இந்த உணவெல்லாம் சாப்பிடக் கூடாதுன்னு உங்களுக்கு தெரியுமா?

By: John
Subscribe to Boldsky

நீங்கள் உணவென்று நினைத்து சாப்பிடும் பெரும்பாலான உணவுகள், உண்மையான உணவே கிடையாது. பெரும்பாலும் நீங்கள் விரும்பி சாப்பிடும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் அதன் வகைகள் அரிசி மாவில் செயற்கை ருசி சேர்த்து தயாரிக்கப்படுகிறது. மற்றும் உங்கள் உடல்நலனை கருத்தில் கொண்டு கொஞ்சம் இரசாயனமும் சேர்க்கின்றனர்.

ஷாப்பிங் மால்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

இதற்கே ஆச்சரியப்பட்டால் எப்படி, இது தவிர நீங்கள் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் சிலவன சாப்பிடவே கூடாத உணவு பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. அதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்....

நமக்கு தெரியாமலே, நம்மோடு தினமும் உறவாடும் விஷத்தன்மையுள்ள இரசாயனங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டயட் சோடா

டயட் சோடா

கலோரிகளே இல்லாத டயட் சோடா என்று கூறி, கூவி கூவி விற்கும் விற்பனையாளர்கள். அது உங்கள் உடல்நலத்திற்கு தீங்கானது என்பதை கூறுவதே இல்லை. இதில் இருக்கும் செயற்கை இனிப்பூட்டிகளும், காப்ஃபைனும் தான் அதற்கான காரணங்களாக இருக்கின்றன. ஒருவேளை உண்ட மயக்கம் உங்களை அசௌகரியமாக உணர செய்தால், அதற்கு நீங்கள் சாதாரண சோடாவே பருகலாம். தயவு செய்து எந்த ஒரு Flavor சோடாவையும் பருக வேண்டாம். அனைத்தும் இரசாயனம் தான்.

மயோனைஸ்

மயோனைஸ்

நீங்கள் விரும்பி சாப்பிடும் கிரில் சிக்கன் மற்றும் சாண்ட்விச்களுடன் தரப்படும் மயோனைஸ், தமனிகளை (Arteries) பாதிக்கும் உணவாம். எனவே, இதை தவிர்க்க கூறி நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு பதிலாக புதிதாக தயாரித்த கெட்டி தயிரை பயன்படுத்தலாம். அல்லது, வெங்காயம், தக்காளி, பூண்டு போன்றவற்றுடன் கூட கிரில் சிக்கன் சேர்த்து சாப்பிடலாம்.

ஊறுகாய்

ஊறுகாய்

வீட்டில் தயாரிக்கும் ஊறுகாயில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், நீங்கள் கடைகளில் வாங்கும் ஊறுகாய்களில் பதப்படுத்தும் இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன, இதனால் உங்கள் உடலுக்கு தான் தீங்கு ஏற்படும். இதற்கு மாற்று உணவு, நீங்களே உங்கள் வீட்டில் சுயமாக தயாரிக்கும் ஊறுகாய்கள் தான். இல்லையேல், நமது வீட்டருகே யாரேனும் வீட்டிலே செய்த ஊறுகாய்கள் செய்து விற்றால் அதை வாங்கி பயன்படுத்துங்கள்.

 ஃபிளேவர்ட் தயிர்

ஃபிளேவர்ட் தயிர்

தற்போது சந்தையில் நிறைய ஃபிளேவர்ட் தயிர்கள் விற்கப்படுகின்றன.இவை அனைத்துமே உடல்நலத்திற்கு தீங்கானவை. மற்றும் எந்த சத்துமே இல்லாதவை.வெறும் கிரீம், செயற்கை சுவைகள் ஃபிளேவர்கள் சேர்த்து தயாரிக்கப்படுகின்றன. முக்கியமாக இதை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது, அதிக அளவில் உடல்நலத்தை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு நீங்கள் உங்கள் வீட்டில் தயாரிக்கும் தயிரை பயன்படுத்துவது சரியான மாற்று உணவாகும்.

 வெண்ணெய்

வெண்ணெய்

கடைகளில் விற்கப்படும் வெண்ணெய்களில் தயாரிப்பில் சிக்கனம் காட்டி எல்.டி.எல் எனப்படும் இதயத்தை பாதிக்கும் தீய கொழுப்பு சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இதனால் உங்கள் உடலில் உள்ள செல்களும் சீக்கிரம் சக்தி இழந்துவிடும். எனவே, வீட்டில் தயாரிக்கப்படும் இயற்கை உணவுகள் தான் உங்கள் உடல்நலத்திற்கு நல்லது. அதிலும் முக்கியமாக பால் உணவுப் பொருட்களை கடைகளில் வாங்குவதை தவிர்த்து, பழைய முறைப்படி வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது தான் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Foods You Need To Get Rid of ASAP

Do you know about the five foods you need to get rid of as soon as possible? read here.
Story first published: Tuesday, July 7, 2015, 15:38 [IST]
Subscribe Newsletter