இதை படித்தால் உருளைக் கிழங்கின் தோலை தூக்கி வீச மாட்டீர்கள்!!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

ஜப்பானில் குழந்தைகளுக்கு அவித்த உருளைக் கிழங்கை அநேகமாக எல்லாரும் கட்டாயம் கொடுக்கச் செய்வார்கள்.

நாம் பாக்கெட் ஸ்நேக்ஸ் கொடுத்து ருசியின் திறனை வேறு வகையில் திசை திருப்பி விடுகிறோம். இதனால் பிள்ளைகள் காய்கறிகள் என்றாலே ஓடுகிறார்கள்.

காய்கறிகள் ஒவ்வொன்றும் நமது உடல் பாதிப்பை சரி செய்யக் கூடியவை. அதுபோல் மூளையின் வளர்ச்சிக்கு உருளைக் கிழங்கு மிகவும் முக்கியம்.

நாம் உருளைக் கிழங்கை சாப்பிட்டாலும் எல்லாருமே தோலை உரித்துவிட்டு தான் சமைக்கிறோம். ஆனால் தோலில் உருளைக் கிழங்கை விட மிக முக்கிய சத்துக்களும் நோய்களை தடுக்கும் ஆற்றலும் உண்டு என்பதை அறிவீர்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோலிலுள்ள சத்துக்கள் :

தோலிலுள்ள சத்துக்கள் :

தோலை சமைக்கும் போது அதன் சத்துக்கள் ரெட்டிப்பாகிறது. இதனால் அதன் சத்துக்களை முழுமையாக பெற முடியும். விட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ், கால்சியம் உள்ளது. 5கி நார்சத்து உள்ளது, 3 கி புரோட்டின் உள்ளது.

 உடல் எடையை குறைக்கிறது :

உடல் எடையை குறைக்கிறது :

உருளைத் தோலில் மிகக் குறைந்த அளவு, கொழுப்பு, கொலஸ்ட்ரால், சோடியம் உள்ளது. தோலுடன் சேர்த்து சமைக்கும்போது கிழங்கிலுள்ள கலோரிகளை அதிகரிக்காது.

ஆகவே உருளைக் கிழங்கு சாப்பிட நினைப்பவர்கள் தோலுடன் சேர்த்து சாப்பிடும்போது உங்கல் உடல் எடையை குறைக்கலாம். கார்போஹைட்ரேட் அதிகரிக்காது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் :

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் :

உருளைத் தோலில் விட்டமின் பி, சி மற்றும் கால்சியம் இருப்பதால் இவை மூன்றுமே நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் சத்துக்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அடிக்கடி நோய்வாய்படுபவர்கள் தோலுடன் சேர்த்து உருளைக் கிழங்கை சாப்பிடுங்கள்.

புற்று நோயை தடுக்கும் :

புற்று நோயை தடுக்கும் :

இதிலுள்ள ஃபைடோகெமிக்கல் புற்று நோயை தடுக்கிறது.அதேபோல் ஏற்கவே புற்று நோய் இருப்பவர்களுக்கு நோய் பரவாமல் இருக்கவும், அடுத்த நிலைக்கு செல்லாமல் இருக்கவும் உதவுகிறது.

சர்க்கரை அளவு குறைக்கிறது :

சர்க்கரை அளவு குறைக்கிறது :

உருளைக் கிழங்கு தோலில் அதிக நார்சத்து இருப்பதால் அவை குளுகோஸ் அளவை கட்டிப்பாட்டில் இருக்க உதவுகிறது.

குறிப்பாக இரவில் நாம் சாப்பிடும் உணவுகள் சக்கரை அளவை அதிகரிக்கச் செய்கின்றன. இரவுகளில் உருளைக் கிழங்கு தோலை டயட்டில் எடுத்துக் கொண்டு பாருங்கள்.

ரத்தத்தில் குளுகோஸ் அளவு கட்டுக்குள் இருக்கும். உருளைக் கிழங்கு தோலிய சூப்பாகவும் செய்து சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health benefits of potato peels

If you know the health benefits of eating potato peels, you will not throw them out
Subscribe Newsletter