யாரெல்லாம் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

அன்றாட உணவில் தினமும் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு தான் இஞ்சி. ஏனெனில், இது செரிமானத்தை சீராக்க சீரிய முறையில் உதவுகிறது. மேலும் இது வயிறு சார்ந்த கோளாறுகள், உடல் எடை குறைக்க, வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்க என பல வகைகளில் நமக்கு நன்மை அளிக்கிறது.

தொடர்ந்து 40 நாட்கள் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால் நிகழும் மாற்றம் என்ன தெரியுமா!

ஆனால், சில உடல்நல பிரச்சனைகள் கொண்டுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் போன்றவர்கள் இஞ்சியை தவிர்க்க வேண்டியது அவசியம் என்று கூறப்படுகிறது. அது ஏன்? அதற்கான காரணம் என்ன? அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்பதை பற்றி இனிக் காண்போம்...

இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்கள்

இஞ்சியில் சக்திவாய்ந்த இயற்கை வினையூக்கிகள் இருக்கின்றன. இவை கர்ப்ப காலத்தின் போது வலியை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இது கருச்சிதைவு ஏற்படுத்த கூட வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் கூறுகிறார்கள். எனவே, கர்ப்பிணி பெண்கள் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது என கூறப்படுகிறது.

உடல் எடை குறைவாக உள்ளவர்கள்

உடல் எடை குறைவாக உள்ளவர்கள்

இஞ்சி உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு ஓர் சிறந்த உணவு. ஏனெனில் இது பசியை குறைக்க செய்யும் தன்மை உடையது. மேலும் கொழுப்பை கரைக்கும் தன்மையையும் இது கொண்டுள்ளது. எனவே, உடல் எடை குறைவாக உள்ளவர்கள் இஞ்சியை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

இரத்த கோளாறு

இரத்த கோளாறு

இரத்த கோளாறு உள்ளவர்களும் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என அறிவுரைக்க படுகிறார்கள். இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவல்லது. இரத்தக் கோளாறுகளுக்கு மருந்துகள் உட்கொள்ளும் நபர்கள் இஞ்சியை தவிர்க்க வேண்டும். இல்லையேல் இது மருந்துகள் முழுமையாக செயல்படாமல் போய்விடும்.

மருந்துகள் உட்கொள்ளும் நபர்கள்

மருந்துகள் உட்கொள்ளும் நபர்கள்

இரத்த அழுத்தம், நீரிழிவு, போன்ற உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள் இஞ்சியை தவிர்த்து விடுவது நல்லது. இது உடலில் அந்த மருந்துகளின் தாக்கம் சரியான அளவில் செயல்படாமல் போக செய்கிறது. குறிப்பாக நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் எடுக்கும் மருந்துகளின் வீரியத்தை இது குறைத்துவிடுகிறது.

இஞ்சி

இஞ்சி

இஞ்சி நிறைய சத்துக்கள் கொண்டுள்ள ஓர் நல்ல உணவுப் பொருள். தினமும் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது தான். ஆயினும், நாம் மேற்கூறிய இந்திய நான்கு வகை சார்ந்தவர்கள் இஞ்சியை தவிர்க்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

People Who Should Not Eat Ginger

Four Types Of People That Should Never Use Ginger – It Can Seriously Harm Their Health Read here in tamil.