காணப்படுகிறது. அவற்றை சாப்பிடலாம். இதனால் எலும்புகள் பலமடையும்.

நட்ஸ் வகைகள் :

பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றில் உடலுக்குத் தேவையான தாது உப்புகள் உள்ளன. கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்றவைகள் காணப்படுகின்றன. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பாதிப்படையாமல் தப்பிக்கலாம்.

காய்கறிகள் :

புருக்கோலி, முட்டைக்கோஸ், காலிப்ளவர், பீட்ரூட் போன்ற காய்கறிகளை தினசரி சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம்.

பழ வகைகள் :

ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரீஸ், வாழைப்பழம், ஆப்பிள் போன்றவை எலும்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும். 100 கிராம் ராகியில் 330 மில்லிகிராம் முதல் 350 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. எனவே ராகி சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

பேரிச்சம்பழம் :

பேரிச்சம்பழத்தில் கால்சியம், மாங்கனீஸ் உள்ளது. அதேபோல் தாமிரச்சத்துக்களும், மங்கனீசியமும் காணப்படுகின்றன. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கும், சருமத்திற்கும் வைட்டமின் டி அவசியம். எனவே வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. எனவே உடலில் சூரிய ஒளி படுமாறு நிற்கலாம்.

பருப்பு மற்றும் மீன் வகைகள் :

கருப்பு உளுந்து கால்சியம் சத்து நிறைந்தது. சோயா, கொள்ளு போன்றவைகளில் கால்சியம் சத்து காணப்படுகின்றன.மேலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன் உணவுகளை உட்கொள்ளலாம். இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பெண்களை தாக்கும் எலும்பு வியாதிகளை தடுக்கலாம்.

English summary

How can protect yourself from osteoporosis after 50s

How can protect yourself from osteoporosis after 50s,
Story first published: Saturday, August 6, 2016, 17:01 [IST]
Desktop Bottom Promotion