மாதவிலக்கு கோளாறை குணப்படுத்தும் ஒரு மூலிகை சூப் !!

Written By:
Subscribe to Boldsky

மாத விலக்கு முறையற்று வந்தால் உடலில் ஹார்மோன் பிரச்சனை உண்டாகியிருக்கிறது என்று அர்த்தம். அதனை ஆரம்ப காலக்கட்டத்திலேயே குணப்படுத்துவது நல்லது.

ஈஸ்ட்ரோஜன் சரியாக தூண்டப்படாமல் இருப்பதால் அல்லது ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் இத்தகைய பாதிப்புகள் உண்டாகலாம்.

அதோடு சாப்பிடும் ரசாயனம் மிகுந்த கேடு தரும் ஜங்க் உணவுகளும் மாதவிடாய் சீரற்று இருப்பதற்கு காரணம். உடனடியாக மருத்துவரை ஆலோசித்து தகுந்த காரணத்தை கண்டுபிடிக்கலாம்.

Herbal soup to cure irregular menstrual cycle

முக்கியமாக நமது இயற்கை மூலிகை நிறைந்த காய்களுக்கு மருத்துவ குணங்கள் உண்டு. டெங்குவிற்கு வேம்பு பப்பாளி மருந்தாவதைப் போல், மாதவிடாய் கோளாறுகளுக்கும் நமது பாரம்பரிய இயற்கை வைத்திய முறைகள் உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையானவை :

தேவையானவை :

மணத்தக்காளிக் கீரை - 1 கைப்பிடி

கொத்தமல்லி விதை - 1 ஸ்பூன்

சீரகம் - 1ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 4 பல்

சின்ன வெங்காயம் - 3

வெற்றிலை - 2

மிளகு - அரை ஸ்பூன்

செய்முறை :

செய்முறை :

மணத்தக்களியையும், வெங்காயம், மற்றும் பூண்டையும் பொடிபொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் தேவையான அளவு நீரை எடுத்து அதில் மேலே சொன்ன எல்லா பொருட்களையும் சேர்த்து நறுக்கி வைத்தவைகளையும் போட்டு சிறிது உப்பும் சேர்த்து கொதிக்க வையுங்கள்.

20 நிமிடங்கள் பிறகு ஆற வைத்து வடிகட்டி சூப் போல குடிக்க வேண்டும்.

எப்போது சாப்பிட வேண்டும் :

எப்போது சாப்பிட வேண்டும் :

தினமும் காலை மாலை என சாப்பிட்ட பின்போ, முன்போ உங்கல் விருப்பப்படி இருவேளை குடியுங்கள். மாதவிடாய் நெருங்கும் போது 10 நாட்கள் தொடர்ந்து குடியுங்கள். இவ்வாறு மூன்று மாதங்கள் குடித்தால் மாத விடாய் சீராகும்.

அனைவரும் குடிக்கலாம் :

அனைவரும் குடிக்கலாம் :

இதனை மற்ற பெண்களும் சாப்பிடலாம். இதனால் உடல் பலம் பெறும். கர்ப்பப்பை வலுப்பெறும். ரத்த சுத்தகரிப்பு, நல்ல நினைவாற்றல் ஆகியவை அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Herbal soup to cure irregular menstrual cycle

Herbal soup to cure irregular menstrual cycle
Story first published: Friday, December 2, 2016, 13:00 [IST]
Subscribe Newsletter