வாயுத்தொல்லை போக்க மருத்துவர்கள் பின்பற்றுவது என்ன ?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

திடீரென வயிற்று வலி, வாய்வு, வீக்கம் உப்புசம், நெஞ்செரிச்சல் என பல தருணங்களில் ஜீரண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மருத்துவர்களுக்கு வராதா? அவர்களும் மனிதர்கள்தானே என நமக்கு சந்தேகம் தோன்றும்.

மருத்துவர்கள் இந்த மாதிரியான விஷயங்களில் மிகவும் முன்னெச்செரிக்கையுடன்தான் இருக்கிறார்கள்.

காரணம் இரவு பகல் பாராமல் அவர்கள் சேவை செய்தாகும் தங்களின் ஆரோக்கிய விஷயத்தில் முன்னெச்சரிக்கையுடனே இருக்கிறார்கள் என்பதற்கான ஆதரங்களை தொடர்ந்து படியுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பச்சை காய் வகைகளின் சாறு

பச்சை காய் வகைகளின் சாறு

"தினமும் ஆப்பிள், எலுமிச்சை சாறு, செலரி, பார்ஸ்லி,பசலை, காலே போன்ற பச்சை நிற கீரை அல்லது காய் வகைகளின் சாறுகளை குடிக்கிறேன். இவை மிகச் சிறந்த எரிபொருளாக நமது ஜீரண மண்டலத்திற்கு விளங்குகிறது.

வாரம் ஒரு நாள் விரதம் :

வாரம் ஒரு நாள் விரதம் :

வாரம் ஒரு நாள் உணாமல் விரதம் இருக்கிறேன். இரவு மட்டுமே லைட்டாக எடுத்துக் கொள்கிறேன்.

இதனால் கல்லீரலுக்கு போதிய ஓய்வுகள் கொடுத்து, நச்சுக்களை வெளியேற்ற ஏதுவாகிறது. அன்று நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறேன் " என ராபின் சட்கான் என்ற MD மருத்துவர் கூறுகிறார்.

 கார்பனேட்டட் பானங்கள் :

கார்பனேட்டட் பானங்கள் :

"நான் கார்பனேட்டட் குளிர்பானங்களை தொட மாட்டேன். சிக்கரி கலந்த எந்த உணவுப் பொருட்களையும் சாப்பிடுவதில்லை, குடிப்பதில்லை.

இவையே அஜீரணத்திற்கு அதிக காரணம். நார்சத்து உணவுகளை விருப்பமாக சாப்பிடுவேன்" என லாங்க் பீச் என்ற மருத்துவமனையின் MD பாவேஷ் ஷா என்ற மருத்துவர் கூறுகிறார்.

சாப்பாடு,உடற்பயிற்சி :

சாப்பாடு,உடற்பயிற்சி :

"நான் யோகார்டை தினமும் சாப்பிடுகிறேன். அது நல்ல பேக்டீரியாக்களை உற்பத்தி செய்கிறது. அதேபோல் நீர் நிறைய அருந்துவேன். உடலின் பாதி பிரச்சனைகளுக்கு நீர் போதிய அளவில் அருந்தாமல் இருப்பதுதான். ஜீரண பாதிப்புகள் வராமலிருக்க நீர் அருந்தினாலே போதும்.

தூக்கம் :

தூக்கம் :

அதேபோல் தினமும் நடக்கிறேன். இதனால் நன்றாக பசியெடுக்கிறது. ஜீரண நொதிகள் சுரந்து ஜீரண ஸ்க்தியை தருகிறது. அதேபோல் 6-8 மணி நேரம் தூங்குவேன். இதனால் மன, உடல் இரண்டுமே புத்துணர்வாகிறது " என கேத்தரின் என்ற இரைப்பை குடலியல் மருத்துவர் கூறுகிறார்.

உணவு லேபிளில் கவனம் :

உணவு லேபிளில் கவனம் :

"உணவுப் பொருட்களில் நான் கவனமுடன் பார்ப்பேன். "ஆல் " என வரும் சார்பிடால், மானிடால், லாக்டிடால் ஆகியவை செயற்கை இனிப்புகள்.

இவை வயிற்று உப்புசத்தை கொடுத்துவிடும். உடலுக்கும் நல்லதல்ல. கேண்டி வகை இனிப்புகள், கேக், குக்கி ஆகியவைகளை நான் சாப்பிடுவதில்லை.

உடலுக்கு தீங்கு தரும் இவற்றை ஏன் தேடி உண்ண வேண்டும்"

என்று நிதின் குமார் என்ற மருத்துவர் கூறுகிறார்.

வாய்வு உண்டாக்கும் உணவுகளை தவிருங்கள் :

வாய்வு உண்டாக்கும் உணவுகளை தவிருங்கள் :

"சில உணவுகள் நமக்கு வாய்வை தரும். புருக்கோலி, முட்டைகோஸ் லெட்யூஸ் ஆகியவற்றை நாம் உண்ண மாட்டேன்.

வெளியூர் செல்லும்போது பிரட், கிழங்கு சம்பந்தமான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்த்தல் நல்லது. அவை அஜீரணத்தை உண்டாக்கி, வயிறு சம்பந்த பிரச்சனைகளை உண்டுபண்ணும்" என ஷில்பா மெஹ்ரா என்ற குடலியல் மருத்துவர் கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to beat bloating

these things are followed by Doctors to avoid bloating problem,
Subscribe Newsletter