For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை குறைக்க காலையில் நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் !!

|

உங்கள் எடையை நீங்கள் கட்டுக் கோப்பாக வைக்க என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் தேவை. அதே கவனம் எப்போது எந்த நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் என்பதிலும் தேவை.

காரணம் ஒரு சிலர் உடல் எடையை குறைக்க காலையில் எதுவும் சாப்பிடாமல் மதியம் நன்றாக மூக்கு முட்ட சாப்பிடுவார்கள். அது மிகவும் தவறு. நாள் முழுவதும் வேலை செய்ய தேவையான சக்தியை, சத்தை காலை உணவிலிருந்தே உடல் பெறுகிறது.

காலையில் சாப்பிடாமல் மத்யானம் நீங்கள் நன்றாக சாப்பிடும்போது தேவைக்கும் சிறிது அதிகமாகவே சாப்பிடத் தோன்றும். இதுவே உடல் பருமனாவதற்கும் காரணமாகும்.

Food to consume for Break fast to reduce body weight

அதேபோல் காலையில் சாப்பிடாமல் இருக்கும்போது கல்லீரல் மற்றும் மற்ற பகுதிகள் சோர்ந்து காணப்படும். காற்று அடைத்துக் கொண்டுவிடும். அது உணவென உள்ளே சுரக்கும் நொதிகள் தவறாக எண்ணி, உணவினை கரைக்க அமிலங்களை சுரக்கும். வெறும் வயிற்றில் அமிலம் சுரந்தால், புண்ணாகி அல்சர் உண்டாகும்.

ஆகவே காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகள் அதிகமாகவும்,. மத்யானம் அளவு மிதமாகவும், இரவில் அதை விட குறைவாகவும் உண்பது அவசியம்.

இவ்வாறு நீங்கள் பின்பற்றினால் உடல் எடையை ஒரு மாதத்திற்குள் குறைத்துவிடுவீர்கள். இப்போது உடல் எடையை குறைக்க காலைகளில் என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என பார்க்கலாம்.

ஓட்ஸ் :

கலோரி குறைவான உணவு. அதிக நார்சத்து நிறைந்தது. எனர்ஜியை தரும். வயிறு நிறையும். கொழுப்புகளை குறைக்கும். கொழுப்பில்லாத பாலில் அல்லது குறைவான பாலில் ஓட்ஸ் கஞ்சி வைத்து சாப்பிடலாம்.

முட்டை :

முட்டையில் அதிக விட்டமின்கள், இரும்பு சத்து மற்றும் புரோட்டின் உள்ளது. இவற்றில் நல்ல கொலஸ்ட்ரால் மட்டும்தான் உள்ளது. ஆகவே வயிறு மற்றும் கல்லீரலில் படியும் கொழுப்பை குறைக்கிறது. எனவே தினமும் காலையில் ஒரு முட்டையை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

யோகார்ட் :

யோகார்டில் அதிக புரோட்டின் உள்ளது. இதிலுள்ல மினரல்கள் உங்கள் நரம்புகளை பலப்படுத்துகின்றன. கொழுப்பை குறைக்க உதவும். குறைந்த அளவே கொழுப்பை கொண்டது. அதனை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆப்பிள் :

ஆப்பிளில் நிறைய விட்டமின்களும், நார்சத்தும் அமைந்துள்ளன. அதனை காலையில் சாப்பிட்டால் வயிறு நிறையும். அதிகமாக சாப்பிடத் தோன்றாது.

பாதாம் :

பாதாமில் நார்சத்து நிறைந்தவை. இரும்புசத்தும் உள்ளது. இதயத்திற்கு நல்லது. ஆன்டி ஆக்ஸிடென்டும் பெற்றுள்ளது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த பாதாம் மூன்றை சாப்பிடுங்கள். கொழுப்பை குறைக்கும்.

வாழைப்பழம் :

காலையில் வாழைப்பழம் சாப்பிடுவதால், குடல் சுத்த்மாகும். கிருமிகள் பூச்சிகள் வெளியேறும். அதிக நார்சத்து கொண்டது. வயிறு நிறைக்கும். கொழுப்பை குறைக்கும்.

பசலைக் கீரை :

காலையில் பசலைக் கீரையில் சப்பாத்தி அல்லது க்ரேவி செய்து சாப்பிடுவது நல்லது. இது கொழுப்புகளை கரைக்கிறது. அதிக கால்சியம் கொண்டது. பலம் தரும். வயிறு உப்புசத்தை தடுக்கும்.

English summary

Food to consume for Break fast to reduce body weight

Foods to be consumed to reduce Body weight
Story first published: Wednesday, August 17, 2016, 17:26 [IST]
Desktop Bottom Promotion