இரவில் நல்ல ஆழ்ந்த உறக்கத்தைப் பெற உதவும் உணவுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உங்களால் இரவில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற முடியவில்லையா? இதனால் மறுநாள் காலையில் மிகவும் சோம்பேறித்தனமாகவும், எதிலும் கவனத்தை செலுத்த முடியாத அளவும் கஷ்டப்படுகிறீர்களா? அப்படியெனில் இரவில் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும் உணவுகளை சாப்பிடுங்கள்.

நிம்மதியான தூக்கம் வேண்டுமா? அப்ப இரவில் இந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்...

அது என்னனென்ன உணவுகள் என்று கேட்கிறீர்களா? அந்த உணவுப் பட்டியலைத் தான் தமிழ் போல்ட் ஸ்கை கீழே பட்டியலிட்டுள்ளது. இந்த உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிட்டு வந்தால், உடல் களைப்புடன் இரவில் தூங்கும் போது நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு 5 அட்டகாசமான யோகாசனங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதாம்

பாதாம்

பாதாமில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது நல்ல தூக்கத்தைப் பெறவும், தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்யவும் உதவும். மேலும் இதில் உள்ள புரோட்டீன் தூக்கத்தின் போதும் இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும். எனவே இரவில் தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் 2-3 பாதாம் பருப்புகளை சாப்பிடுங்கள். முக்கியமாக இந்த பாதாம் உப்பு சேர்க்காததாக இருக்க வேண்டும்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால் பொருட்களான சீஸ், பால் மற்றும் தயிர் போன்றவற்றில் தூக்கத்தை தூண்டும் ட்ரிப்டோபேன் உள்ளது. எனவே இதனை இரவில் சாப்பிட்டால், நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, மன அழுத்தம் இல்லாமல் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

வேக வைத்த முட்டை

வேக வைத்த முட்டை

முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இதனை இரவில் சாப்பிட்டால், நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். மேலும் உங்களுக்கு உயர் கொலஸ்ட்ரால் இருந்தால், முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது.

தானியங்கள்

தானியங்கள்

சமீபத்திய ஆய்வில் தானியங்களில் சர்க்கரை குறைவாக இருப்பதால், இவை தூக்கத்தை தூண்டும். அதிலும் தானியங்கள் கொண்டு செய்யப்படும் செரில்களை தயிர் சேர்த்து சாப்பிட்டால், மூளையில் செரடோனின் நல்ல தூக்கத்தை வரவழைக்கும். எப்போது உடலில் செரடோனின் அளவு அதிகம் உள்ளதோ, அப்போது தான் மிகுந்த சோர்வை, தூக்கம் வருவது போன்ற உணர்வை பெறுவோம்.

செர்ரிப் பழங்கள்

செர்ரிப் பழங்கள்

இரவில் படுக்கும் முன் ஒரு கையளவு செர்ரிப் பழங்களை சாப்பிட்டால், இரவில் இடையூறு இல்லாத தூக்கத்தைப் பெறலாம். ஏனெனில் செர்ரிப் பழங்களில் செரரோனின் உற்பத்தியை அதிகரிக்கும் கார்போஹைட்ரேட் உள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடலாம்.

தேன்

தேன்

இரவில் 1 ஸ்பூன் தேன் சாப்பிட்டால், நல்ல தூக்கத்தைப் பெற முடியும். அதிலும் பாலுடன் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், இன்னும் நல்ல ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Foods For Deep Sleep

Eating the right food before you hit the sack could help you improve the quality of your sleep. Here are the best foods for deep sleep that'll help you do just that.
Story first published: Tuesday, May 12, 2015, 17:16 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter