உணவு அலர்ஜியை குணப்படுத்தும் உணவுகள் எவை?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

பொதுவாக வேறொரு கிருமியோ பொருளோ உடலுக்குள் நுழைந்துவிட்டால் நமது நோய் எதிர்ப்பு செல்கள் அவை உடலைச் சார்ந்தது அல்ல என விரைந்து சென்று சண்டையிடும்அதே போல் இச்செல்கள் வெகு சில உணவுப் பொருள்களில் இருக்கும் மூலப்பொருட்களை தவறாக எண்ணி அவற்றிடம் தம் எதிர்ப்பை காண்பிக்கும். இதனால் உண்டாகும் பக்கவிளைவுகள்தான் அலர்ஜி.

புரோட்டின் அலர்ஜி, லாக்டோஸ் அலர்ஜி இவை எல்லாம் காரணமாகும். முட்டை, பால், கோதுமை, வேர்க்கடலை சிலருக்கு ஒவ்வாமல் இருக்கும். சிரு வயதில் சிலருக்கு அலர்ஜியை கொடுத்தாலும் வளர்ந்ததும் சரியாகிவிடும். இன்னும் சிலருக்கு எப்போதும் அப்படியே இருக்கும்.

உணவு அலர்ஜி ஏற்பட்டவர்களுக்கு இந்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடாமல் இருக்கும்போது, போதிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். எனவே அந்த மாதிரியான சமயங்களில் அலர்ஜியை எடுத்து போராடும் உணவுகளை எடுத்துக் கொண்டால் உடலுக்கு தெம்பும், அலர்ஜியை குணப்படுத்தும் வகையில் நாளடைவில் நோ எதிர்ப்பு செல்கள் தங்களை தாங்களே திருத்திக் கொள்ளும். அவை என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சி :

இஞ்சி :

இஞ்சியில் நிறைய நோய் எதிர்ப்பு திறன் உள்ளது. இவை அலர்ஜியினால் உண்டாகும் பாதிப்புகளை சரிப்படுத்தும். இஞ்சியில் தேநீர் செய்து குடிக்கலாம். உடலுக்கு பலமும் தரும்.

எலுமிச்சை :

எலுமிச்சை :

எலுமிச்சையில் அதிகமான விட்டமின் சியும் அதிக சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. இவை உணவு அலர்ஜியை எதிர்த்து போராடும். தினமும் குடித்தால் உணவு அலர்ஜி குணமாகிவிடும்.

க்ரீன் டீ :

க்ரீன் டீ :

உணவு அலர்ஜியினால் உண்டாகும் வயிறு உப்புசம் மற்றும் வாந்தியை தடுக்கும். அந்த மாதிரி சமயங்களில் க்ரீன் டீ தயார் செய்து குடித்தால் இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

கேரட் மற்றும் வெள்ளரி :

கேரட் மற்றும் வெள்ளரி :

கேரட் மற்றும் வெள்ளரிக்காயில் ஜூஸ் போட்டு குடித்தால் அலர்ஜியினால் உண்டாகும் வயிற்று உபாதைகளை எதிர்க்கிறது. வயிற்றுப் பிரச்சனைகளை தடுப்பதில் சிறந்த மருந்தாக இந்த இரண்டும் செயல்படுகிறது

ஆப்பிள் சைடர் வினிகர் :

ஆப்பிள் சைடர் வினிகர் :

ஆப்பிள் சைடர் வினிகர் வயிற்றில் அதிகமாக சுரக்கும் அமிலத்தன்மையை கட்டுப்படுத்தும். நச்சுக்களையும் ஃப்ரீ ரேடிகல்ஸையும் வெளியேற்றும். தினமும் வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அலர்ஜியை தடுக்கலாம்.

விளக்கெண்ணெய் :

விளக்கெண்ணெய் :

மருத்துவ குணம் வாய்ந்த விளக்கெண்ணெய் உணவு அலர்ஜியை எதிர்த்து போராடுகிறது. வயிற்றிலுள்ள கிருமிகளையும். அலர்ஜியினால் உண்டாகும் பாதிப்புகளையும் சரிப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Home Remedies For food Allegy

Foods to prevent and Cure the food Allergy
Story first published: Wednesday, August 24, 2016, 16:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter