நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது சாப்பிடக்கூடாத உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

நாம் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால் அவற்றில் சில உணவுகள் நம் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கவும் கூடும். தற்போது அதிகப்படியான வேலைப்பளுவால் நம்மில் பலரது உடலிலும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகா நிலைகள்!

இதன் காரணமாக நாம் உண்ணும் சில உணவுகளால் அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடும். ஏனெனில் அந்த உணவுகளில் உள்ள சிறிய பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள், ஏற்கனவே நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள உடலினுள் நுழைந்து அதன் வேலையைக் காட்ட ஆரம்பிக்கும். அதில் வாந்தி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தொண்டை கரகரப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை எது பலவீனப்படுத்துகிறது என்று தெரியுமா?

இங்கு உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது சாப்பிடக்கூடாத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து உஷாராகிக் கொள்ளுங்கள்.

உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அழிக்கும் உணவுப் பொருட்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடல் சிப்பி

கடல் சிப்பி

குறிப்பிட்ட ஆரோக்கிய கணிப்புகளில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், கடல் சிப்பி உண்பதைத் தவிர்ப்பது நல்லது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவை சில நுண்ணுணிரிகளின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க முனையுமாம்.

முளைக்கட்டிய பயிர்கள்

முளைக்கட்டிய பயிர்கள்

முளைக்கட்டிய பயிர்கள் ஆரோக்கியமானது தான். ஆனால் அதனை சரியான முறையில் சுத்தமாக கழுவாமல் முளைக்கட்ட வைத்து உட்கொண்டால், அது உடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தான் அதிகரிக்கும். எனவே முடிந்த வரையில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், உண்ணும் உணவை வேக வைத்து உட்கொள்வது நல்லது.

வெட்டப்பட்டு விற்கப்படும் காய்கறிகள்

வெட்டப்பட்டு விற்கப்படும் காய்கறிகள்

தற்போது காய்கறிகளை வெட்டக்கூட நேரம் இல்லாமல் இருப்பதால், கடைகளில் சில காய்கறிகளை வெட்டப்பட்ட நிலையில் பாக்கெட்டுகளில் விற்கப்படுகின்றன. இப்படி வெட்டப்பட்டு விற்கப்படும் காய்கறிகள் அசுத்தமானதாகவே இருக்கும். எனவே இம்மாதிரியான உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.

பச்சை பால்

பச்சை பால்

பச்சை பாலில் ஒட்டுண்ணிகள், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். எனவே நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், பாலைக் குடிக்கும் முன் அதனை நன்கு காய்ச்சிய பின்னரே பருக வேண்டும்.

பச்சை முட்டை

பச்சை முட்டை

பச்சை முட்டையில் பல்வேறு நோய்களுக்கு காரணமான சால்மோனெல்லா இருக்கும். எனவே உடல்நிலை சரியில்லாத நேரத்திலோ அல்லது நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள தருணத்திலோ, முட்டையை பச்சையாக குடிப்பதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

இறைச்சி

இறைச்சி

மார்கெட்டுகளில் பாக்கெட்டு போட்டு விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை வாங்கி உண்பதை ஒவ்வொருவரும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இறைச்சியை பதப்படுத்த சேர்க்கப்படும் கெமிக்கல்களால் இன்னும் உடல்நிலை மோசமாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

பாட்டில் ஜூஸ்

பாட்டில் ஜூஸ்

பாட்டில் அல்லது டப்பாவில் அடைத்து விற்கப்படும் எந்த ஒரு பானமும் சுத்தமானதும் அல்ல ஆரோக்கியமானதும் அல்ல. ஆகவே உங்களுக்கு ஜூஸ் குடிக்க வேண்டுமென்று தோன்றினால், வீட்டில் சுத்தமாக பழங்களைக் கழுவி தயாரித்து குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods Not To Eat When Immunity Is Low

When your immunity levels dip a bit due to hectic schedules or stress levels in your life, you must pay more attention to the kind of foods you eat as you could fall ill very easily.
Story first published: Friday, March 11, 2016, 10:46 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter