For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கச்சிதமான உடல் வடிவமைப்பை பெற வேண்டுமா? உங்களுக்கான டயட் ஃபிட்னஸ் குறிப்புகள்- நவராத்திரி ஸ்பெஷல்!

|

அவ்வளவு நாட்கள் தெரியாது. திடீரென ஒரு விசேஷத்தில் புடவை உடுத்தும் போது குண்டாக தெரிவோம். அப்போதுதான் உடல் பருமனானதே உறைக்கும்.

இவ்வளவு குண்டாயிட்டமோ என பலபேர் புடவை கட்டும்போதுதான் புரிந்து கொள்வோம். அதுவும் நவராத்திரி சமயங்களில் சிலருக்கு 9 தினமும் புடவை கட்டியாக வேண்டும் என வீட்டில் மாமியாரோ, அம்மாவோ நிர்பந்திப்பார்கள்.

எனவே புடவையிலும் நீங்கள் ஸ்லிம்மாக காண இந்த உணவுகளை சாப்பிட்டு பாருங்கள். கச்சிதமாதன உடலை வடிவமைப்பை பெறுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவகாடோ :

அவகாடோ :

கொழுப்பை கரைக்க அருமையான தேவு அவகாடோதான். இதில் அதிக நார்சத்தும், குறைந்த கார்போஹைட்ரேட்டும் உள்ளன.

கேரட் :

கேரட் :

கேரட்டில் குறைந்த கலோரி உள்ளது. அதே சமயம் சத்துக்கள் நிறைந்தது. உங்களுக்கு எனர்ஜியையும் தரும். தினமும் ஒரு கேரட் தின்றால் சிறந்த பலனளிக்கும்.

 யோகார்ட் :

யோகார்ட் :

யோகர்ட்டில் அதிக கால்சியம் உள்ளது. இடுபு , வயிறு பகுதியிலுள்ள அதிக கொழுப்பை குறைக்க இதிலுள்ள நல்ல பேக்டீரியாக்கள் உதவுகிறது.

செயற்கை பழ நிறங்களை கலந்த மாம்பழம், ஸ்ட்ரா பெர்ரி ஆகியவற்றை சாப்பிடாதீர்கள். வெறும் யோகார்ட் மட்டும் இருப்பதை வாங்குங்கள்.

 பீன்ஸ் :

பீன்ஸ் :

பீன்ஸில் அதிக நார்சத்து உள்ளது. டயட்டில் இருப்பவர்களுக்கு பலனளிக்கும் அற்புத காய்களில் இதுவும் ஒன்று.உடலில் நீர்சத்தை தங்க வைக்கும். சக்தி தரும்.

 ஓட்ஸ் :

ஓட்ஸ் :

அனைத்து சத்துக்களும் நிறைந்த சிறந்த உணவு ஓட்ஸ். இது தினமும் சாப்பிட்டால் உங்கல் எடை கச்சிதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. விட்டமின், மினரல், அதிகம் உள்ள இந்த ஓட்ஸ் தினமும் எடுத்துப் பாருங்கள்.

இஞ்சி :

இஞ்சி :

இஞ்சியில் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது ஜீரண சக்தியோடு, வலர்சிதை மாற்றத்தையும் அதிகப்பட்த்தும். இதனால் கொழுப்புகள் கரையும். ஆகவே கூடிய மட்டும் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

முழுதானியம் :

முழுதானியம் :

உங்கள் எடையை கச்சிதமாக வைத்துக் கொள்ள உதவும் மற்றொரு உணவுவகை முழு தானியங்கள். கம்பு சோளம், கோதுமை கலந்த சப்பாதியை தினமும் சாப்பிட்டு பாருங்கள். உங்கள் ஃபிட்னஸ் ரகசியத்தை எல்லாரும் கேட்பார்கள்.

 ஆப்பிள் :

ஆப்பிள் :

ஆப்பிளும் உடல் எடையை குறைக்கும் பழம். தினமும் உங்கள் அன்றாட டயட்டில் ஒரு ஆப்பிளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

 நட்ஸ் :

நட்ஸ் :

உங்கள் எடையை கச்சிதமானதாக்க சிறந்த சாய்ஸ் நட்ஸ் சாப்பிடுவதுதான். பாதாம், வால் நட், முந்திரி என பலதரப்பட்ட நட்ஸ்களை சேர்த்து வாரம் மூன்று நாட்களாவது சாப்பிடுங்கள். அற்புத பலன்களை அளிக்கும்.

 ஆலிவ் எண்ணெய் :

ஆலிவ் எண்ணெய் :

உங்களுக்கு எப்படியாவது கொழுப்பை குறைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் சமையலில் ஆலிவ் எண்ணெயை அதிகம் உபயோகியுங்கள். உங்களை கச்சிதமாக வைக்க உதவும் உணவுகளில் இந்த எண்ணெயும் உண்டு.

 புரொக்கோலி :

புரொக்கோலி :

புரோக்கோலியில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது கொழுப்புகளையும் நச்சுக்களையும் வெளியேற்றிவிடும்.

கலோரி மற்றும் கொழுப்பை குறைக்க உதவுகிறது.

குறைந்த கொழுப்புள்ள இறைச்சி :

குறைந்த கொழுப்புள்ள இறைச்சி :

உடலுக்கு அதிகமான புரோட்டின் இறைச்சியில் உள்ளது. எனவே குறைந்த கொழுப்புடைய இறைச்சியை எடுத்துக் கொள்ளுங்க

பருப்பு பயிறு வகைகள் :

பருப்பு பயிறு வகைகள் :

பொதுவாக எல்லா வகை பருப்பு பயிறுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் புரதம் மற்றும் நார்சத்துக்களை பெற முடியும். உடல் எடை கூடாது. குறிப்பாக கொள்ளு, பாசிப்பயிறு ஆகியவை எடுத்துக் கொள்ளுங்கள். அருமையான பலன்களை தருபவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Food to maintain perfect shape for women during dussehra

Important foods to be eaten to get perfect shape for women during dussehra
Desktop Bottom Promotion