தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதம் என்ன தெரியுமா?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும். புற்று நோயிலிருந்து கூட நம்மை காப்பாற்றிக் கொள்ளலம்.

நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை ஒரு வெள்ளரிக்காய் அன்றாடம் செய்கிறது.

தினமும் ஒரு வெள்ளரிக்காயை சாலட்டாகவோ, அல்லது அப்படியேசாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா? இதைப் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 உங்கள் சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் :

உங்கள் சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் :

வெள்ளரிக்காயில் 95% நீர்சத்து உள்ளது. உடலில் தங்கும் தீய நச்சுக்களை எல்லாம் இழுத்து சிறு நீரகத்திற்கு அனுப்புகிறது. இதனால் உங்கள் சருமம் மெருகேறும்.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் :

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் :

அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் கலோரியை எரிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. எனவே கலோரி அதிகரிக்காமல், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

 வாய் துர் நாற்றத்தை போக்க :

வாய் துர் நாற்றத்தை போக்க :

உங்களுக்கு வாய் துர் நாற்ற பிரச்சனை இருக்கிறதா? அப்படியென்றால் தினமும்வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள். இது வாயில் உண்டாகும் கிருமிகளை அழிக்கும்.

ஈறுகளைப் பலப்படுத்தும். அதோடு வாய் துர் நாற்றத்தை கட்டுப்படுத்துகிறது.

 எப்படி கட்டுப்படுத்தலாம்?

எப்படி கட்டுப்படுத்தலாம்?

வாய் துர் நாற்றத்தை போக்க, ஒரு துண்டு வெள்ளரிக்காயை வாயில் வைத்துக் கொள்ளுங்கள். 30 நொடிகள் வரை வைக்கவும். சக்திவாய்ந்த பேக்டீரியா எதிர்ப்புத் திறன் வாயில் உள்ள கிருமிகளை அழித்து துர் நாற்றத்தை போக்கும்.

உடல் எடை குறைக்கும் :

உடல் எடை குறைக்கும் :

தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதை பார்ப்பீர்கள். கொழுப்பு செல்களை கரைக்கும்.

அதிக நீர்ச்சத்து கொண்டுள்ளதால், கொழுப்பு கார்போஹைட்ரேட் சத்துக்களை வேகமாய் ஜீரணித்து சக்தியாய் மாற்றிவிடும்.

மேலும் உடல் எடையை அதிகரிக்கவும் செய்யாது. வயிற்றிலுள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health benefits of cucumber

Eat a cucumber everyday ans see the magical improvement in your body
Story first published: Thursday, September 22, 2016, 12:31 [IST]
Subscribe Newsletter