வாழைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

By: Hemi Krish
Subscribe to Boldsky

வாழைப்பழம் எவ்வளவு நல்லது என அனேகமாய் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். எல்லா சத்துக்களும் கொண்டுள்ள பழம். பொட்டாசியம் நமக்கு மிகவும் தேவை. எப்படியென்றால் அவை சோடியம் அளவை கட்டுபடுத்துகின்றன.

பொட்டாசியம் அளவை அதிகப்படுத்தினால் சோடியம் அளவு குறைந்துவிடும். இதனால் ரத்த அழுத்தம் வராது. அப்படிப்பட்ட பொட்டாசியம் வாழைப்பழத்தில் அதிகம் உள்ளது.

Eat a raw banana to keep a healthy body

நிறைய நார்சத்துக்கள் கொண்ட பழங்கள்,காய்கள் நம் இதயத்திற்கும்,நரம்புகளுக்கும் நல்லது. அவ்வகையில் வாழைப்பழம் அதிகமான நார்சத்துக்களை கொண்டுள்ளது. நம் உடலின் செல்களுக்கு போஷாக்கு அளிக்கும் பி காம்ப்ளெக்ஸ் வாழைப்பழத்தில் உள்ளது.

இதனால் செல்கள் ஜம்மென்று இருந்து நம்மை நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றும். இப்படிப்பட்ட வாழைப்பழத்தை நாம் தினமும் உண்கிறோம். ஆனால் பழுக்காத வாழைப்பழம் அல்லது வாழைக்காய் நம் உடலுக்கு தரும் நன்மைகள் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? வாருங்கள் பார்க்கலாம்.

வாழைக்காயில் ஸ்டார்ச் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது. இந்த ஸ்டார்ச் கரையாத நார்ச்சத்தாக செயல் பட்டு, நேரடியாக ஜீரண மண்டலத்தை சென்றடைகிறது.

அங்கே உள்ள நச்சுக்களை வெளியேற்றி அதன் தொடர்பாக வரும் நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது. வாழைக்காயை உடலுக்கு சேர்த்தால் நூறு வயது வரை நோயின்றி வாழலாம். வாழைக்காய் மற்றும் பழுக்காத வாழைப்பழம் எந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்கிறது என பார்க்கலாம்.

உடல் எடை குறைக்க :

வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதினால், உடல் எடை குறையும். பருமனாய் இருப்பவர்கள் குஷிப்படுங்கள். ஏனெனில் இது குடலை சுத்தப்படுத்தி, அதிலுள்ள கொழுப்பு செல்களை அழிக்கிறது. உடல் எறையைக் குறைக்கிறது.

மலச்சிக்கலிலிருந்து விடுபட :

வாழைக்காய் அதிக நார்சத்து மற்றும் ஸ்டார்ச் கொண்டுள்ளதால், குடல்களை சுத்தப்படுத்தி,அதன் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது.மேலும் மலத்தை இலகுவாக்கி,எளிதில் வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல் குறையும்.

Eat a raw banana to keep a healthy body

அதிகமான பசியைக் கட்டுப்படுத்தும்:

வயிறு பருமனாக முக்கிய காரணம் அளவின்றி சாப்பிடுவது ஆகும். சிலருக்கு தாங்களே நினைத்தாலும் சாப்பிடும் அளவினைக் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் பழுக்காத வாழைப்பழத்தினை உட்கொண்டால் சாப்பிட்ட நிறைவைத் தரும். அதனால் அதிகப்படியாக உணவினை உண்ணத் தோன்றாது. உடல் பருமனாவதைக் குறைக்கலாம்.

சர்க்கரை வியாதி வராமல் இருக்க :

பச்சை வாழப்பழம்அல்லது பழுக்காத பழம் அல்லது வாழைக்காய் ஆகிய மூன்றுமே ரத்த செல்களில் குளுகோஸ் உறிவதை தடுக்கிறது. இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.

Eat a raw banana to keep a healthy body

ஆரோக்கியமான ஜீரண உறுப்புக்களை தரும்:

வாழைக்காய் ஜீரண உறுப்புகளுக்கு மற்றும், உணவுக்குழாய்களுக்கு போஷாக்கு அளிக்கிறது. குடலில் இருக்கும் ப்ரோபயாடிக் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. இதனால் அசிடிடி வராமல் ,குடல்களையும்,வயிற்றையும் பாதுகாக்கும்.

பெருங்குடலில் வரும் புற்று நோய் வராமல் விரட்டிவிடும் வாழைக்காய்:

வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும்,நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. மேலும் பெருங்குடல் புற்று நோய் வராமல் கவசமாய் செயல்படுகிறது.

Eat a raw banana to keep a healthy body

எலும்புகளுக்கு பலம் தருகிறது :

வழைக்காய் விட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவைகள் எலும்பிற்கு போதிய பலம் தந்து, மூட்டு வலி, ஆஸ்டியோ போரோஸிஸ் ஆகிய நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது.

Eat a raw banana to keep a healthy body

உணர்வுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது :

வாழைக்காய் ட்ரிப்டோஃபான் என்ற அமினோ அமிலத்தைக் கொண்டுள்ளது. இந்த அமிலம் மூளையில் நடக்கும் ரசாயனங்களை ஒழுங்குபடுத்தும். அவ்வகையில் வாழைக்காய் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உணர்ச்சிகரமான மன நிலை உண்டாவைத் தடுத்து மன அமைதியைப் பெறலாம்.

English summary

Eat a raw banana to keep a healthy body

Raw banana prevents colon cancer, read and get to know
Subscribe Newsletter