Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
உங்களை அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும் உணவுகள்!!!
ஒரு நாளில் பல முறை சிறுநீர் கழிப்பது என்பது சாதாரணம் தான். ஆனால் அடிக்கடி அளவுக்கு அதிகமாக சிறுநீர் கழிக்க நேர்ந்தால், உடனே மருத்துவரை சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். சில நேரங்களில் சரியான தூக்கம் இல்லாவிட்டால் அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்படும்.
இன்னும் சிலருக்கு உண்ணும் உணவு ஓர் காரணமாக இருக்கும். ஆம், சில உணவுகளும் சிறுநீர் கழிக்கத் தூண்டும். சில நேரங்களில் கர்ப்பம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வு உண்டாகும். சில நேரங்களில் சிறுநீரகங்களுக்கு ஆரோக்கியத்தைத் தரும் உணவுகளும் சிறுநீர் கழிக்கத் தூண்டும்.
சரி, இப்போது அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும் உணவுகள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து வெளியே செல்லும் போது அம்மாதியான உணவுகளை உட்கொள்ளாதீர்கள்.

காபி
காபியில் உள்ள காப்ஃபைன் அடிக்க சிறுநீர் கழிக்கத் தூண்டும். ஏனெனில் இது ஆன்டி-டையூரிக் ஹார்மோன் மீது ஆதிக்கம் செலுத்தி, சிறுநீரைக் கழிக்கத் தூண்டும்.

ஆல்கஹால்
காப்ஃபைன் போன்றே ஆல்கஹாலும் ஆன்டி-டையூரிக் ஹார்மோன் மீது தாக்கத்தை ஏற்படுத்தி, அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும். குறிப்பாக பீர், ஒயின் போன்றவை தான் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும்.

ஜூஸ்கள்
சார்பிட்டால் என்னும் பொருளைக் கொண்ட ஜூஸ்கள் டையூரிக் தாக்கத்தை ஏற்படுத்தி, அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அதிலும் சிட்ரஸ் பழங்களால் ஆன ஜூஸ்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும்.

சோடா பானங்கள்
சோடா பானங்கள் அல்லது கார்போனேட்டட் பானங்கள் சிறுநீர்ப்பையில் எரிச்சலை ஏற்படுத்தி, அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும். எனவே எப்போதும் சோடா பானங்களை வெளியிடங்களுக்குச் செல்லும் போது குடிக்காதீர்கள்.

உப்புச்சத்து குறைவு
எப்போது ஒருவரின் உடலில் உப்புச்சத்து குறைய ஆம்பிக்கிறதோ, அப்போது அவர்களுக்கு சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்படும். அதனால் தான் உடற்பயிற்சி செய்யும் போது, வியர்வையின் வழியே உப்பு வெளியேறி, சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

சாக்லேட்
சாக்லேட்டுகளில் உள்ள சில சேர்மங்கள் சிறுநீர்ப்பையில் ஒருசில தூண்டுதலை ஏற்படுத்தும். எனவே தான் சாக்லேட் சாப்பிட்ட பின் சிறுநீர் வருவது போன்ற உணர்வைப் பெற நேரிடுகிறது.

தக்காளி
தக்காளியில் உள்ள அசிட்டிக் அமிலம் சிறுநீர்ப்பையில் ஒருவித எரிச்சலை உண்டாக்கி, சிறுநீர் கழிக்கத் தூண்டும்.



Click it and Unblock the Notifications
