Latest Updates
-
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும
இரவு கறந்த பசும் பால் நல்ல உறக்கத்தை தருகிறது: தென்கொரியா ஆய்வில் கண்டுபிடிப்பு!
ஆதிக் காலம் முதல் நாம் பசும்பாலும், ஆட்டுப் பாலும் குடித்து வந்துள்ளோம். பசும்பாலிலும், ஆட்டுப் பாலிலும் வெவ்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். இதில் பெரும்பாலும் பசும்பால் தான் உபயோகப்படுத்தி வந்தனர் நமது முன்னோர்கள்.
பாலில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
பசும்பால் பருகுவதால், உடல் சக்தி அதிகரிப்பது மட்டுமின்றி, எலும்புகளும் வலிமை பெறுகின்றன. மேலும், இரவு நேரங்களில் பால் குடிப்பது நல்ல உறக்கத்தை தரும் என கூறுவார்கள். ஆனால், சமீபத்திய ஆய்வொன்றில் இரவு கறந்த பசும்பால் ஆழ்ந்த உறக்கத்தை தரவல்லது என்று கண்டறிந்துள்ளனர்...

நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனம்
தென்கொரியாவின் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனமான உய்மியுங் (Uimyung) ஆய்வாளர்கள் தான் இரவில் கறக்கும் பசு மாட்டின் பால் உறக்கத்தை ஊக்குவிக்கிறது என்று சமீபத்திய ஆய்வின் மூலமாக கண்டறிந்துள்ளனர்.

டிரிப்டோபென் மற்றும் மெலடோனின்
ஆய்வின் போது உய்மியுங் ஆய்வாளர்கள் இரவு நேரத்தில் கறந்த பசும்பாலில் நிறைய டிரிப்டோபென் மற்றும் மெலடோனின் இருப்பதை கண்டறிந்தனர்.

மெலடோனின்
மெலடோனின் இயற்கையாகவே உறக்க சுழற்சியை சீராக்கும் தன்மையைக் கொண்டதாகும். இது தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோனை ஊக்குவிக்கிறது. இதனால், உங்களது உறக்க சுழற்சி முறை மேம்பட்டு, நல்ல உறக்கம் கிடைக்கிறது.

டிரிப்டோபென்
டிரிப்டோபென், செரோடோனின் மற்றும் மெலடோனின் மாற்றமைடைந்து இந்த பலனை தருகிறது என்றும் உய்மியுங் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வின் மூலம் கண்டறிந்து கூறியுள்ளனர்.

ஆய்வுக் குழுவினர்
பால் நீண்ட காலமாகவே உறக்கத்தை ஊக்குவிக்கும் உணவாக கருதப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு இரவில் தாய்பால் தருவதால் அவர்கள் நிம்மதியான உறக்கத்தை பெறுகின்றனர். இதில், இரவு கறந்த பசும்பாலை பருகுவதால் உறக்கம் மேம்படுகிறது. எளிதாக ஆழ்ந்த உறக்கத்தை பெற முடிகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

எலியை வைத்து ஆய்வு
உய்மியுங் ஆய்வாளர்கள், தங்களின் ஆய்வின் போது எலியின் மீது பரிசோதனை செய்துள்ளனர். இதில் பகலில் கறந்த பாலைவிட, இரவு கறந்த பால் அதிகமான மற்றும் ஆழ்ந்த உறக்கத்தை தருகிறது என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இரட்டிப்பு மடங்கு உறக்கம்
பகலில் கறந்த பாலை பருகுவதை விட, இரட்டிப்பு மடங்கு உறக்கத்தை தரவல்லது இரவு கறந்த பால் என்று ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்ததாக கூறியுள்ளனர்.

உறக்கம் சார்ந்த பிரச்சனைகள் குறையும்
மேலும் இந்த ஆய்வின் ஆசிரியர், "இரவுக் கறந்த பால், தூக்கமின்மை மற்றும் உறக்கம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications
