உடலின் ஆற்றல் அதிகரிக்கும் என்று நினைத்து சாப்பிடும் சில தவறான உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் சரியான உணவுகளை உட்கொண்டு, உடற்பயிற்சியை செய்து, உடல் ஆரோக்கியத்தை அவ்வப்போது பரிசோதித்து வந்தும், மிகுந்த சோர்வை உணர்கிறீர்களா? ஏன் என்று தெரியவில்லையா? எப்போது ஒருவர் ஜங்க் உணவுகளை உட்கொள்ளாமல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தும், மிகுந்த களைப்பை உணர்ந்தால், உடனே கவனிக்க வேண்டும்.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகா நிலைகள்!

ஏனெனில் நீங்கள் ஆரோக்கியமான உணவு என்று நினைத்து உட்கொண்டு வரும் சில உணவுகள், உங்கள் உடலின் ஆற்றலை அழித்து வருகிறது. உடலில் போதிய ஆற்றல் இல்லாமல் இருந்தால், எந்த ஒரு செயலையும் செய்ய முடியாமல், தங்கள் மீதே தங்களுக்கு வெறுப்பு ஏற்படும்.

உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை எது பலவீனப்படுத்துகிறது என்று தெரியுமா?

இங்கு உடலின் ஆற்றலை அதிகரிக்கும் என்று நினைத்து தவறாக சாப்பிடும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து உஷாராகிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவு #1

உணவு #1

காலை உணவு செரில்

பலரும் செரில் மிகவும் ஆரோக்கியமான காலை உணவு என்று நினைத்து உட்கொள்கின்றனர். ஆனால் ஆராய்ச்சிகளோ, செரில்களில் சேர்க்கப்படும் செயற்கை சுவையூட்டிகள் உண்மையில் உடலின் மெட்டபாலிசத்தைக் குறைத்து, நாள் முழுவதும் சோர்வை உணர வைப்பதாக கூறுகின்றன.

உணவு #2

உணவு #2

வெள்ளை பிரட்

வெள்ளை பிரட்டில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. இது செரிமானமாவதற்கு உடலில் இருந்து அதிகப்படியான ஆற்றலை எடுத்துக் கொண்டு, வேகமாக களைப்பை உணர வைக்கும்.

உணவு #3

உணவு #3

காபி

பலரும் காபி குடித்தால், உடலின் ஆற்றல் அதிகரிப்பதாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் காபியைக் குடிப்பதால், ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சுறுசுறுப்பை உணர்ந்து, பல வேளைகளில் ஈடுபட வைத்து, உடலில் இருக்கும் ஆற்றலை வேகமாக குறைக்கும். எனவே காபியை அதிகம் குடிக்காதீர்கள்.

உணவு #4

உணவு #4

கலோரி குறைவான டயட்

ஏராளமான மக்கள் டயட் என்ற பெயரில், சாதத்தை குறைவாக உட்கொண்டு, கலோரி குறைவான காய்கறிகள் அல்லது பழங்களை அதிகமாக சாப்பிட்டு வருவார்கள். ஆனால் இப்படி கலோரிகளே கிடைக்காதவாறான டயட்டை மேற்கொண்டால், உடலில் ஆற்றல் குறைவாகத் தான் இருக்கும் என்பதை மறவாதீர்கள்.

உணவு #5

உணவு #5

டப்பாவில் அடைத்து விற்கப்படும் தயிர்

பாட்டில்/டப்பாவில் அடைத்து விற்கப்படும் தயிரில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நொதிகள் குறைவாக இருக்கும். எனவே இம்மாதிரியான தயிரை வாங்கி உட்கொண்டால், அதனால் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, எப்போதும் உடலில் ஆற்றல் குறைவாகவே இருக்கும்.

உணவு #6

உணவு #6

ஸ்மூத்திகள்

பழங்களால் செய்யப்படும் ஸ்மூத்திகள் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், அதில் சர்க்கரை மற்றும் ஃபுரூக்டோஸ் அதிகமாக இருப்பதால், அது உடலின் ஆற்றலை பாதிக்கும்.

உணவு #7

உணவு #7

ஆற்றல் பானங்கள்

இன்னும் நிறைய பேர் உடல் சோர்வைப் போக்க ஆற்றல் பானங்களைப் பருகி வருகின்றனர். ஆனால் இந்த ஆற்றல் பானங்களால் இரத்த சர்க்கரை அளவு ஒரே நேரத்தில் அதிகரித்து, பின் மெதுவாக குறையும். இந்நிலை இப்படியே நீடித்தால், ஒரு கட்டத்தில் அதனால் மிகுந்த விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Common Energy-Killing Foods You Should Completely Avoid!

Have a look at some of the common foods that can reduce our energy levels, even when consumed once in a while..
Please Wait while comments are loading...
Subscribe Newsletter