For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிளாஸ்டிக், பூச்சிக்கொல்லி அதிகமாக பயன்படுத்தப்படும் சீன உணவுகள்!

|

சீனாவில் தயாரிக்கப்படும் எலக்டிரிக் சாதனங்கள் மட்டுமல்ல, உணவுப் பொருட்களும் கூட தரமற்றவை தான் என உலக அரங்கிற்கு வெட்டவெளிச்சமாக தெரியவந்துள்ளது. பல உணவுகள் தரமாக தோற்றமளிக்க வேண்டும், சீக்கிரம் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் பிளாஸ்டிக் கலப்பு செய்து சீனாவில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!

பொதுவாக அனைத்து பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படும் மூலப்பொருள் பி.பி.எ (BPA) எனும் கெமிக்கல். நீங்கள் பயன்படுத்தும் மொபைலில் இருந்து, வீட்டி உபகரண பொருட்களான நாற்காலி, மேசை, சீப்பு போன்ற பிளாஸ்டிக் பொருட்கள் என அனைத்திலும் இதன் கலப்பு இருக்கும்.

இரவு இந்த உணவுகளை பாலில் கலந்து குடித்து வந்தால், விந்து உற்பத்தி அதிகரிக்கும்!!

இந்த மூலப்பொருளை உணவுப் பொருட்களில் கலப்பதால், நமது உடலில் பல தீய ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். மற்றும் செரிமான இயக்கம் சீர்கெடும், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உண்டாகும் அபாயமும் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பிளாஸ்டிக் அரிசி

பிளாஸ்டிக் அரிசி

உலக மக்களை சீனர்கள் அதிர வைத்தது இதில் தான். சீனாவில் முழுக்க, முழுக்க பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் அரிசி விற்பனை செய்யப்படுகிறது. இது முழுக்க விஷத்தன்மை கொண்டது ஆகும்.

 பச்சை பட்டாணி

பச்சை பட்டாணி

இது மற்றுமொரு சீனாவின் போலி தயாரிப்பு. சோயா பீன்ஸ், பச்சை நிற டை மற்றும் சோடியம் (Sodium Metabisulfite) கலந்து பயன்படுத்தி போலி பச்சை பட்டாணி உற்பத்தி செய்து விற்றது சீனா. இந்த வகை பச்சை பட்டாணியால் புற்றுநோய் அபயாம் அதிகம் என பின்னாளில் தெரியவந்தது.

 மண் மிளகு

மண் மிளகு

ஒரு சீன மிளகு விற்பனையாளர், மண்ணை குழைத்து அதை மிளகு போல செய்து விற்று வந்துள்ளார். அதில் வெள்ளை மிளகு என ஃப்ளாவர் எழுதி வைத்து விற்றுள்ளார். சீனாவில் உணவி பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு தரம் குறித்த சரியான சட்டங்கள் இல்லாமல் இருப்பது தான் இது போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

 சீன உப்பு

சீன உப்பு

சீனாவில் தயாரிக்கப்படும் இண்டஸ்ட்ரியல் உப்பு மனநலன் மற்றும் உடல்நலன் என இரண்டையும் வெகுவாக பாதிக்கக்கூடியது ஆகும். சீனா மற்றும் அல்ல. மற்ற உலக நாடுகளில் தயாரிக்கப்படும் இண்டஸ்ட்ரியல் உப்புகளிலும் இந்த தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.

 காளான்

காளான்

சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க சீனாவில் இருந்து தயாரிக்கப்படும் காளான்களில் அதிக பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. மேலும், சீனாவில் தயாரிக்கப்படும் 34% காளான்கள் இயற்கைக்கு மாறாக முற்றிலும் போலியாக தயாரிக்கப்படுகிறது.

 சீன பூண்டு

சீன பூண்டு

சீனாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பூண்டுகளில் அதிக பூச்சிக்கொல்லி சேர்க்கப்படுகிறது. மேலும், இது நீங்கள் உண்ட பிறகு உடலில் கலக்கும் போது தீய தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாக விளங்குகிறது.

 சீன ஆப்பிள் ஜூஸ்

சீன ஆப்பிள் ஜூஸ்

சீனாவில் பெட்டிகளில் அடைத்து விற்கப்படும் ஆப்பிள் ஜூஸ்கள் உலகெங்கிலும் 50% வரை விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் அதிகளவிலான பூச்சிக்கொல்லி சேர்க்கப்படுகிறது. மேலும் இதில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க கூடியது ஆகும்.

 சீன சிக்கன்

சீன சிக்கன்

2013-ம் ஆண்டு அமெரிக்க வேளாண் துறை சீன சிக்கன் விற்க அனுமதி அளித்து. பின்னாட்களில் சீனாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் சிக்கன் உணவுகளில் மற்ற நாடுகளைவிட அதிகப்படியான பூச்சிக்கொல்லி இருப்பதை கண்டறிந்தது. மேலும், இது பெருமளவில் உடல்நல பாதிப்பை உண்டாக்குகிறது எனவும் தெரியவந்தது.

 டிலேபியா மீன்

டிலேபியா மீன்

சீனாவில் பொதுவாக பிடிக்கப்படும் மீன் வகை தான் இந்த டிலேபியா மீன். இந்த மீன் உடல்நலனுக்கு மிக கேடானாது, நச்சுத்தன்மை கொண்டது. டிலேபியா மீன் எதுவாக இருந்தாலும் உண்ணும் குணமுடையது. அசுத்த நீரிலும் உயிர்வாழும் திறன் கொண்டது தான் டிலேபியா மீன்.

 டிலேபியா மீன்

டிலேபியா மீன்

இந்த மீனின் உடலில் அதிகளவில் பூச்சிக்கொல்லி மற்றும் பிளாஸ்டிக் தன்மை இருக்கிறது. உலகெங்கும் விற்பனையாகும் டிலேபியா மீன் 80% சீனாவில் இருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods Made in China That Are Filled With Plastic, Pesticides and Cancer Causing Chemicals

Foods Made in China That Are Filled With Plastic, Pesticides and Cancer Causing Chemicals.
Desktop Bottom Promotion