பச்சை உணவுகள், வேகவைத்த உணவுகள் எது உடல்நலத்திற்கு நல்லது???

Posted By:
Subscribe to Boldsky

சில உணவுகளை பச்சையாக சாப்பிடலாம், சில உணவுகளை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். என்னதான் இருந்தாலும், ஊட்டசத்து என்ற ஒன்றிருக்கிறது அல்லவா. சில சமயங்களில் பச்சையாக உண்ணும் போது செரிமானப் பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படலாம். உணவுகளை வேக வைத்து சாப்பிடுவதால், செரிமான பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

வேக வைத்து சாப்பிடுவது எனிலும் எவ்வாறு வேக வைக்க வேண்டும்? எந்த முறையில்? என தெரிந்திருக்க வேண்டும். சுடுதண்ணி காலில் கொட்டியது போல ஓடும் இந்த காலத்தில் நாம் அனைத்து உணவுகளையும் அதிக சூட்டில் சீக்கிரம் சமைத்து உண்கிறோம். ஆனால், உண்மையில் குறைவான சூட்டில் வேக வைத்து சாப்பிட்டால் தான் உணவில் இருக்கும் சத்து உடலில் ஒட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பச்சை உணவுகளை ஏன் தவிர்க்க வேண்டும்?

பச்சை உணவுகளை ஏன் தவிர்க்க வேண்டும்?

வேக வைக்காத அல்லது சமைக்காத பச்சை உணவுகள் உடலில் சேதம் ஏற்படுத்தும் வாய்ப்புகள் உண்டு. ஆயுர்வேத முறையில் வேக வைக்காத உணவு, செரிமானம், உடல் வெப்ப நிலை , முடி உதிர்தல், தூக்கமின்மை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது.

எப்போது பச்சை உணவுகளை சாப்பிடலாம்?

எப்போது பச்சை உணவுகளை சாப்பிடலாம்?

வெயில் காலத்தில் பச்சை உணவுகளை சாப்பிடலாம் என கூறப்படுகிறது. காய்கறி, பழங்கள் போன்றவற்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மற்றும் இரவு உணவு, குளிர் காலத்தில் பச்சை உணவுகளை தவிர்த்தல் நல்லது.

பச்சை உணவுகளை எப்படி சாப்பிடலாம்?

பச்சை உணவுகளை எப்படி சாப்பிடலாம்?

காய்கறி மற்றும் பழங்களை ஜூஸாக பருகுவது சிறந்த முறை. இவை ஊட்டச்சத்துக்களை அளிப்பது மட்டுமின்றி, எளிதாக செரிமானம் ஆகிவிடும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் மட்டும் பழங்களை கடித்து உண்பது தான் நல்லது.

நச்சுக்களை போக்க

நச்சுக்களை போக்க

உடலில் உள்ள நச்சுக்களை போக்க, ஆப்பிள், பப்பாளி, பெர்ரி, அன்னாசி, பேரிக்காய், துளசி போன்ற உணவுகளை பச்சையாக அல்லது ஜூஸாக அப்படியே சாப்பிடலாம். மேலும் இன்ஜி, மஞ்சள், கொத்தமல்லி, வெந்தையம், சீரகம் போன்ற உணவுப் பொருட்களை காய்கறி சூப் போன்று சமைத்து உட்கொண்டாலும் உடலிலுள்ள நச்சுக்களை போக்க முடியும்.

ஏன் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்?

ஏன் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்?

ஆயுர்வேத முறையில், காய்கறிகள் இயற்கையாகவே இனிப்பு, வறட்சி மற்றும் கடினமாக இருக்க கூடியவை. இது சிலரது உடலில் செரித்து விடும், சிலரது உடலில் செரிமான பிரச்சனையை உண்டாக்கும். எனவே, இதை தவிர்த்து நன்கு செரிமானம் ஆகவும், ஊட்டச்சத்து உடலில் தங்கவும் காய்கறிகளை வேகவைத்து தான் உண்ண வேண்டும் என கூறப்படுகிறது.

உணவுகளை எப்படி சமைக்க வேண்டும்?

உணவுகளை எப்படி சமைக்க வேண்டும்?

உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை அப்படியே தங்க வைக்க, குறைவான சூட்டில் வேக வைப்பது தான் சிறந்த முறையாகும். இவ்வாறு சமைப்பதால் உணவில் ஊட்டச்சத்து தங்குவது மட்டுமின்றி, செரிமானமும் சீரிய முறையில் இயங்க வழிவகுக்கும்.

மைக்ரோவேவ் வேண்டாம்

மைக்ரோவேவ் வேண்டாம்

மைக்ரோவேவில் மீண்டும் சூடு செய்வதால், அதிலிருந்து வெளிப்படும் சூடு, உணவில் இருக்கும் மூலக்கூறுகளை சிதைத்துவிடுகிறது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயல் என்பதால் மைக்ரோவேவ் ஓவனை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்படுகிறது.

உணவை சமைக்கும் சிறந்த முறை

உணவை சமைக்கும் சிறந்த முறை

மஞ்சள், சீரகம், மிளகு சேர்த்து உணவை சமைப்பது சிறந்த முறை ஆகும். இவை உடலுக்கு வலிமையும், நலனும் அதிகரிக்க வைக்கின்றன. மேலும் மிகுதியாய் வேகாமல் அல்லது கருகிவிடாமல் சமைக்க வேண்டும்.

இந்த உணவுகளை தவிர்த்துவிடவும்

இந்த உணவுகளை தவிர்த்துவிடவும்

ஃப்ர்ட்ஜில் வைத்து பயன்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. இன்று சமைத்த உணவை இன்றே உண்டு கழிப்பது தான் சிறந்த முறை. எனவே, ஃப்ரிட்ஜில் வைத்து நாட்கள் கடத்தி உணவை உண்ணும் பழக்கத்தை கைவிடுங்கள். இது செரிமான பிரச்சனைகள் உண்டாக முக்கிய காரணமாக இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is Eating Raw Food Good Your Health

Is eating raw food good for your health? Raw foods are better than cooked food according to ayurveda Vegetables must be cooked before eating as this helps.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter