ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 உணவு கலவைகள்!

Posted By:
Subscribe to Boldsky

இயற்கையாக மண்ணில் விளையும் எல்லா உணவுகளுமே நல்லவை தான். ஆனால், இருவேறு நல்ல உணவுகள் கூட ஒன்றாக சேரும் போது உடலுக்கு விஷமாகிவிடும். பாலில், சாம்பார், ரசம் போன்ற உணவு ஒரு துளி கலந்தால் கூட கெட்டுப்போகிறது அல்லவா அது போல தான்.

கொழுப்பை கரைத்து, பசியை குறைக்க உதவும் உணவுகள்!!

சில உணவுகள் எளிதாக செரிமானமாகக் கூடியவை. சில உணவுகள் செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். இவற்றை ஒன்றாக ஒரே நேரத்தில் உண்பது செரிமான கோளாறை உண்டாக்கும். அதே போல உணவில் குளிர்ச்சியான, சூடான இருவேறு வகைகள் இருக்கின்றன. இவற்றை ஒன்றாக உட்கொள்ளுதல் உடல்நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்து கூடியதாக அமையும்.

உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மீன்கள்!!

எனவே, எந்தெந்த உணவருந்தும் போது, எந்தெந்த உணவை சேர்த்துக் கொள்ள கூடாது என இனிக் காண்போம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால் உணவுகள் + பழங்கள்

பால் உணவுகள் + பழங்கள்

பழங்கள் விரைவாக செரிமானம் ஆகிவிடும் ஆனால், பால் உணவுகள் செரிமானம் நேரம் எடுத்துக் கொள்ளும். இது ஒட்டுமொத செரிமான செயற்பாடுகளை நிதானமாக்கிவிடும். மேலும் இதனால் அசிடிட்டி பிரச்சனையும் உண்டாகலாம்.

பால் உணவுகள் + முள்ளங்கி

பால் உணவுகள் + முள்ளங்கி

முள்ளங்கி சூடான உணவு, பால் உணவுகள் குளிர்ச்சியானவை. இவற்றை ஒன்றாக உண்பது நிச்சயம் செரிமான கோளாறை ஏற்படுத்தும்.

மீன் + பால்

மீன் + பால்

மீன் மட்டுமின்றி எந்த ஒரு இறைச்சி உணவு உண்ணும் போதும் பால் அருந்துவது உடலுக்கு தீங்கானது. இந்த கலவை உடலில் நச்சுக்களை உண்டாகும். இதனால் உணவு ஒவ்வாமை (Food Poisoning) ஏற்படலாம்.

உப்பு+பால்

உப்பு+பால்

உப்பு பால் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணான உணவுப் பொருட்கள், இதை சேர்த்துக் கொள்ள வேண்டாம் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நெய் + தேன்

நெய் + தேன்

நெய் உடலுக்குள் குளிர்ச்சியையும், தேன் சூட்டையும் அதிகரிக்கும் உணவுப் பொருள். எனவே, இவை இரண்டை ஒன்றாக உட்கொள்ள வேண்டாம்.

பழங்கள் + மாவு உணவுகள்

பழங்கள் + மாவு உணவுகள்

பழங்கள் உண்ணும் போது உருளைக்கிழங்கு, சீஸ், வறுத்த உணவுகள் மற்றும் மாவு உணவுகளுடன் உட்கொள்ள வேண்டாம். முன்பு கூறியதை போல பழங்கள் உடனே செரிமானம் ஆகிவிடும், மற்றவை செரிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால், செரிமான கோளாறு தான் உண்டாகும்.

மெலன் உணவுகள் + தானியங்கள்

மெலன் உணவுகள் + தானியங்கள்

செரிமானத்தை கடினமாகும் மற்றொரு கலவை உணவுகள் இவை. மெலன் பழங்கள் உண்ணும் போது தானிய உணவுகளை உட்கொள்ள வேண்டாம்.

குளிர்பானங்கள்

குளிர்பானங்கள்

உணவு உண்ட உடனே குளிச்சியான பானங்கள், பனிக்கூழ் போன்றவற்றை உட்கொள்ள வேண்டாம். இது செரிமான கோளாறு உண்டாக்கும்.

இனிப்பு உணவுகள்

இனிப்பு உணவுகள்

மாலை ஆறு மணிக்கு மேல் இனிப்பு உணவுகளை உட்கொள்ள வேண்டாம். இது உடலில் அதிகப்படியான சளி உண்டாக காரணியாக இருக்கிறது.

தேன்

தேன்

தேனை எப்போதும் சமைத்து சாப்பிடக் கூடாது. சமைக்கும் போது தேனில் உண்டாகும் ரசாயன மாற்றம் அதனை விஷமாக மாற்றிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Food Combinations That Men Should Always Avoid

Food Combinations That Men Should Always Avoid, read here in tamil.
Story first published: Friday, March 11, 2016, 10:44 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter