Latest Updates
-
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா? -
வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த செடிகள் போதுமா? பணவரவை அள்ளித்தரும் வாஸ்து ரகசியம் இதோ! -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
மசாலா கோதுமை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவருமாம்
உங்கள் உடலில் நச்சுக்களின் அளவை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள்!!!
உயிர் வாழ்வதற்காக சாப்பிடும் உணவுப் பொருட்கள் அனைத்துமே உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்திவிடாது. அதிலும் தற்போதைய உணவுப் பொருட்கள் பலவும் நச்சுக்கள் மிக்கதாக உள்ளது. அதுவும் இன்ஸ்டன்ட் உணவுகள் என்று விற்கப்படும் உணவுகளைத் தான் தற்போது பலரும் வாங்கி சாப்பிடுகிறார்கள்.
உலகில் உள்ள மிகவும் ஆபத்தான உணவுப் பொருட்கள்!!!
அதுமட்டுமின்றி, வெளியே செல்லும் போது தாகத்திற்காக பருகும் சோடா பானங்கள் கூட நம் உடலில் நச்சுக்களை அதிகம் சேர்க்கும். இதுப்போன்று நிறைய உணவுகளை நாம் உட்கொண்டு, நம் உடலில் நச்சுக்களின் அளவை அதிகரிக்கிறோம். சரி, இப்போது உடலில் நச்சுக்களின் அளவை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து அவற்றைத் தவிர்த்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆரோக்கியமா இருக்க இந்த உணவுகளை பச்சையா சாப்பிடுங்க...

பாஸ்தா மிக்ஸ்
தற்போது மக்களிடையே பாஸ்தா மிகவும் பிரபலமானதாக உள்ளது. குறிப்பாக குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவதால் பல பெற்றோர்களும் இதை அடிக்கடி செய்து கொடுக்கின்றனர். ஆனால் அப்படி பாஸ்தா மிக்ஸில் அசோடிக்கார்போனமைடு என்னும் கெமிக்கல் உள்ளது. இது மிகவும் விஷத்தன்மை வாய்ந்த நச்சு. இதனை உட்கொண்டால், உடலில் உள்ள செல்கள் வலிமையிழந்து, எளிதில் நோய்வாய்ப்படக்கூடும். எனவே இதனை உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

எனர்ஜி ட்ரிங்க்ஸ்
தற்போது உடலின் ஆற்றலை உடனே அதிகரிக்கும்படியான பானங்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. இந்த பானங்களில் வண்ணச்சாயங்கள் கலக்கப்பட்டுள்ளது. இவற்றைக் குடித்தால், உடலில் அழுக்குகள் தான் அதிகம் சேரும். எனவே உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு இவற்றைக் குடிப்பதற்கு பதிலாக எலுமிச்சை ஜூஸ் அல்லது இளநீரைக் குடியுங்கள்.

சிப்ஸ்
கடைகளில் விற்கப்படும் பலசுவைகள் கலக்கப்பட்ட சிப்ஸ்களில் ஒலிஸ்ட்ரா என்னும் பொருள் கலக்ப்பட்டுள்ளது. இது சற்று ஆபத்தானது மட்டுமின்றி, உடல் பருமனை அதிகரிக்கவும் செய்யும். எனவே இதனைத் தவிர்ப்பதும் உடல் நலத்திற்கு நல்லது.

கலப்படம் கலந்த தயிர்
கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான தயிர்கள் செயற்கையாக தயாரிக்கப்பட்டது. இந்த செயற்கை தயிரை அதிக அளவில் உட்கொண்டு வந்தால், மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படக்கூடும். எனவே வீட்டிலேயே தயிர் செய்து உட்கொண்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

பதப்படுத்தப்பட்ட சிக்கன்
கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட சிக்கனில் ஆர்சனிக் என்னும் கலவை கலக்கப்பட்டுள்ளது. அதனால் தான் அது கெட்டுப் போகாமல், அப்படியே பிரஷ்ஷாக உள்ளது. இந்த சிக்கனை உட்கொண்டால், உடலில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்து, உடல் ஆரோக்கியத்தைப் பாழாக்கும். ஆகவே இந்த சிக்கனை வாங்கி சமைத்து சாப்பிடுவதற்கு பதிலாக, பிரஷ்ஷான சிக்கனை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.

செரில் ஸ்நாக்ஸ்
நவதானியங்களால் செய்யப்படுவதாக கூறி விற்கப்படும் செரில் ஸ்நாக்ஸ்களில் ட்ரான்ஸ் கொழுப்பு உள்ளது. இது இதயத்திற்கு நல்லதல்ல. இந்த ஸ்நாக்ஸ்களை உட்கொண்டால், உடலின் மூலை முடுக்குகளில் நச்சுக்கள் அதிகம் தேங்கும். இதனால் விரைவில் இதய நோய்க்கு உள்ளாகக்கூடும். எனவே இவற்றை உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

சிட்ரஸ் ஃப்ளேவர் சோடாக்கள்
ஆய்வுகளில் சிட்ரஸ் ஃப்ளேவர் சோடாக்களில் புரோமினேட்டட் வெஜிடேபிள் ஆயில் கூழ்மமாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த எண்ணெய் பொதுவாக மரச்சாமான்களில் நெருப்பு பிடிக்காமல் இருக்க பயன்படுத்தப்படும். இப்படிப்பட்ட எண்ணெய் தான் நம் சிட்ரஸ் ஃப்ளேவர் சோடாக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதனைக் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.



Click it and Unblock the Notifications