For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாய்வு தொல்லையால் நம்மை அவஸ்தைப்பட வைக்கும் உணவுகள்!

|

உடலில் இருந்து வாய்வு வெளியேற்றம் என்பது எவராலும் தவிர்க்க முடியாத ஒன்று. உடலில் வாயுவானது உணவுகள் செரிமானமாகும் போது மற்றும் உணவு உட்கொள்ளும் போது சேர்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருவரது உடலில் வாயு அதிகரிக்கும் போது, அதன் விளைவாக ஏப்பம், வாய்வு தொல்லை அல்லது வயிற்று உப்புசம் போன்றவற்ற சந்திக்க நேரிடும்.

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 14 முறை வாயுவை வெளியேற்றுவான். ஆனால் வாய்வு தொல்லை இருக்கும் போது, எந்நேரமும் வெளியேற்றியவாறே இருக்கக்கூடும். இதனால் தர்ம சங்கடத்தையும், அசௌகரியத்தையும் உணரக்கூடும்.

வாய்வு தொல்லையால் கஷ்டப்படும் போது உண்ணும் உணவுகளில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வந்தால், அதிலிருந்து விடுபடலாம். இங்கு வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீன்ஸ் வகைகள்

பீன்ஸ் வகைகள்

பீன்ஸ் வகைகளில் காம்ப்ளக்ஸ் சர்க்கரை உள்ளது. உடலால் இந்த காம்ப்ளக்ஸ் சர்க்கரையை செரிப்பதில் சிரமம் ஏற்படும். எனவே பீன்ஸ் வகைகளை சமைக்கும் போது, ஊற வைத்து பின் சமைத்து சாப்பிடுங்கள்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்கள், பால் பொருட்களை உட்கொண்டால், அதனால் கடுமையான வாய்வு பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும். எனவே வாய்வு தொல்லை இருக்கும் போது, பால் பொருட்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

முழு தானியங்கள்

முழு தானியங்கள்

முழு தானியங்களான கோதுமை, ஓட்ஸ் போன்றவற்றில் ஸ்டார்ச், நார்ச்சத்து மற்றும் ரஃபினோஸ் என்ற காம்ப்ளக்ஸ் சர்க்கரை உள்ளது. எனவே இவற்றை அதிகமாக உட்கொள்ளும் போது, வாய்வு பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.

காய்கறிகள்

காய்கறிகள்

அஸ்பாரகஸ், காலிஃப்ளவர், முட்டைகோஸ் மற்றும் ப்ராக்கோலி போன்ற காய்கறிகள் அதிகப்படியான வாயுவை உருவாக்கும். ஆகவே வாய்வு பிரச்சனையால் கஷ்டப்படும் போது இந்த காய்கறிகளை அதிகம் உட்கொள்ளாதீர்கள்.

சோடா பானங்கள்

சோடா பானங்கள்

பலர் சோடா குடித்தால் வாய்வு பிரச்சனை நீங்கும் என்று சொல்வார்கள். ஆனால் அது முற்றிலும் பொய். உண்மையில் சோடா பானங்களை அதிகம் பருகினால், வாய்வு தொல்லையை அதிகம் சந்திக்கக்கூடும். எனவே சோடா குடிக்கும் பழக்கம் இருந்தால் உடனே அதை கைவிடுங்கள்.

பழங்கள்

பழங்கள்

பழங்களில் பீச், முந்திரிப்பழம், ஆப்பிள் போன்றவற்றில் சோர்பிடால் மற்றும் இயற்கை சர்க்கரை உள்ளது. உடலால் இந்த பழங்களை செரிக்க சிரமமாக இருக்கும். மேலும் பெரும்பாலான பழங்களில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது பெருங்குடலில் உள்ள பாக்டீரியாக்களால் செரிமானமாகும் போது, ஹைட்ரஜன், மீத்தேன் வாயு மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு போன்றவற்றை உற்பத்தி செய்யும். இதனால் வாய்வு தொல்லைக்கு உள்ளாகக்கூடும்.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயத்தில் ஃபுருக்டோஸ் என்னும் இயற்கை சர்க்கரை உள்ளது. இந்த சர்க்கரையை பாக்டீரியாக்கள் உடைக்கும் போது, உடலில் வாயுக்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். எனவே வாய்வு தொல்லை இருந்தால் வெங்காயத்தை அதிகம் சாப்பிடாதீர்கள்

சூயிங் கம்

சூயிங் கம்

சூயிங் கம்மை மெல்லும் போது அதிகப்படியான காற்றை உள்ளிழுக்க நேரிடும். இப்படி அதிகப்படியான காற்றை உள்ளிழுக்கும் போது, அது வாய்வு தொல்லையை உண்டாக்கும். மேலும் இந்த சூயிங் கம்மில் சேர்க்கப்படும் சுவையூட்டிகள் செரிமானமாக நீண்ட நேரம் ஆவதோடு, உடல் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும். ஆகவே அடிக்கடி சூயிங் கம் சாப்பிடும் பழக்கத்தை கைடுவிங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eight Foods That Cause Gas You Might Not Know

Here we have listed 8 foods that cause gas. Avoid these gassy foods and enjoy a life which is gas free.
Story first published: Thursday, June 30, 2016, 13:54 [IST]
Desktop Bottom Promotion