For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எஸ்ப்ரஸோ பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!!

By John
|

காபியில் என்ன இருக்கு, கொஞ்சம் சர்க்கரை, பால், காபி தூள்.., இதுல போயி என்னத்த முழுசா தெரிஞ்சுக்க இருக்கு... என்று கூறுபவராக இருந்தால் நீங்கள் எம்.என்.சி-யில் பணிபுரியாதவராக, மாடர்ன் வாழ்க்கை பக்கம் எட்டிப் பார்க்காமல் வெட்டி பகட்டு இன்றி வாழ்பவராக, காதலியைக் கூட்டிக்கொண்டு காபி ஷாப் பக்கம் தலை வைத்தே படுக்காதவராக தான் இருக்க வேண்டும்.

காபியை பற்றிய சில சுவாரஸ்ய ருசீகரமான தகவல்கள்!!!

ஏனெனில், காபியில் திருவள்ளுவர் பாடிய பா'க்களை விட அதிகமான வகைகள் விற்கப்பட்டு வருகிறது. அதில் மிகவும் பிரபலமான ஒன்று எஸ்ப்ரஸோ. எஸ்ப்ரஸோ பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில விஷயகள் இருக்கின்றன.....

காபி குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கப்புச்சினோ பெயர் காரணம்

கப்புச்சினோ பெயர் காரணம்

இது கபுசின் துறவிகள் (Capuchin monks) பெயரில் இருந்து வந்தது என்றும் கூறப்படுகிறது.

மெஷின் சூடு

மெஷின் சூடு

எஸ்ப்ரஸோ, மெஷினின் உதவியோடு நீர் மற்றும் நீராவியால் சூடாக்கப்பாட்டு, பிறகு அறைக்கப்படுகிறது. இதனால் அதன் அடர்த்து மிகவும் நெருக்கமாக ஆக்கப்படுகிறதாம். இது மற்ற காபி வகைகளை விட அடர்த்தியாக கிரீமியாக இருப்பதற்கு இது தான் காரணம்.

அதிக காப்ஃபைன் அளவு

அதிக காப்ஃபைன் அளவு

மற்ற வகை காபிக்களோடு ஒப்பிடுகையில் எஸ்ப்ரஸோவில் காப்ஃபைனின் அளவு அதிகமாக இருக்கிறது. எனவே, எஸ்ப்ரஸோவை விரும்பி பருகுபவர்கள் அதை குறைந்த அளவில் பருகினால் நல்லது. இல்லையேல் கண்டிப்பாக உடலுக்கு கேடு தான் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

ரிஸ்ட்ரேட்டோ (Ristretto)

ரிஸ்ட்ரேட்டோ (Ristretto)

ரிஸ்ட்ரேட்டோ என்பது எஸ்ப்ரஸோவிலிருந்து முக்கால்வாசி அவுன்ஸ் அளவு பிரித்தெடுக்கப்படுவது ஆகும். ஆனால், நிறைய பேர் இது தான் சரியான, பக்காவான எஸ்ப்ரஸோ என நம்பி வருகிறார்கள்.

காஃபே லைட்டே (Cafe Latte)

காஃபே லைட்டே (Cafe Latte)

ஒரு ஷாட் எஸ்ப்ரஸோவை 6-8 அவுன்ஸ் பதப்படுத்தப்பட்ட காய்ச்சிய பாலில் நுரைப் போங்க கலந்து குடிப்பது தான் காஃபே லைட்டே (Cafe Latte).

கஃபே அமெரிக்கனோ (Café Americano)

கஃபே அமெரிக்கனோ (Café Americano)

தண்ணீர் கலக்கப்பட்ட எஸ்ப்ரஸோவை, மெஷினில் சூடு செய்து பருகுவது தான் கஃபே அமெரிக்கனோ (Café Americano). ஒரு ஷாட் எஸ்ப்ரஸோவில் 6-8 அவுன்ஸ் நீர் கலந்து பருக வேண்டும்.

அனைவரும் விரும்பும் கப்புச்சினோ

அனைவரும் விரும்பும் கப்புச்சினோ

கப்புச்சினோ, காபி ஷாப் செல்லும் அனைவரும் விரும்பி பருகும் காபி இது. மிகவும் கிரீமியாக இருக்கும். எஸ்ப்ரஸோவை நன்கு காய்ச்சிய பாலில் கலந்து தயாரிக்கப்படுகிறது. காதலர்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறுகிறார்கள். (நம்ம ஊர்ல லவ்வர்ஸ் மட்டும் தான'ய்யா காபி ஷாப்கு போறாங்க!!!)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Everything you wanted to know about Espresso

Everything you wanted to know about Espresso.
Desktop Bottom Promotion