Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
ரத்த அழுத்தம், பக்க வாதம் வராமலிருக்க இந்த மில்க் ஷேக் குடிங்க !!
உடலில் பல பாதிப்புகள் வருவதற்கு சரியான ஊட்டசத்து கொண்ட உணவுகள் எடுத்துக் கொள்ளாததே காரணம். பழங்களை கொண்டு செய்யப்படும் மில்க் ஷேக் உடலுக்கு இருமடங்கு பலத்தை தரும்.
வாழைப் பழம் மிக எளிமையான பழம். எளிதில் ஜீரணமாகும். சுவையும் அதிகம். எல்லா விட்டமின்களும் நிறைந்த்து. கூடுதலாக பொட்டாசியம் அதிகம் கொண்டது. இதயத்ஹிற்கு மிகவும் நன்மை கொண்டது.
அதிக நார்சத்து பெற்றுள்ளது. இந்த பழத்தை அப்படியே சாப்பிடுவது நல்லதுதான். பொதுவாக ஆப்பிள் , ஆரஞ்சு போல் இதில் ஜூஸ் செய்வதை விரும்பி மாட்டோம்.

ஏனென்றால வாழைப்பழம் சாப்பிட எளிது. ஆனால் ஜூஸ் குடிப்பதாலும் நன்மைகள் உண்டாகும்.
நீர்சத்தும் , தெம்பும் இருமடங்குகிடைக்கும் . வாழைப் பழ ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

எனர்ஜி தருகிறது :
விளையாட்டு வீரர்கள் இடைவேளைகளில் வாழைப் பழ ஜூஸ் குடிப்பதை கவனித்திருக்கிறீர்களா? குளுகோஸ், சுக்ரோஸ், ஃப்ரக்டோஸ் ஆகியவை அதிகம் உடலுக்கு கிடைக்கின்ரன.
இதனால் உடனடியாக எனர்ஜி பெறப்படுகிறது. ஜிம்மில் அல்லது வீட்டில் உடற்ப்யிற்சி செய்பவர்கள் வாழை பழ ஜூஸை எடுத்துக் கொண்டால் நீரிழப்பை தடுக்கலாம். சோர்வடையாமல் வைக்கும்.

ஸ்ட்ரோக் வராமல் காக்கும் :
வயதானபின் வரும் பக்கவாதம். ரத்த அழுத்தம் வரவிடாமல் காக்கும். இதிலுள்ள பொட்டாசியம் ரத்தத்தில் சோடியம் அளவை அதிகரிக்காமல் காக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் மற்றும் பக்க வாதம் தடுக்கப்படுகிறது.

அல்சர் வராமல் காக்கும்
வயிற்றில் வரும் அல்சரை தடுக்கிறது. நல்ல பெக்டீரியாக்களை உருவாக்குகிறது. இவை வயிற்றில் உண்டாகும் பாதிப்புகளை சரி செய்யும்.

ஜீரண மண்டலம் பலப்படும் :
தினமும் அல்லது வாரம் மூன்று நாட்களுக்கு வாழைப் பழ ஜூஸ் குடித்தால் குடல்கள் நெகிழ்வுத்தன்மை பெறும். மலச்சிக்கல் வராது

கொலஸ்ட்ராலை குறைக்கும் :
வாழைப் பழம் கெட்ட கொழுப்பை குறைப்பதால் கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது. வாழைபழத்திலுல்ள பெக்டின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது

மூளையின் பலத்தை அதிகரிக்கும் :
ஞாபக சதியை அதிகரிக்க தினமும் காலையில் வாழைப்பழ மில்க் ஷேக் குடித்து பாருங்கள். குறிப்பாக குழந்தைகள் குடித்தால் மிகவும் நல்லது.

நோய் எதிர்ப்பு திறன் மற்றும் நரம்பு மண்டலம் :
இதில் அனைத்து விட்டமின்களும் இருக்கின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தும்



Click it and Unblock the Notifications
