Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
பூசணிக்காயை வாரம் இருமுறை சாப்பிட்டால் உண்டாகும் அற்புத நன்மைகள் பற்றி தெரியுமா?
நமது நாட்டில் பருவ காலத்திற்கு தகுந்தாற் போல் விளையும் காய்கறிகள் நமது உடலின் சீதோஷணத்திற்கு தகுந்தாற்போல் நன்மைகளை செய்யக் கூடியது. அவ்வாறு பூசணிக்காயை சாப்பிடுவதால் வரும் நன்மைகளை காண்போம்.
பூசணிக்காயின் விதைகளில் விட்டமின் பி, விட்டமின் ஏ, மினரல்ஸ் எனப்படும் தாது உப்புக்கள், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், ஸிங்க், லினோனெலிக் அமிலம் ஆகியன அடங்கியுள்ளன.

வாரம் இருமுறை அல்லது அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டாகும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

புற்று நோயை விரட்டும் :
பூசணிக்காயின் விதைகளில் உள்ள ஸ்டெரைல் கிளைகோஸைட் மற்றும் கொழுப்பு அமிலம் ஆகியவைகள் புற்று நோய் கட்டிகளைத் தாக்க வல்லது. செல் இறப்பிலிருந்து பாதுகாக்கும்.

நுரையீரல் பிரச்சனைக்கு தீர்வு :
வெண் பூசணிச்சாறு ரத்தத்தைக் கட்டுபடுத்தக் கூடியது. பூசணி சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நெல்லி சாறு அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் நுரையீரல் சம்பந்த நோய்கள் தீரும்.

வயிற்றுப் பூச்சிகளை கொல்லும் :
பூசணிக்காய் வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை கொல்லக் கூடியது. மூலத்திற்கும் மருந்தாக பயன்படக் கூடியது

மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் :
ஆயுர் வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் வெண் பூசணிப் பூவை மஞ்சள் காமாலை நோயைப் போக்கவும், சீதபேதி மற்றும் இருமலைப் போக்கவும் பயன்படுத்துகின்றனர்.

மலச்சிக்கலை குணப்படுத்தும் :
பூசணிக்காய் எலும்புகள் பலவீனமாவதை தடுக்க உதவுகிறது. இதில் மிகுந்திருக்கும் நார்ச்சத்து சீரண உறுப்புகளுக்கு பலத்தை தந்து மலச்சிக்கல் உண்டாகாதவாறு உதவி செய்கிறது.

தலைவலி பிரச்சனையை குணப்படுத்தும் :
வெண்பூசணியின் முற்றிய காய்கள் தலைவலி, நெஞ்சு சளி, மூச்சிரைப்பு ஆகியவற்றுக்கு மருந்தாவதோடு சிறுநீரக மற்றும் நோய்களையும் போக்கும்.

சிறு நீரக பாதிப்பிற்கு :
வெண்பூசணி வேரை, மஞ்சள் காமாலை மற்றும் சிறுநீர் பையின் அடைப்போ அல்லது எரிச்சலுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
அதோடு அடிக்கடி சிறு நீர் கழிக்க வேற்ண்டுமென்ற உணர்விற்கும் மருந்தாக பயன்படுகிறது.

புதிய செல்கள் உற்பத்தி :
வெண்பூசணிக் கொடியின் தண்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் சத்துக்கள் புதிய செல்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.

இதயக் கோளாறுகளை குணப்படுத்தும் :
பூசணியில் பொட்டாசியம் சத்து மிகுதியாக இருப்பதால் இது அதிக ரத்த அழுத்தத்தையும் அதனால் ஏற்படக் கூடிய இதயக் கோளாறுகளையும் தடுக்க வல்லது. பூசணிக்காயில் துத்தநாகம் சத்து மிகுதியாக உள்ளது.



Click it and Unblock the Notifications
